வடை சட்டி

கிசோர் கவி
அரும்புவிடும்போதே குறும்பும் இணைந்துவிட்ட சுட்டி பையன்கள்தான் குமாரும், ரத்தினமும்! இருவருக்கும் அடுத்தடுத்த தெருவில்தான் வீடு!
விடும்முறை என்றாலே இவர்களை வீதியில் பார்களாம்! “எங்கு சென்றாலும் சொல்லிட்டு போ” என்பது அம்மாவின் பல்லவி! எத்தனை முறை சொன்னாலும் காதில் வாங்கியதை காற்றில் பறக்கவிட்டு சொல்லாமல் போவதுதான் அவர்கள் பழக்கம்! அன்று பள்ளி விடும்முறை நாள்! இருவரும் முந்தின நாள் சொல்லி வைத்தபடி மீன் பிடிக்க ஆற்றுக்கு போனார்கள இருவரும் ஆளுக்கு ஓரு துணிப்பையையும், மீன் பிடிப்பதற்கு தூண்டிலையும் வைத்திருந்தனர். ஆற்றின் நடுவே வட்ட வடிவில் குறுக்கே நின்ற சிறிய பாறையில் ஆளுக்கொரு பக்கம் திரும்பி கொன்டு மீன் பிடித்தனர். குமார் ஓவ்வொரு முறையும் தூண்டிலில் சிக்குகிற மீனை ