காலேப் -முதலாவது அத்தியாயம் -பன்னையார் வயல்

கிசோர் கவி
0
காலேப்

முதலாவது அத்தியாயம்

 பன்னையார் வயல் 

காலேப் கல்லூரியில் படித்து வருகிறான். கல்லூரியில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் முடிந்து இது நான்காம் ஆண்டு. இவன் கல்லூரி முடிந்த பின்பு ஒரு கடையில் தினமும் இரண்டு மணி நேரம் வேலை செய்வான். காலேப் மனசுல எப்பொழுதும் ஒரு எண்ணம்; கழுதை வயது ஆகுது இன்னும் அப்பா, அம்மா கிட்ட செலவுக்கு பணம் எதற்கு வாங்க வேண்டும் என்று. காலேப் தன் வழக்கமான வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு போய்கொண்டு இருந்தான். அன்று இவனுடன் கல்லூரியில் படிக்கும் லதா கல்லூரி பேருந்து நிலையத்தில் தனியாக நின்றுகொண்டு இருந்தாள். காலேப் அவள் பேருந்தில் ஏறும் வரை அவளுக்கு துணையாக நின்றுகொண்டு இருந்தான். பேருந்து வரும் வரை இருவரும் பேசி கொண்டு இருந்தனர். சாலையில் போய்கொண்டு இருப்பவர்களில் ஒருவன் இவர்கள் பேசுவதை பார்த்துவிட்டு, நாடு எப்படி உருப்பட போகுதோ? இதுங்கள நாம கல்லூரிக்கு படிக்க அனுப்புனா படிக்காமல் ஊர் சுத்திகிட்டு கத்தரிக்காய் பண்னிகிட்டு திரியிது என்று மனசுக்குள்ளே முனுமுனுத்தான். லதா பேருந்தில் எறி போன பின்பு இவன் தன் மிதிவண்டியில் வீட்டுக்கு போய்விட்டான்.

காலேப் அப்பா வீடு கட்டும் தொழில் செய்பவர், அம்மா பீடி தயாரிக்கும் தொழில் செய்பவர். காலேப் நேரம் கிடைக்கும் போதும், கல்லூரி விடுமுறையின் போதும் எதாவது வேலைக்கு போய்விடுவான். அதின் மூலம் வரும் பணத்தை அம்மாவிடம் கொடுத்துவி்ட்டு தேவைபடும்போது வாங்கி கொள்வான்.

அன்று இரவு அவனுக்கு தூக்கம் வரவில்லை , எப்போதும் இரவு நடுசாமத்துக்கு மேல் தூங்கி தூங்கி ஒரு சில நாள் இப்படிதான் தூக்கம் வராமல் காலை ஐந்து மணி வரை ஆந்தை மாதிரி வானத்தை பாத்துகிட்டு முழித்து கிடப்பான். அந்த நேரத்தில் வருங்காலத்தை பற்றி யோசிப்பான், அன்று காலை பார்த்த சம்பவங்களை தன்னுடைய கற்ப்பனை சக்தியால் புது விதமாக ஒளி ஒலி படமாக யோசித்து ரசனை செய்வான். அப்படி யோசிக்கும் போது சந்தியா நேரத்தில் பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் நியாபகத்திற்க்கு வந்தது அதே நேரத்தில் நானும் அந்த பொன்னும் தனியா நின்று பேசுவதை யாராவது பார்த்துவிட்டு ஏதாவது தப்பா நினைத்து இருப்பாங்களோ என்று மனசுக்குள்ளே ஒரு எண்ணம். சரி மனச போட்டு எதற்க்கு குழப்பி கொண்டு இருக்கோம் தூங்க முயற்சி செய்வோம் என்று காலை ஐந்து மணி வரை அந்த சம்பவத்தை திரும்ப திரும்ப நினைத்து கொண்டே தூங்கிவிட்டான்.

ஏலே காலேப்பு மணி எத்தனை தெரியும்மா; எட்டு மணி ஆகுது இன்னும் தூங்கிடே இருக்க எழுத்து போய் பல்லை துலக்குர வழிய பாரு. இந்த சத்தம் கேட்ட பின்புதான் காலேப் தூக்கத்தை விட்டு எழுந்தான். அன்று சனி கிழமை மதிய நேரம் சாப்பாட்டை தூக்கு சட்டியில் வாங்கி கொண்டு சொக்கலிங்கம் ஐயா வயல் வேலைக்கு சென்றான்.

