வாழை

கிசோர் கவி
எதிர்பாராத நேரத்தில் என் அப்பாவிற்க்கு மூன்று வாழை கன்று கிடைத்தது. நானும் என் இரு தங்கையும் ஆளுக்கு ஒன்று என பிரித்து கொண்டோம். பின்பு வீட்டின் பின்புரத்தில் அதை நட்டு வைத்து தினமும் அதை பராமரித்து வந்தோம். மூன்று நாள் கழித்து வாழைகன்று முளைக்க தொடங்கியது ஆனால் வைத்த மூன்று கன்னில் இரன்டுதான் முளைத்தது. இதன் பின்பு மறு நாள் விடியல் பொழுதில் முளைத்த இரு கன்னில் ஒன்று ஒடிந்து கிடந்தது. பின்பு தான் தெரியும் அந்த வேலையை பார்த்தது எனது இரண்டாவது தங்கை வாலு தான் என்று இதனால் எனது இரு தங்கை மாலுக்கும், வாலுக்கும் சன்டை வந்துவிட்டது. சன்டையின் காரனம் இப்போது தெரிந்துவிட்டது வாலு தன்னுடைய வாழை முளைக்கவில்லை என்ற காரனத்தால் மாலு வாழையை ஒடித்துவிட்டது. அன்று இருவரையும் சமாதானம் செய்யவே நேரம் சரியாக இருத்தது. இரண்டு நாளைக்கு பன்பு மூன்று வாழையும் நன்றாக முளைத்து இருந்தது இதில் என்ன ஆச்சரியம் என்றால் நான்கு நாள் கழித்து முளைத்த வாலு வாழை மற்ற இரண்டையும் விட உயரமாக வளர்ந்து விட்டது. இந்த அதிசயம் நாள் போக போக வளர்ந்ததே தவிர குறையவில்லை. எப்படி என்றால் மற்ற இரண்டையும் விட வேகமாக வளர்ந்தது. அதுமட்டும் அல்லாமல் அதின்னுடைய இலைகள் அதின் வயதிற்க்கு ஏற்றாற்போல் நன்கு விரிந்து வாழையிலையின் பசுமையும் தெரிந்தது. வாழை நட்டு ஒரு மாத காலம் ஆனதால் அதின் அடிபகுதியில் வாழை காற்றில் ஆடாமல் இருக்க நன்றாக வாழையை சுற்றி தண்ணீர் தேங்குவதற்கு வட்டவடிவ பன்னை அமைத்து தூருக்கும் மன்னை அனைத்து வைச்சாச்சு. வாழை நன்றாக வளர வேண்டும் என்றால் வாழையிலையை பறிக்கவோ, பழைய இலையை அதின் பட்டையோடு கிழிக்கவோ கூடாது என்பதால் அதின் படி பார்த்து கொண்டோம் சில சமயம் பட்டை கிழியாமல் இருக்க வாழை நாறை கொண்டு வாழையை சுற்றி கட்டிவைத்தேன். நான்கு மாத காலமும் இதையே செய்து கொண்டு இருந்தேன். அந்த வாழை வளரும் போது அதை பார்ப்பதற்கு ஒவ்வொரு அதிகாலையும் ஆர்வம் கூடியதே தவிர குறையவில்லை. இப்படி போய்கொண்டு இருக்க ஒரு நாள் இன்ப அதிர்ச்சி அதை இப்போது நினைத்தாலே உடம்பல்லாம் புல்லரிக்கிறது. வாழை மரம் கனி கொடுப்பதற்கான முன் அறிவிப்பை வெளியிட்டது. அதின் பூ வாழைமரத்தின் நடுபகுதியில் தண்டுவடத்தில் தென்பட்டது அந்த வாழையின் நடுபகுதி மட்டும் குன்டாக இருந்தது. நாள்கள் செல்ல செல்ல வாழை நடுபகுதியில் இருந்து மெதுவாக மேல மேல சென்றது. அது மேல செல்ல செல்ல தான் அதின் செந்நிறம் வாழையின் நடுபகுதியில் இருந்து வெளிபகுதியில் உள்ள பச்சை நிற பட்டை வழியாக தன்னை அறிமுகம் படுத்தியது . வாழை பூ தன்னை முழுமையாக காட்டும் அந்த வாழை மரத்தின் உள்ளே இருந்து வெளியே வரும் காட்சி தாய்யின் வயிற்றில் இருந்து குழந்தை வருவதை போன்ற ஒற்ற காட்சி அது. இந்த காட்சியை அதிகாலையிலே கண்டு பிரம்மிப்பு அடைந்தேன் . மிகவும் அற்ப்புதமான இயற்கை சம்பவம் . தன்னை வெளிகாட்டிய பின்பு ஒவ்வொரு நாள்ளும் ஒரு சீப்பு வாழை பழத்திற்கான பூவை கொடுத்தது பன்னிரெண்டு அடுக்கு கொடுத்துவிட்டு தன் பனியை நிறைவு செந்தது வாழைப்பூ. பின்பு அந்த வாழைப்பூ சீப்புகள் வாழைகாய்யாக பழமாக மாறி தன் பனியை முடிந்தது.