கடிதம்

அ
0
     அஞ்சல் என்றால் கடிதம், ஓலை என்று சொல்லுவாங்க. ஆனா என்னே கேட்டா அஞ்சல் என்பது அன்பு, பாசம், காதல், நட்பு, நினைவுகள் மற்றும் பல பரிமாற்றங்கள் என்று சொல்லிக்கிட்டே போகலாம். அஞ்சல் ஓலையில் ஆரம்பம் முதல் இன்று சமுக வலைதளங்கள் வரை பரினாம வளர்ச்சி அடைந்து இருக்கிறது. நான் இன்றைக்கு சமுக வலைதளங்களையே அதிகமாக பயன்படுத்தி வருகிறேன். அதில் முக்கியமாக புலனம் (what's app)  என்னும் செயலியை, குருச்செய்தி அனுப்புவதற்கு அதிகமாக பயன்படுத்துகிறேன். அதில் நண்பர்களுடன் அதிகம் உரையாடி இருக்கிறேன். நாங்கள் எங்கள் கல்லூரி வாழ்க்கை மற்றும் பல கருத்துக்கள் பற்றி அரட்டை அடுச்சு இருக்குறோம். நான் சும்மா இருக்கும் போது அந்த உரையாடலை எடுத்து பார்ப்பேன். அப்போது அரட்டை அடிக்கும் போது இருந்த மகிழ்ச்சி அதை திரும்ப படிக்கும் போது இருந்தது இல்லை. ஆனால்  இதற்கு மாறாக ஒன்று நடந்தது. அது தான் என் நண்பனிடம் இருந்து வந்த மின்னஞ்சல் தான் காரணம். அதில் நண்பனுக்கு மடல் என்று இனைப்பு கோப்பு (File)  ஒன்று இருந்தது. அதை திறந்து படித்ததில் எனது நண்பன் எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தான். அதில் அவனது வேலை அனுபவங்கள், கல்லூரி வாழ்க்கை, நேரம் இன்மை போன்றதை பற்றி குறிப்பிட்டு எழுதி இருந்தான். அந்த கடிதத்தில் என் நண்பன் அரம்பித்த விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. கடிதத்தில் இருந்து இரண்டு வரிகள் பின்வருமாறு "வெகு நாட்களாக இந்த மாதிரி கடுதாசி எழுத வேண்டும் என்று விருப்பம் கொண்டு இருந்தேன்" மற்றும்  "இந்த கடிதாசி முலம் உன்னுடன் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்".  நான் இந்த கடிதத்தை பலமுறை படித்து இருக்கிறேன். ஆனால் என்னவோ எனக்கு முதல் முறை படிக்கும் போது இருந்த மன கிளர்ச்சி ஒவ்வொரு முறையும் இருக்கும்.
                 முதல் முறையாக இந்த கடிதத்தை படிக்கும் போழுது இந்த சாதாரணமான கடிதத்தை என்னை அறியாமல் பதிவிரக்கம் செய்தேன். ஆனால் எனக்கு அந்த கடிதம் ஒரு சாதாரண கடிதமாக தோன்றவில்லை  என்பதே இதில் நிதசனமான உன்மை. அப்போழுதுதான் ஒன்று தோன்றியது நான் சிறுவனாக இருக்கும் போழுது என் அப்பாவுக்கு என் கைப்பட ஒரு கடிதம் எழுதினேன், என் அம்மாவின் உதவியோடு. மூன்று வருடகாலம்  கல்லூரியில் ஒன்றாய் படித்த  நண்பனின் சாதாரண கடிதம்  எனக்கு ஒரு முக்கியமான கோப்பாக இருக்கிறது.  என் கை எழுத்து அன்றைக்கு ரொம்ப மோசமாகதான் இருந்துருக்கும். என் அப்பாவுக்கு என் கைப்பட எழுதிய கடிதம் எவ்வளவு  முக்கியமான கடிதமாக இருக்கும் என்பதை என்னால் விவரிக்க முடியாமல் நிற்கின்றேன்.
இன்றைக்கு  எத்தனையோ விதவிதமான தொழில்நுட்பகள் இருக்கிறது ஒருவரை தொடர்பு கொள்வதற்கு. ஆனால் எத்தனை தொழில்நுட்பகள் இருந்தாலும் நேரில் காண்பதுபோல் மன நிறைவு இல்லை என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன்.இப்போது ஒருவர் நினைப்பு வந்ததும் உடனே அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவிடலாம்.