சொக்கலிங்கம் என்பவர் அந்த ஊர்லே கொஞ்சம் பெரிய ஆளு. அவருக்கு பதிணெட்டு ஏக்கர் நிலம் இருக்கிறது அது போக மாடு, ஆடு, கோழின்னு தனி. அவரை எல்லாரும் பன்னையார் என்று அழைப்பது வழக்கம் சொக்கலிங்கம் ஐயாவுக்கு வயல் வேலைக்கு எப்போதும் ஆட்கள் தேவை. காலேப் சனி, ஞாயிறு இரண்டு நாளும் ஐயா வயலில்தான் வேலை. அன்று நெல் அறுவடை செய்யும் நாள் அதான் ஒரு பத்து ஆட்களை வேலைக்கு கூப்பிட்டாரு. அதனால் காலேப் காலங்காத்தால வயலுக்கு வந்து விட்டான் காலேப் வயலுக்கு வந்த உடனே வேலையை ஆரம்பித்து விட்டான் கதிர் அறுக்க வண்டி வருவதால் வயலுக்கு போய் வரப்பு அருகில் இருக்கிற பயிர்யை அருத்து வயலின் நடுவில் போட்டான். எதற்க்கு என்றால் கதிர் அறுக்கும் வண்டியால் வரப்பு அருகில் உள்ளதை அறுக்க முடியாது. வண்டி வருவதற்க்குள் எல்லா வயலிலும் பத்து பேரும் சேர்ந்து வரப்பு அருகில் இருக்கிற பயிர்யை அருத்து வயலின் நடுவில் போட்டார்கள். சொக்கலிங்கம் இவர்களை வேலை செய்ய சொல்லிவிட்டு வீட்டுக்கு போய்விட்டார் இரண்டு மணி நேரத்திற்க்கு ஒரு முறை வந்து வேலை சரியாக நடக்கிறதா என்று பார்த்துவிட்டு செல்லுவார்.

சொக்கலிங்கம் ஐயா வயலில் வேலை பார்த்து காலேப் பார்த்ததே இல்லை இதை பற்றி அன்று தன்னுடன் வேலை பார்க்கும் சுந்தரிடம் கேட்டான். சுந்தர் காலேப் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் சுந்தரின் சாரம் கொஞ்சம் காலேப்புக்குள் புகுந்ததால் தான் சும்மா இருக்கும் நாட்களில் ஏதாவது வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. சுந்தர் பன்னையார் வயலில் ஒரு வருடமாக சனி, ஞாயிறு இரண்டு நாளும் வேலை செய்து கொண்டு வருகிறான். சுந்தர் மூலமாக தான் காலேப் பன்னையார் வீட்டுக்கு வேலைக்கு வந்தான். காலேப் வந்து இரண்டு மாதம்தான் ஆகும் இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டான்.
சுந்தர் காலேப்ப பார்த்து, உன்னுடைய பொன்னான வாய முடிகிட்டு வேலையை பாரு வந்து ஒரு வருசம் முழுசா ஆகல கேள்வி கேக்கிறான்! நீ கிணற்று பக்கத்துல நெல்லு சாக்கு இருக்கும் அத எடுத்துட்டுவா என்று அவனை அனுப்பி விட்டான். அறுவடைக்கு வந்த வண்டி ஒரு ஏக்கர் நிலத்தில் பாதி கதிர்களை அறுத்துவிட்டது. காலேப் நெல்லு சாக்கும், தார்பாய்களையும் எடுத்து கொண்டு வந்து கதிர் அறுத்த இடத்தில் தார்ப்பாய்யை விரித்தான். கதிர் அறுக்கும் வண்டியானது பார்ப்பதற்கு இரண்டு மாடி கட்டிடம் போல் இருக்கும் அது தன்னுடைய முன்பக்க சுலலும் அமைப்பினால் தனக்குள் இழுத்து தன்னுடைய கூரிய கத்தி போன்ற பற்க்கலால் நெல் கதிரை அறுத்தது. அறுத்த கதிர்களை வண்டியின் மேல் பகுதியில் உள்ள தொட்டியில் சேர்த்து வைக்கும் இந்த தொட்டியின் அடி பகுதியில் உள்ள குழாய்யை திறந்து விட்டால் அதன் வழியாக நெல்மணி தொட்டியை விட்டு வெளியேறி கீழே வந்து விழும். கதிர் அறுக்கும் வண்டி இப்போது குழாய்யை திறந்து விட்டது அது தண்ணீர் குழாய்யில் இருந்து வெளியேறுவது போல கீழே விரிக்கபட்ட தார்ப்பாயில் விழந்தது. விழுந்து கொண்டு இருந்த நெல்மணியை காலேப்பும் சுந்தரும் சாக்கு பையில் சேகரித்து மூட்டையாக கட்டி வயலின் ஒரத்தில் அடுக்கி வைத்தனர். அப்போது காலேப் சுந்தரை பார்த்து எத்தனை மூட்டை இருக்கு? என்று கேட்டான்; இந்த வயல்ல பத்து மூட்டை அறுவடை எடுத்திருக்கோம் இன்னும் ஐந்து வயல் இருக்கு மொத்தமா எத்தனை வரும் என்று தெரியல, இந்த வயலை வைத்து பார்க்கும் போது போன வருசத்தை விட இந்த வருசம் விளைச்சல் குறைவாகதான் வந்திருக்கு. எப்போதுமே ஒரே விளைச்சல் வராதுல ஒரு வருசம் கூடும் குறையும் இது இயற்கை தானே என்று காலேப் கேட்டான். நீ சொல்லுவது சரிதான் நான் இதை மறுக்கவில்லை நம்ம பாட்டி தாத்தா காலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் ஐந்து ஆயிரம் கிலோ வரை அறுவடை செய்தார்கள் ஆனால் இப்போ ஒரு மூட்டைக்கு அறுவது கிலோ போட்டா கூட ஆயிரம் கிலோ கூட வரமாட்டிக்கு. அதற்க்கு காலேப் நீ எதையாவது ஒலரிகிட்டே இரு வா அடுத்த வயலுக்கு போவோம் வண்டி பாதி வயல் அறுத்து விட்டது. அன்று முழுவதும் நெல்மணியை மூட்டையில் சேகரித்து பன்னையார் வீட்டில் கொண்டு வைத்தார்கள். சந்தியா வேளையில் அறுவடை செய்யத இடத்தை பார்த்து கொண்டே வீடு திரும்பினான் காலேப்.

