காலேப்ப பார்த்து கொண்டே லதாவை மறந்து விட்டோம். இப்போது லதாவை பற்றி பார்ப்போம்.
லதா கல்லூரி முடித்தவுடன் வீட்டுக்கு சிக்கிரமாகவே கிழம்பிவிடுவாள் அன்று ஒரு நாள் மட்டும் தாமதம் ஆகிவிட்டது. அன்று கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடந்தது அவளுக்கு அதை கண்டு கழிக்க ஆசைகள் கிடையாது இதை போல் பல முறை கலை நிகழ்ச்சிகள் நடந்துள்ளது ஆனால் எதையுமே பார்த்தது இல்லை. அன்று மட்டும் கொஞ்சம் நேரம் பார்ப்போம் என்று பார்த்துகொண்டு இருந்தாள். நிகழ்ச்சி ஆரம்பிக்கவே ஐந்து மணி ஆகிவிட்டது அரைமணி நேரம் மட்டும் பார்த்துவிட்டு பாதியிலே கிழம்பிவிட்டாள். பெரும்பாலும் லதா கூட்டங்களில் கலந்து கொள்வது கிடையாது அதுல பார்வையாளர்கள் வானத்தை பிளக்கும் அளவுக்கு சத்தத்தை எழுப்பும் கூட்டங்களில் கலந்து கொள்ளவே மாட்டாள். கூட்டத்தை விட்டு எழுந்து வந்தவள் பேருந்து நிற்க்கும் இடத்திற்க்கு வந்து சேர்ந்து பேருந்துகாக காத்துகொண்டு இருந்தாள் அந்த நேரத்தில்தான் காலேப் வேலையை முடித்துவிட்டு பேருந்து நிற்க்கும் இடத்திற்க்கு வந்துகொண்டு இருந்தான். இவன்தான் மிதிவண்டி வைச்சு இருக்கான் பிறகு எதுக்கு இங்க வாரான் ஒரு வேலை யாரையாவது அழைத்து செல்ல வருவான் போல என்று மனசுக்குள்ளே எண்ணினாள். காலேப் லதா அருகில் வந்தவுடன் அவளை பார்த்து புன்முறுவல் பூத்தான். லதா தன்னுடன் இப்போது அவன் படித்துகொண்டு இருக்கிறான் என்ற ஒரே காரனத்திற்காக அவனை பார்த்து புன்முறுவல் பூத்தாள். சில சமயம் தனக்கு தெரிந்தவங்க இருந்தாலும் அவர்களை பார்த்து மரியாதைக்கு கூட சிரிப்பது கிடையாது. எது எப்படியோ காலேப் வந்தவுடன் மரியாதைக்கு சிரித்து விட்டாள். கல்லூரியில் சேர்த்து மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டு நடைபெறுகிறது ஆனால் இப்போதுதான் காலேப்ப பார்த்து முதல் முறை சிரித்தாள்.
காலேப் லதா அருகில் வந்து என்ன தனியா இருக்க கூட யாருமே வரலையா?
இல்ல, எல்லாரும் நிகழ்ச்சி பார்க்காங்க. ஆமா நீ இங்க இருக்க நிகழ்ச்சி பாக்கலையா?
இல்லை, எதுக்கு கேட்ட?
உனக்கு கலை நிகழ்ச்சி பிடிக்காதா?
பிடிக்கும்மே! யார் இல்லனா?
பிடிக்குன்னு சொல்லுத ஆனால் பார்க்க போகவில்லை.
அப்படி இல்ல கல்லூரி முடிந்த பின்பு இங்க பக்கத்துல இருக்கிற கடையில் தினமும் இரண்டு மணி நேரம் வேலை பார்ப்பேன் அதான் பார்க்க போகல.
எவ்வளவு நாளா வேலை பார்க்க?
இங்க இப்போ ஒரு மாசமாதான் வேலை பார்க்கேன்.
யாராவது ஊர்ல இருந்து வாராங்கலா?
இல்லையே, ஏன் கேக்கிற?
யாரும் வரலனா ஏன் இங்க நிக்கிற? வீட்டுக்கு போக வேண்டியதான.
இல்ல தனியா நிக்கிறியே பேருந்துல ஏறும் வரை உனக்கு துனைக்கு நிக்க வந்தேன்.
காலேப் இப்படி சொன்னவுடன் லதா அமைதியாவே இருந்தாள். காலேப்பும் முன்ன பின்ன பென்களிடம் பேசியது கிடையாது அதுனால மேற்கொண்டு என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் அமைதியாவே நின்றுகொண்டு இருந்தான்.
இவ்வளவு நேரமும் லதா முகத்தை பார்த்து பேசாமல் அப்போ, அப்போ முகத்தை பார்த்து பேசிகிட்டு மீதி நேரம் வண்டி டயர பார்த்துகிட்டே பதில் சொன்னான்.
இப்போது காலேப் டயர பார்த்து கொண்டே இருக்கும் போது லதா இவன்ட எப்படி போய்ட்டு வாரேன்னு சொல்ல தெரியாம வந்த பேருந்துல ஏறிவிட்டது.
காலேப் லதா பேருந்தில் ஏறுவதை பார்த்துவிட்டு எப்படி வழி அனுப்பனும் என்று தெரியாமல் அப்படியே வண்டியை உருட்டிகொண்டே நடந்து வீட்டுக்கு சென்றான்.
