வயல்வெளியில் ஒரு சந்திப்பு

கிசோர் கவி
நேற்றே முடித்து இருக்க வேண்டிய வேலை. இன்னைக்கு பட்டணம் வரைக்கும் போய்ட்டு வரலானு இருந்தேன். நேற்று, நேரம் கெட்ட நேரத்தில் கழப்பையில் இருந்த கொலுவு உருவிவிட்டது. அதை சரி செய்யவே சாயாங்காலம் ஆகிவிட்டது. இன்னைக்கு அந்த குறை வயலையும் உழுது போட்டு வந்துடுதேன். என்று கூறி கொண்டே வயல் பக்கம் போனார் கிழவன் ஞானமணி. 

உச்சி வெயில் வருவதற்க்குள் வேலையை முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வயலுக்கு வந்த உடனையே வயலை உழ ஆரம்பித்துவிட்டார். மேல் சட்டையையும் வேட்டியையும் வழக்கமான இடத்தில் வைக்காமல் வயல் கரையில் உள்ள புட்களுக்கு இடையில் ஒரு இடத்தில் வைத்துவிட்டார். 

உடல் உழைப்பினாலும் பகல் வெயில் தாக்கதாலும் கிழவன் உடம்பில் வியர்வையானது கீழே விழுந்து கிடக்கும் பனைமட்டையில் பனிந்த பனி போல இருக்கும். அந்த வெயிலில் கோமனத்தோடு கிழவன் வயலை உழும் காட்டியை பார்த்தால், உரம் ஏறி போயிருந்த அந்த கிழவனை வீர கிழவன் என்றே கூறலாம். 

ஒரு பத்து பதினொரு மணி இருக்கும் வயல் கரையோரம் உள்ள பாதையில் கூட்டமாக மக்கள் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள். இதை பார்த்த கிழவன் என்ன ஏது என்று விசாரிக்க பக்கத்து வயல் கிழவனிடம் கேட்க சென்றான். போன இடத்தில் இவர்கள் ஒரு கூட்டமாக சேர்ந்துவிட்டார்கள். 

கூட்டமாக வந்துகொண்டு இருந்தவர்களில் மக்களின் தலைவனாக பிரதிபலித்த மதிப்புக்குரிய ஒருவர் இவர்களை கண்டு இவர்களோடு பேச வந்தார். சிறிது நேரம் பேசின பின்பு அவர் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அந்த மரியாதைக்குரிய பாதயாத்திரையின் தலைவன் திடிரென்று என் தேசத்தில் ஏழ்மை என்று மாறுகிறதோ அன்று தான். நான் மேல் சட்டை போட்டுகொள்வேன் என்று கூறி தன்னுடைய மேல் சட்டையை கழற்றி கீழே வைத்தார். இங்க இப்படி இருக்க வயல்வெளியில் கிழவன்களின் மாநாட்டில் ஒரு சத்தம். 

இந்த பெரிய மனிதர் திடிரென்று வந்துவிட்டாரு. கொஞ்சம் முன்பே தெரிந்து இருந்தால் வாய்கால்ல இருந்த என் சட்டையை அணிந்துகொண்டு வந்திருப்பேன். அந்த மனுசனை கோமனத்தோடு பாக்கவேண்டியதாயிற்றே என்றார் கிழவன் ஞானமணி. 

ர. கிசோர் கவி