இரண்டாம் அத்தியாயம் -பழைய ஞாபகம்
அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே
ஆரமிர்தே என்கண்ணே அரிய வான
பொருளனைத்தும் தரும்பொருளே கருணை நீங்காப்
பூரணமாய் நின்றவொன்றே....
என்று வீட்டுல இருந்து சத்தம் கேட்டவுடன் தின்னையில் உக்காந்தவன் வீட்டின் உள்ளே போனான். மாஞ்சோலை தாயுமானவர் எழுதிய கடவுள் வாழ்த்து பாட்டை படித்து கொண்டுயிருந்தால் .
யம்மோவ்! என்ன? இன்னைக்கு ஒருத்தி இப்பவே படிக்கிது. பள்ளிகூடத்துல வாத்தியார் திட்டிடாரா? என்ன பதில கானோம். இன்னா இத தின்னுகிட்டே படினு. தன் கூடை பையில் இருந்த பன்னையார் வயல்ல பறித்த இரண்டு வெள்ளரிக்காயை எடுத்து கொடுத்தான். அவள் அதை வாங்கி கொண்டு எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருந்தால்.
என்ன ஆச்சி யம்மா?
அது ஒன்னும் அவ்வளவு பெரிய விசயம்யில்ல அவளுக்கு அழகு படுத்துத சாதனம் வெனுமாம்.
சரி!
அதான், நான் சொன்னேன் தினமும் பத்து கட்டு பீடி சுத்தி கொடு வாரத்திற்க்கு நூறு ரூபாய் கிடைக்கும். அவ கூட பள்ளிகூடத்துல படிக்கிற பிள்ளேளு தினமும் அம்பது கட்டு பீடி சுத்தி கிடைக்கிற துட்டை வைத்து அதுகலுக்கு தேவையானத வாங்குது. நான் அம்பது கட்டா சுத்த சொன்னேன்? பத்து கட்டு போதும் உன்னுடைய துட்ட நீயே வைச்சுக்கனு சொன்னேன் அதுக்கு போய் என்ன எதக்காக அவா கூட சேத்து பேசுன்னிங்கனு கோவம் அவ்வளவு தான்.
இதுக்குதான் கோவமோ! யோ பிள்ள இப்போ அம்மா என்ன தப்பா சொன்னானு கோவத்துல இருக்க? பள்ளிகூடத்துக்கு போய்ட்டு வந்ததுக்கு அப்பரோம் வீட்டுல சும்மாதான இருக்க அப்போ சுத்த வேண்டியதான.
சைய்னு இருக்கு! இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசாம இருங்க அது போது.
இப்போ அவன் என்ன சொல்லிட்டானு அவன் மேல கோவப்படுத. யல காலேப்பு நீயே சொல்லு அப்பா அழகு சாதனம் வாங்கி தரமாட்டிக்குது. நான் என்ன வெளி ஊருக்கு அடிக்கடி போகவா செய்தேன்? வாங்கி கொடுக்க.
சரி! சரி! அத விட்டுதள்ளு மா.
எங்க விட்டுதள்ள? ஒரு நியாயம் வேணும்ல. வீட்டுல ஒரு வேலை கூட செய்ய மாட்டிக்கா. கொஞ்ச நேரத்திற்க்கு முன்னாடி வீட்ட பெறுக்க சொன்னேன், நான் படிக்க போறேனு உக்காந்து இருக்கு. ஒரு வேலை கூட செய்ய தெரியல அப்படி என்ன பயன படிப்பு? இந்த வாத்திச்சி இதலாம் சொல்லி கொடுக்கமாட்டாலோ.
அது இருக்கட்டும், அப்பா எப்போ வருவாரு?
நீ பேச்ச மாத்தாத.
நா எதுக்கு பேச்ச மாத்தபோறேன்? அப்பா எதுக்கு வயல விற்தாருனு கேக்கதான் கேட்டேன். உனக்கு தெரியுமா மா ?
அத உன் அப்பன்ட கேலு.
அப்போது காலேப் எழுந்துவிட்டு. மாசஞ்சோல, உம்முனு இருக்காம கையில இருக்க வெள்ளரிகாய்ய தின்னு. என்று சொல்லி குளிக்க சென்று விட்டான்.