லதா விட்டுக்கு போனவுடன் தொலைகாட்சியில் அவளுக்கு பிடித்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தால்.
லதா அம்மா வளர்மதி ஆமா, உங்க கல்லூரியில் நிகழ்ச்சியாமே! எப்படி இருந்திச்சி?
அத போய் எவா பார்க்க. கொஞ்ச நேரம் இருந்து விட்டு பாதியில எழுந்து வந்துவிட்டேன் இன்னும் நடக்கதான் செய்து ஏழு மணி வரை நடக்கும்மா.
நீ எங்க அதலாம் பார்க்க போற இப்படி நாளு கூட்டத்துக்கு போனா தான நாளு விசயம் தெரியும் இப்படி விட்டுக்குள்ளே இருந்தா யார்ட எப்படி பேசனும் என்று ஒன்னும்மே தெரியாது.
இப்போ நான் யார்ட் போய் பேசபோரேன். பேசுனா பேசுரா இல்லனா பேசாம போரா இப்போ யாரு தாங்குரா. நம்மலுக்கு யாருமே தேவையில்லை.
இப்போ சும்மா தான இருக்க பாத்திரத்தை கழுவு.
அவாள கழுவ சொல்லுங்க நா இப்போ தான வந்து இருக்கேன் கொஞ்ச நேரம் பேசாம இருங்க.
அவா வீட்ட பெறுக்கிட்டா இன்னைக்கு நீ தான் பாத்திரத்தை கழுவ வேண்டும். நான் சோறுபொங்கி முடிக்கதுக்குள்ளே கழுவி வைச்சிரு.
அவாள யாரு பெறுக்க சொன்னா! எப்போதும் நான்தான பெறுக்குவேன் அவா வேலையை எல்லாம் நான் செய்ய மாட்டேன்
நீ வர நேரம் அச்சினு நான்தான் பெறுக்க சொன்னேன் நாளைக்கு நீயே வீட்ட பெறுக்கு இன்னைக்கு பாத்திரத்த கழுவு.
அத நீங்களே கழுவுங்க.
இப்படி பேச காரனம் உங்க அப்பாதான் வீட்டுக்கு வரட்டும் கவனிச்சிகிடுதேன். ஆசை மகள்களை கலேட்டர் ஆக்க போராறாம். படிக்கிற பிள்ளைய எதுக்கு வேலை செய்ய சொல்லுத என்று செல்லம் காட்டி வளக்காரு. இரண்டு பொட்டச்சி இருந்து என்ன பயன் வீட்டுல எல்லாத்தையும் நானே பார்க்கிறேன். எல்லா வேலையையுமா செய்ய சொன்னேன் ஒன்னு இரண்டு வேல கூட பார்க்க மாட்டிக்குது. சில பேரு என்னை பார்த்து உனக்கு என்ன இரண்டு பொம்பல பிள்ள இருக்கு எல்லாத்தையும் அதுவே செஞ்சுரும் என்று வெறுப்பு ஏத்துதா இங்க வந்து பார்த்தா தான தெரியும். நான் ஊஞ்சல் கட்டி ஆடுத மாதிரி பேசுறா. என்று புலம்பி கொண்டே வளர்மதி பாத்திரத்தை கழுவி விட்டால் அதே நேரத்தில் அடுப்புல வைத்த சோத்தையும் கவனித்து கொண்டாள்.
கொஞ்ச நேரம் கழிச்சி கழுவுதேனு சொன்னேன் அதுக்கு கூடவா உங்களால பொறுக்க முடியாது தள்ளிபோங்க நான் கழுவுதேன்.
அதான் நான் கழுவி முடிச்சிட்டேனே இப்போ வந்து எத கழுவ போர. வீட்டு உள்ள உன்னுடைய துணி கட்டில் மேல இருக்கு அத மடிச்சி வை. அப்பா வரதுக்குள்ள அந்த வேலையையாவது பாரு. நிதிசா நீயும் உன்னுடைய துணிய மடிச்சி வை. இரண்டு பேரும் ஒன்னா இருந்தா சண்டதான் போடுவிங்க யாராவது ஒருத்தி வரண்டாவுக்கு வா. யோ நிதிசா நீ துணிய அள்ளிட்டு வந்து வரண்டாவுல வைத்து படிச்சி வை. சத்தம் வந்திச்சினா அவ்வளவுதான் மரியாதை பாத்துக்கோ.
யம்மோவ் அண்ணே எப்போ வருவான்?
நான்தான் மடிக்குள்ள ஒழிச்சி வைச்சிருக்கேன் ஒரு நிமிசம் இரு எடுத்து தாரேன்! மூடிகிட்டு இருதாய் நானும் உன் கூட தான இருக்கேன்.
வளர்மதி பேசி மூடிக்கவும் முத்து வண்டி சத்தம் கேட்டது.
...... தொடரும்
உங்களுடைய விமர்சனங்கள் வரவேற்க்க படுகின்றனர், கீழே உள்ள முகவரியில் பதிவு செய்யவும் இதனால் நீங்கள் யாரு என்று எங்களுக்கு தெரியாது மற்றும் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட உதவும் kishorekavi.sarahah.com