கதாநாயகன் அவதார் ஆங்

கிசோர் கவி
0
அவதார் ஆங் 


ஆங், கதையின் கதாநாயகன். காற்று இனத்தான் மற்றும் மத நம்பிக்கை கொண்ட கதாபாத்திரம். 

காற்று இன மக்களை புத்தரை பின்பற்றும்  காதாபாத்திரமாக உருவாக்கபட்டு இருக்கிறது. அவதார் கதையின் படி இந்த மக்களை நெருப்பு இனத்தவர்களின் தலைவன் தன் நெருப்பு படை கொண்டு அழித்து விடுகிறான் இதில் ஆங் மட்டும் தப்பிவிடுகிறான் அதனால் ஆங்யை கடைசி காற்று வளையாளன் என்று அழைக்கபடுகிறான்.  
இந்த இடத்தில் சக்தி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் வளைவு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். ஏன் என்றால் கதையில் காற்று, நீர், நிலம், நெருப்பை கட்டுபடுத்துவதை சக்தி என்று கூற முடியவுல்லை. அது அந்த மக்களின் கலையாக மையப்படுத்துவதால் அதை வளைவு என்று கூறுகிறேன். ஆங்கிலத்தில் அதை “bending “ என்று கூறுவதால் அதற்க்கு தமிழ் அர்த்தமான வளைவையே தமிழுக்கு பயன் படுத்துகிறேன்.

தொடரின் இறுதி பகுதியில் நெருப்பு இன தலைவன்னை பற்றி ஆங் கூறும் வசனம் வியக்கும் படி இருந்தது. 
நெருப்பு இனத்தவரே அனைத்தையும் ஆள வேண்டும் என நெருப்பு தலைவன் எண்ணம் கொண்டு அதற்க்காக மற்ற இனத்தவரை முற்றிலுமாக அழித்துவிட எண்ணி படைகளை திரட்டி கொண்டு நின்றான். இந்த படையெடுப்பை தடு்த்து நிறுத்து என அவதார் ஆங்கை எல்லாரும் கேட்டு கொண்டனர் ஆனால் அவதார் ஆங் இதற்க்கு நான் இன்னமும் தயாராகவில்லை என மறுமொழி கூறி வந்தான். ஏன் என்றால் இந்த பிரட்ச்சனைக்கு முடிவு நெருப்பு தலைவனை கொல்வதே தீர்வு என எல்லாரும் சொல்லி வந்தனர். ஆனால் ஆங் நெருப்பு தலைவனை கொல்லுவதை விரும்பவில்லை இதனால் மனகுழப்பம் அடைந்த ஆங் நண்பர்களிடம் இவ்வாறு கூறினான். 

நான் எப்படி நெருப்பு தலைவனை கொல்வேன்? அவர் என்னை விட வயதில் மூத்தவர், மிகுந்த மரியாதைக்குரிய பொருப்பில் வகிப்பவர் அதோடு ஒருவனை கொல்லுவது என்னுடைய நம்பிக்கைக்கு எதிரானது. இதனால் நான் எப்படி தீர்வு கான்பேன்.  என தன் நண்பர்களிடம் கூறும் போது. அப்படியே உம்பெல்லாம் புல்லரித்து விட்டது. 

இதே போல மற்றொரு சம்பவம் ஒன்று  ஆங்கை மேலும் விரும்ப வைத்தது. “கட்டாரா” இவள் ஒருமுறை தன் அம்மாவை கொன்றவனை பழிவாங்க செல்வாள் இதை விரும்பாத ஆங் அவளிடம் சொலும் அறிவுரை சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. 
எல்லாவற்றையும் மறந்துவிடு அவனை மன்னித்துவிடு. பழிக்கு பழி வாங்குவது ஒரு அர்த்தமற்ற செயல் அது மனிதனுக்கு அழகான தன்மையா இருக்காது. இந்த வசனம் அந்த நேரத்தில் கொஞ்சம் நேரம் அமைதியில் ஆழ்த்தியது. 

அவதார் ஆங் என்றவுடன் இந்த காட்சிகளை சொல்லாமல் இருக்க முடியாது. 

தொடர்ந்து படியுங்கள் .

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*