சமீபத்திய காலங்களில் உடையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. வித விதமாக பல வண்ணங்களில் கிடைக்கின்றனர். அதில் குறிப்பிட்ட உடைகளை போடுவதற்க்கு பதிலாக போடாமலே இருக்கலாம் என்று சொல்ல கூடிய அளவுக்கு உடைகளில் மாற்றங்கள் வந்துவிட்டது. நண்பனிடம் பேசி கொண்டு இருக்கும் போது நண்பன் சொன்னான் பல கடற்கரையில் மக்கள் நிர்வாணமாக சுத்துவார்கள் என்று. பல படத்தில் பார்த்ததுண்டு கடற்கரையில் அறை குறை ஆடைகளை அணிந்து கொண்டு காற்று வாங்குவார்கள் ஆனால் நண்பன் சொன்னது வியப்பாக இருந்தது நான் இதை முதல் தடவை கேட்டதால் வியப்பாக இருந்தது. இந்த விசயத்தை தாமதமாகவே அறிந்து கொள்கிறேன் என்றேன் நண்பனிடம். ஆனால் இதில் வியப்படைய ஒன்றுமே இல்லை ஆரம்பத்தில் என்னடா இந்த சமூதாயம் இப்படி மாறிவிட்டதே என்ற வெறுப்பு இருந்தது ஆனால் இப்போது இல்லை ஏன் என்றால் இது மனித சமூதாயம் உருவானதில் இருந்தே இருந்ததினால் என் மனதை தேற்றிக்கொண்டேன்.
முதலாவதாக புனித புத்தகத்தில் வரும் ஆதாம் ஏவாள் கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான் அதில் பழத்தை உன்பதற்க்கு முன் அவர்கள் உடை உடுத்தி கொள்ளாமல் நிர்வாணமாக தான் இருந்தார்கள் ஆனால் அதை பற்றி அவர்கள் கவலை கொள்ளவே இல்லை. எப்போது பழத்தை சாப்பிட்டார்களோ அப்போது தான் தாங்கள் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதை அறிந்து கொண்டார்கள். எனக்கு தெரிந்து இதன் காரனமாகவே மக்கள் நாம் மீண்டும் பழத்தை உன்பதற்க்கு முன் இருந்த வாழ்க்கைக்கு திரும்புவோம் என்று நினைத்து கடற்கரை ஓரமாக நிர்வாணமாக சுத்தலாம்.
இரண்டாவதாக ஆதி மனிதன் குரங்கில் இருந்து பரினாம வளர்ச்சி பெற்று இப்போது மனித சமூதாயமாக சுற்றி கொண்டு இருக்கிறோம் என்று பள்ளி கூடத்தில் படித்து இருப்போம். அப்போ அவர்கள் உடை உடுத்தி இருக்க மாட்டார்கள் பிற்க்காலத்தில் நாகரிகம் வளர்ந்த பின்பு உடை உடுத்துவதை எற்படுத்தி கொண்டார்கள். நாமும் ஒரு விலங்கு கூட்டம் தான் என்று படிப்பின் மூலம் அறிந்து கொண்டு விலங்கு போல மீண்டும் வாழுவோம் என்ற எண்ணத்திற்க்குள் வந்துவிட்டோம். இப்போ தொலைகாட்சியில் கூட காடுகளில் நிர்வாணமாக அழைந்து பழங்குடிகள் போல் வாழ்ந்து அதை படம் பிடித்து காட்டுகின்றனர்.
ஏது எப்படியோ வருங்காலங்களில் இன்னும் பல மாற்றங்களை கானப்போகிறோம் என்பதே உண்மை.
ஆசிரியர், கவி