கவனிக்காமல் விட்டுவிட்டேன்

கிசோர் கவி
சனி கிழமை பள்ளி கூடத்திற்க்கு  விடுமுறை விட்டுபுட்டாங்க அதனால் பேருந்து நிறுத்தத்தில் எந்த மக்கள் கூட்டமும் இல்லாமல் வெறுமையா இருந்தது.

கிராமபுரம் என்பதால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுற்றிமுற்றி பார்த்து கண் குளிர, இயற்கை அழகு நிறையவே இருக்கும். அதோடு, இது கார்த்திகை மாதம் என்பதால் நெல் நடுவு நிகழ்வுகளையும் பார்க்கலாம்.

பேருந்து நிறுத்தத்திற்க்கு முன்பு ஒரு வயலில் வேலை நடந்து கொண்டு இருந்தது. நெல் நடவு வேலை தான். இங்கு ஆச்சரியம் என்ன என்றால் ஒரே ஒரு பெண்மணி மட்டும் தான் வேலை பார்த்து கொண்டு இருந்தாள். வயல் கரையில் ஒருவர் நின்று கொண்டு அந்த பெண்டிடம் எதையோ சொல்லி கொண்டு இருந்தார். 

யம்மா! உன்ன ஒரு அஞ்சி ஆட்களை கூட்டிட்டு வர சொன்னா, நீ மட்டும் தனியா வந்திருக்க நான் இன்னைக்கே இந்த வேலையை முடிச்சிரலானு நினைச்சேன். இப்படி பன்னிட்டியேமா!! 
அட சும்மா இரும், உமக்கு இன்னைக்குள்ள முடிக்கனும் அவ்வளவு தான. நான் முடிச்சி தாரேன். 

இப்படி வயல்ல நடந்ததை அந்த அமைதியான சுழலில் கேட்டு கொண்டு நிழல் குடையின் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தேன். 

இந்த இயற்க்கை ஒட்டத்தில் நான் தனியாக அமைதியாக இருக்க என் நினைவு என்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கற்ப்பனை உலகத்திற்க்குள் நுழைந்து விட்டேன். எவ்வளவு நேரம் அந்த உலகம் என்னை பிடித்து வைத்திருந்ததோ தெரியவில்லை. ஆனால் அந்த உலகத்தை விட்டு வெளியே வந்த நேரமும் என்னுடைய பேருந்தை கவனியாமல் விட்ட நேரமும் ஒரே சமநிலையில் நடந்து முடிந்தது. சரி இனி என்ன பன்ன மறுபடியும் இயற்கையோடு இனைய வேண்டியது தான். ஆனால் இந்த முறை கவனமாக இருக்க வேண்டும்.