வேலை முடிந்து காலேப் அப்பா தங்கவேலு தன்னுடைய வண்டியில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். வரும் வழியில் ரோட்டின் இரு பக்கமும் சூழ்ந்து இருந்த அறுவடைக்கு ஆயத்தமான பயிர்களை பார்த்து கொண்டே வருகையில் சூரியன் மறையும் காட்சி தங்கவேலு பார்வையில் பட்டது. ஐந்து நிமிடம் இதை பார்த்துவிட்டு போகலாம் என்று வண்டியை கால்வாய்யின் குறுக்கே கட்டியிருந்த பாலத்தின் அருகில் நிப்பாட்டி பாலத்தின் தின்டு மீது வெளிபுறமாக கால தொங்கவிட்டுகொண்டு அறுவடைக்கு ஆயத்தமான பயிர் போர்வைக்குள் சூரியன் மறையும் காட்சியை பார்த்தார் சூரியன் முக்கால்வாசி மறைந்து இருட்டும் இல்லாமல் வெளிச்சமும் இல்லாமல் மந்தமான ஒளியில் இருக்கும் நேரத்தில் பறவைகள் சத்தமும் மங்கதொடங்க தங்கவேலு மனசுல பயம் கலந்த அமைதி சூழ தனிமை ஒட்டிகொண்டது. மந்தமான ஒளியில் ஒருவர் எல தங்கவேலு போவோமா என்றான்.
நீ போப்பா, நான் கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வாரேன்.
இப்பவே இருட்டிருச்சி எப்ப வரபோர நாங்க போய்ட்டு இருக்கோம் சிக்கரமா விட்டுக்கு வந்துரு.
அதற்கு தங்கவேலு சரினு சொல்லிட்டு சிறிது நேரம் கழித்து தன்னுடைய வண்டிய உருட்டிகொண்டே நடந்து கொன்டிருந்தான். அவனுக்கு முன்னாடி வயதான பாட்டி தன்னுடைய இரண்டு பேரபிள்ளைகளுக்கு சைக்கிள் வியாபாரிகிட்ட ஆளுக்கு ஒரு வடையை வாங்கி கொடுத்து ரோட்டின் ஓரமாக கூட்டிகொண்டு போய்கொண்டு இருந்தாள் அந்த பாட்டிக்கு அறுவது வயதிற்க்கு மேல் இருக்கும். இந்த வயதிலும் நடந்தே போகுதேனு மனசுக்குள்ளே நினைத்து கொண்டான்.
அப்போது, இதே போல் வயல்ல வேலை முடிந்து வீடு திரும்பும் போது வயகாட்டின் வழியாக நடந்து வருவது ஞாபகம் வந்தது. என்ன செய்ய சின்னவனா இருக்கும் போது பெரியவனா மாற ஆசை, பெரியவனா ஆன பின்பு சின்னவனாகவே இருந்திருக்கலானு ஆசை. அப்படி நடந்து வரும் பாதை சில இடங்களில் பாதை அழிந்து பதிய பாதை உருவாகி இருக்கும். தங்கவேலு அந்த புதிய பாதையில் செல்லாமல் அழிந்து போன பழைய பாதை வழியா சுத்திவருவான். சில சமயம் புதர்கள் உருவாகி இருக்கும் அதில் மறைந்து இருந்து தன்னை கூட்டி கொண்டு போவோரை பயம் காட்டுவான். தன்னுடைய பாட்டி அப்போது திட்டுவாள் அதை கண்டுகொள்ளாமல் திரும்ப திரும்ப அதையே செய்வான். இதை தங்கவேலு நினைத்து கொண்டே வீட்டுக்கு வந்துவிட்டான்.
தங்கவேலு தன்னுடைய துண்டை தோளின் மீது போட்டுகொண்டு காலையில் வேலை செய்த அழுப்புக்கு நல்லா குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்தவுடன் தன்னுடைய மனைவி வனிதாவிடம் காலேப் எங்க என்று கேட்டான்.
உள்ள படுத்து கிடக்கான்.
எப்போ வந்தான்?
சாயங்காலம் வந்தான். எல காலேப்பு அப்பா கூப்பிடுதார் இங்க வா.
காலேப்பு சிறு பிள்ளையில் இருந்தே தன் அப்பாவை நிமிர்ந்து பார்த்தது இல்லை. அப்பா இருக்கும் அறைக்கு போக கூட மரியாதை கலந்த பயம். இந்த பயத்தோடே வந்து நின்றான்.
பன்னையாரு கதிர் அறுத்து முடித்து விட்டாரா?
அவ்வளவு தான் முடிச்சாச்சி.
நாளைக்கு வேலைக்கு போரியா?
போகல. படிக்க வேண்டியது இருக்கு.
ஆமா அப்பாட்ட ஏதோ கேக்க போறேனு சொன்ன.
என்னல வேனும்?
அது ஒன்னும் இல்ல பா!
என்னடி வேனும்மா?
அது வந்து நம்ம வயல விற்க்காம இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்னு சொன்னான்.
அப்படியால?
அப்படிலாம் இல்லப்பா!
அது வந்து. ....
.....தொடரும்....