கவிதை எண் 3 : பொதுமை வேண்டும்! புதுமை வேண்டும்.

கிசோர் கவி
0
ஏழை  என்றும்  செல்வன்  என்றும்
எங்கு பிறந்தனர் ?
வாழ  வந்த  மக்களுக்குள்
வருத்தம்  ஏனடா ?

நல்ல  மனத்தில்  நச்சு  கலந்து
நாச  மாக்கினர் !
குள்ள  நெஞ்சம்  கொடுத்த  வஞ்சம்
கூச  வில்லையா ?

மாந்த  நேயம்  மறுக்கும்  போது
மாசு  சூழ்ந்திடும் !
வீழ்ந்த  வாழ்வை  மேன்மை  யாக்க
விளக்கம்  என்னடா ?

காட்டில்  விலங்கு  காண்ப  தில்லை
சாதித்  தொல்லையே !
நாட்டில்  உள்ள  நண்பர்க்குள் ஏன்
நலிவுச்  சாதியே ?

பொதுமை  வேண்டும்  புதுமை  வேண்டும்
மக்கள்  நடுவிலே !
எதையும்  சொந்தம்  என்று  சொல்லும்
இழிவைத்  தள்ளுவோம் !

காற்றும்  ஊற்றும்  எனக்கும்  உனக்கும்
சொந்த  மல்லவா ?
நேற்றை  மறப்போம்  நாளை  எண்ணி
நினைத்து  வாழுவோம்.

கேசவன் கவிதைகள் 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*