காலையில் வேலை செய்த காரனமாக தலைவனுக்கு சரியான அலுப்பு. வீட்டுக்கு போய் நல்லா சாப்பிட்டுவிட்டு தூங்க வேண்டியதான் என்று மனசுக்குள்ளே நினைத்து கொண்டே நடந்து கொன்டிருந்தான். வயல்லில் செடிகளை அறுக்கும் போது அவன் மனதில் ஐய்யோ இந்த செடிக்கு வலிக்கும்மோ? ஒருவேலை அதுக்கு வாய் இருந்திருந்தால் அழுதிருக்கும் போல! என்று சிறு பிள்ளைதனமாக நினைத்து கொண்டே இருந்தான். இப்படி நினைத்து கொண்டே வீட்டுக்கு வந்து வீட்டின் முன்பு உள்ள தின்ணையில் உக்காந்து கொண்டான் அவனுடைய அம்மா குடிப்பதற்க்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் குடித்து முடிந்த பின்பு பாத்திரத்தை உள்ளே வைத்துவிட்டு காலேப்பிடம் வேலையை பற்றி விசாரித்தால்.

ஆமா! வேலை எப்படி இருந்தது?

அதற்க்கு காலேப் வேலை நல்லாதான் இருந்தது என்ன ஆறு மணி வரை வேலை இருந்தது முதலாளி நெல்லு மூட்டையை வீட்டில் கொண்டு வைத்துவிட சொன்னார் அதான் நேரம் போய்விட்டது. வயல்ல வேலை செய்வது நல்லா இருக்கு அம்மா. நாம் நம்ம வயல விற்க்காம இருந்தால் அப்படியே வயல்வெளியை சுத்தி சுத்தி வந்து மரத்தடியில் தூங்கி எழுந்து அனுபவுச்சு இருக்கலாம் நீ என்னமா சொல்லுத?

நீ உன் அப்பனுக்கு மேல இருப்ப போல! உன் அப்பனும் இப்படிதான் நான் அப்பவே சொன்னேன் உன் அப்பா கேக்கவா செய்தான். உனக்கு என்ன தெரியும் வாய முடிகிட்டு இரு நானே பாத்துகொள்கிறேன்னு விற்றுவிட்டார் இப்போ அடிக்கடி ஐய்யய்யோ விற்றுவிட்டேனு புலம்கிறார். அவருதான் அப்படினு நினைத்தேன் வயலுக்கு வேலைக்கு போய் இரண்டு மாசம் தான் ஆகுது நீயும் சொல்லிட்ட.

சரி யம்மா! அத விட்டுதள்ளு நடக்கவேண்டியதை பார்ப்போம் பழச பத்தி பேசி என்ன பலன் இருக்கு. நாளைக்கு வேலைக்கு போகல நீ நாளை காலையில் பொறுமையா சோறு பொங்கு அது போதும் இப்போ.

இராத்திரிக்கு என்ன சோறு அம்மா?

சுரைக்காய் குழம்பு வைத்து இருக்கேன் உனக்கு வேர எதாவது வேனுமா? மதியம் அரைத்த துவையல் இருக்கு என்ன செய்யனும் ?

நீ எதுவுமே செய்ய வேண்டாம் இதுவே போதும். உள்ள மாஞ்சோலை என்ன பன்னுது?
(மாஞ்சோலை காலேப்பின் தங்கை)

தொடரும்.... 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*