உலகில் சிற்றினங்கள் நிலைத்திருப்பதற்க்கும், வேறுபாட்டின் மூலம் தகுந்த மாற்றங்களுடன் சந்ததிகள் தொடர்ந்து வாழ்வதற்க்கும் இனபெருக்கம் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது.
‘நிலைத்திருப்பதற்க்கும்' என்ற வார்த்தை முக்கியமானதாகும். ஒரு இனமானது காலம் கடந்து வாழ்பதற்க்கு இனபெருக்கம் உதவுகிறது.
உ.தா : தாய் விலங்கு இருப்பதாக வைத்து கொள்வோம். அதற்க்கு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பு அதற்க்கு வயதாகி அந்த விலங்கானது இறந்து விடுகிறது. இனபெருக்கத்தில் இந்த விலங்கானது இடுபவில்லை என்றாள். அந்த விலங்கானது இந்த பூமி பந்தில் இருந்து அழிந்து போய்விடும். பின்பு அந்த இனமே இருக்காது. இதனால் அந்த இனம் தொடர்ந்து பூமியில் இருப்பதற்க்கு இனபெருக்கத்தில் இடுபடுகின்றனர்.
சிற்றினங்கள் நிலைத்திருப்பதற்க்கும் என்றால் என்ன?
ஒரு தாவரமோ அல்லது விலங்கோ இந்த பூமியில் வாழ்வதற்க்கு மற்றொரு இனத்தை சார்ந்தே உள்ளது. இதை உயிரியல் சுழர்ச்சி என்கிறோம். உ.தா : பூவில் இருந்து தேனை எடுத்து தேனியானது வாழ்கிறது. அதே போல தேனீ தேன் எடுத்தால் தான் பூவானது காயாக மாறுகிறது. இப்படியாக இனங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்பதால் பூக்கள் இல்லை என்றால் தேனீ இனம் இல்லை. தேனீ இல்லை என்றால் அந்த செடியும் இல்லை. காய் பழமாக மாறி விதைவைத்து அந்த விதை மண்ணில் விழுந்து முளைத்தால் தானே செடி.
இப்படியாக பூமியானது தொடர்ந்து உயிர் கோளாக இருப்பதற்க்கு இனபெருக்கம் உதவுகிறது.