முத்தின அவரைக்காய் என்பது இளம் அவரைக்காய்க்கு அடுத்த கட்டமாகும். காய் பிஞ்சி வைத்து பின் நான்காம் நாள் காய்களை இளம் காய் என்று அழைக்கிறோம். இந்த கட்டம் தான் சமைப்பதற்க்கு சரியான நிலை மற்றும் அறுவடைக்கு ஏற்ற காய். மூன்றாம் நாளில் இருந்து ஐந்தாம் நாள் காய் வரை உள்ள காய்கள் அறுவடைக்கு ஏற்றவை. ஆறாம் நாளைக்கு மேல் உள்ள காய் முத்தின காய் என்று அழைக்கிறோம் இந்த அவரைக்காயில் கொட்டை வைத்து இருக்கும் அதாவது கொட்டை பெரியதாக இருக்கும். வெளித்தோல் பகுதியானது சமைப்பதற்க்கு ஏற்ற தகுதியினை இழந்து விடும் அதாவது தோல் ஆனது வழுத்துவிடும். இந்த நிலை காய்கள் சந்தைக்கு ஏற்றவை அல்ல ஆனால் இதன் கொட்டையை அதாவது விதையை அவித்து சாப்பிடலாம். மோட்சை கொட்டை போன்றது சராசரியாக அதே போல தான் இருக்கும் சுவை மட்டும் மாறுபடும். இந்த முத்தின காய்களை சந்தையில் வாங்கமாட்டாகள் ஏன் என்றால் மக்கள் இதை வாங்க விருப்பம் தெரிவிப்பது இல்லை ஒரு வேலை மக்கள் இதை வாங்க ஆரம்பித்தால் இதையும் சந்தையில் விற்க்கலாம். இளம் சிவப்பு விதை எட்டாம் நாளுக்கு மேலே உள்ள விதைகள். பச்சை விதை ஆறாம் நாள் முதல் எட்டாம் நாள் விதைகள்.
முத்தின அவரைக்காய்
முத்தின அவரைக்காய் விதை
இளம் அவரைக்காய்
இதை கானோலியில் பார்க்க https://youtu.be/9hD3Ati8-2k