ஆனால் பல வருடங்களுக்கு முன் தொலைவில் இருப்பவர்களை கடிதம் வழியாக மட்டுமே பேச இயலும் மற்றும் கற்ப்பனையால் மட்டுமே கான இயலும். நெடுந் தொலைவில் இருப்பவர்களுக்கு  கடிதம் போய் சேர ஒரு வாரகாலம் அதற்கு மேல் கூட ஆகலாம்.  நாம் ஒரு தகவல் எழுதி அனுப்பினால் அந்த காரியம் முழுமையாக முடிந்த பிறகே அந்த தகவல் போகி சேரும் என்றால் பாத்துக்குங்க. கடிதம் எழுதிட்டு அந்த கடிதத்துக்கு பதில் கடிதம் வரும் வரை  மனசு எவ்வளவு பாடு படும் என்பதை இன்றை தலைமுறை அறிவாய்பு  இல்லை. பதில் கடிதம்  வர காலம் தாமதம்மானால் இங்கு கடிதம் எழுதியவர் நிலை தின்டாட்டம் தான். கடிதம் எழுதியவரின்  மன நிலை எப்படி இருக்கும் என்றால்  கடிதம் போச்சோ போகளையோ பையன்  நல்லா இருக்கிறான இல்லையோ உடம்புக்கு எதுவும் முடியாம இருக்கிறானா அதனாலே பையன் பதில் கடிதம் போடலையா என்று இங்கு இருப்பவர் பித்து பிடித்தார் போல் இருப்பார்கள். பதில் கடிதம் வந்த பிறகு தான் அவர்களுக்கு ஒருவாறு மன நிம்மதி அடைவார்கள். திருமணம் ஆன பல கணவர்மார்கள்  தன் குடும்ப எதிர்கால நலனுக்காக வேலைக்கு நெடுந்தூரம்  சென்று பணிபுரிவார்கள். அவர் தன் மனைவி பிள்ளைகளுடன் உறையாட ஒரே வழி கடிதம் மட்டுமே.
    அந்த கடிதம் எத்தனை உணர்வுகளை  தாங்கி வருகிறது என்று அந்த கடிதத்துக்கும் தெரியாது அந்த கடிதத்தை எடுத்து வரும் தபால்காரர்கும் (Postman)  தெரியாது. அந்த  உணர்வுகளை புரிந்து கொள்ள அவர் மனைவியால் மட்டுமே முடியும். அந்த கடிதத்தை படிக்கும்போது  அவர் கணவருடன் ஒன்றாக அமர்ந்து கொண்டு இருவரும் உரையாடுவது போல்  உணர்வார்கள். அந்த கடிதம் தாம்  அவர்களுக்கு ஒரே ஆறுதல். அவர் கணவர் நினைவு வரும் பொழுதேல்லாம்  அந்த கடிதத்தை  திரும்ப திரும்ப படித்து மகிழ்வார்கள். இருவரும் தூரமாக இருந்தாலும் கூட அவர்கள் மனம் என்னவோ ஒன்றாகவே இருக்கும்.  அதை கடிதம் வாயிலாக இருவரும் பகிர்ந்து கொள்ளவார்கள். அந்த கடிதங்களை படிக்கும் போது  எழுதியவர் என்ன மன நிலையில் இருக்கிறார் என்று நம்மால் கற்பனையில் காண இயலும்.
கணவன் மனைவி ஒரு பக்கம் இருக்கட்டும் காதலர்கள்  கடிதத்தை தான் அவர்களது பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தினார்கள். பலர் காதல் வளர காதல் ஒன்று சேர கடிதம் தான் உறுதுணையாக இருந்தது. கடிதம் தான் அவர்கள் காதலை வெளிபடுத்த ஒரே வாய்ப்பு. பலர் இன்று வரையும்  காதலில் வென்றாலும் இல்லை தோற்றாலும் காதல் கடிதங்களை பொக்கிசம்போல் பாதுகக்கின்றனர். காதல் கடிதங்கள் எத்தனை வருடங்கள் கழித்து படித்தாலும்  படிப்பதற்கு மிண்டும் மிண்டும் படிக்க  ஆவலாகவே இருக்கும்.
 காதல் கடிதங்கள் மட்டும் அல்ல நம் பிரியமானவர்களிடம் இருந்து பெற்று கொண்ட கடிதம் அனைத்துமே  சுவையான நினைவுகள் மட்டுமே தரும். முதுமை காலத்தில்  இந்த கடிதங்களை படிக்கும் போழுது நம் இளம் வயதில் செய்த சாகசங்கள் அந்த கடிதத்தை பெற நாம் பட்ட பாடு அனைத்துமே நினைவுக்கு வரும். அந்த நினைவுகளே நமக்கு பல மடங்கு தைரியத்தை தரும். நாம் மன சோர்வோடு இருக்கும் போது நம் பிரியமானவர் அனுப்பிய கடிதங்களை படிக்கும் போது மனம் தனி மகிழ்ச்சி அடையும். எனவே நண்பர்ளே நண்பர்களுக்காவது   மின்னஞ்சல் மூலம் மாவது  கடிதங்களை அனுப்பி மகிழ்வோம். இன்றைக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றாலும் நாளை நமக்கு நினைவுகளை சேகரித்து தரும் என்பதில் எள் அளவு கூட  மாற்றம் இல்லை.
                       
                                                                                                                   இப்படிக்கு,
                                                                                                                          கோ

                குறிப்பு:     இது எனது மனதில் சிறிது  நேரம்  உதயமான கருத்துகள் மட்டுமே. இந்த கருத்துகள் உங்கள் மனதையும், கருத்தையும் புண்படுத்தினால் என் கருத்துக்களை மறந்துவிடவும்.
           

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*