பேருந்தில் பார்த்த ஒரு மதுரை பெண்

கிசோர் கவி
ஒரு முறை திருச்சியில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தேன். சன்னல் ஓரம் இடம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, முதல் ஆளாக சென்று அந்த இடத்தை திருச்சியில் வண்டி ஏறும் போது பிடித்தேன். நான்கு மணி இருக்கும் வண்டி ஏறும் போது. அந்த குளிர்ந்த நேரத்தில் பேருந்து கட்டணம் வாங்கிய பின்பு என்ன சோலி கழுதை கிடக்கு நமக்கு ஒரு அருமையான தூக்கம். ஆனால் அந்த தூக்கத்திற்க்கு முன்பு ஒரு நிகழ்வும் பின்பு ஒரு நிகழ்வும் நடந்தது. ஆற்றல் பேறாற்றல் ஆன நிகழ்வு. 
எனக்கு முன் இருக்கைக்கு முன் இருக்கையில் என்னை போலவே பெண் ஒருத்தி சன்னல் இருக்கையை அவள் சகோதரியிடம் சன்டை போட்டு அந்த இருக்கையை பிடித்தாள். பேருந்து வேகத்தால் சன்னல் வழியாக சத்தம் போட்டு கொண்டே  அவள் முகத்தில் காற்றானது பட்டு சிதறியது. அந்த பெண் இந்த காற்றை ரசித்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு வேலையிலும் அவளது முடியானது பொறாமை கொண்டு அவளது கண்களின் குறுக்கே அடிக்கடி வந்து போய் கொண்டு இருந்தது. அதை அவ்வப்போது அவள் தன் வலது கைகளால் எடுத்து வலது காதோரமாக எடுவிடுவாள். சில நேரம் முடியை மொத்தமாக வாரி வலது காதோரமாக பிடித்து வைத்து கொள்ளுவாள். இருவரும் சன்னல் ஓரமாய் இருந்ததால் இந்த காட்சிகள் ஒரு நொடி இரு நொடி காட்சியாக அவ்வப்போது கண்ணில் பட்டது. சிறிது நேரத்திற்க்கு பின்பு  நான் நல்ல தூக்கநிலைக்கு சென்றுவிட்டேன். 
மதுரை மாட்டுத்தாவணி, புரட்சி தலைவர் பெயரில் இருக்கும் பேருந்து நிலையத்திற்க்கு பேருந்து வந்தடைய ஒரு மணி நேரம் ஆகும் என்ற நேரத்தில் அடி விழுகின்ற சத்தம் ஒன்று கேட்டு முழித்து பார்த்தேன். எனக்கு முன் வருசைக்கு முன் வருசையில் இருந்த சன்னல் ஒர பெண் எனக்கு முன் வருசையில் இருந்த அதாவது அந்த பெண்னுக்கு பின் வருசையில் இருந்த ஒருவனை அந்த பெண் புரட்டி எடுத்து கொண்டு இருந்தாள். பெரும்பாலான அடிகள் தலையிலேயே விழுந்தது. சிறிது நேரம் கழித்து விசயம் புரிந்தது. எனக்கு முன் இருக்கையில் இருந்தவன் அந்த பெண்ணின் இடுப்பை தொட்டு இருக்கிறான். இதனால் கோபம் கொண்டு எழுந்த அந்த பெண் அவனை தனி ஆளாக போட்டு புரட்டி எடுத்துவிட்டாள். அதற்கு பின்பு அவள் சகோதரியும் புரட்டி எடுக்க வண்டியை ஓட்டுநர் நிறுத்த அடி வாங்கியவன் என்ன செய்வதென்று தெரியாமல் கண்கள் பிதுங்கி நின்றான். 
இந்த மாதிரியான நிகழ்வினை படத்தில் அல்லது பேச்சுகள் மூலமாகதான் தெரிந்து வைத்திருத்தேன். முதல் முறை நேரடியாக அந்த நிகழ்வினை பார்த்தேன். அந்த நேரத்தில் எந்தன் மன ஒட்டத்தில்  ஓடியவை “ஆற்றல் பேறாற்றலாக மாறி நிற்க்கிறது.” 
 
கிசோர் கவி ர