வெள்ளை மோகம்

கிசோர் கவி
0
வெள்ளையை கண்டால் மோகம் ஏதோ ஒரு வடிவத்தில் வந்துவிடுகிறது அது வெள்ளை காக்காவாக இருக்கலாம் வெள்ளை பன்றியாக இருக்கலாம் மற்றும் வெள்ளை யானை, புலியாகவும் இருக்கலாம் நமக்கு ஏதோ ஒரு வடிவத்தில் வெள்ளை மீது மோகம் இருக்கதான் செய்கிறது. இதை மோகம் என்று சொல்ல முடியாது. கருப்பாகவே எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அந்த இனத்தில் வேறு ஒரு நிறத்தில் காக்காவோ யானையோ இருந்தால் அதையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது. சிறுவயதில் என்னை ஏமாத்த "அங்க பாரு வெள்ளை காக்கா போகுது" என்று ஏமாத்தியவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து தான் போயிருக்கேன். இது வரை பார்த்திராத ஒன்றை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தான் அது. 
நண்பனும் நானும் பேசி கொண்டு இருக்கும் போது வெள்ளை புலிகளை பற்றி சொன்னான். அதாவது வெள்ளை புலி என்று ஒரு இனமே கிடையாது. புலி இனத்தில் எப்போதாவது ஒரு சில குட்டிகள் வெள்ளை நிறத்தில் பிறக்கின்றனர் என்று சொன்னான். மேலும் எப்போதாவது நிகழ்வதை சிலர் தங்களுடைய சுய லாபத்திற்க்காக புலிகளை வெள்ளை நிற குட்டிகளை ஈன்றெடுக்க செய்கிறார்கள். அது எப்படி என்று கேட்கலாம் இயற்க்கையாகவே புலிகள் தங்களோடு பிறந்த தன் சகோதரி புலிகளுடன் இனபெறுக்கத்தில் ஈடுபெறுவதில்லை ஆனால் வெள்ளை புலிகளை பெறுவதற்க்கு அப்படி செயற்க்கையாக கட்டாயபடுத்தபடுகிறது என்று நண்பன் கூறினான். அது ஆர்வமாகவும் வியப்பாகவும் இருந்தது. 
ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில், ஏன் நீங்கள் வெள்ளை பெண்களை தேடுகிறிர்கள் என்ற கேட்ட கேள்விக்கு ஒருவர் இவ்வாறாக பதில் அளித்தார். நான் கருப்பு ஒரு வேலை என் மனைவி வெள்ளையாக இருந்தால் பிள்ளைகள் வெள்ளையாக பிறக்கும் அல்லவா என்றார். 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*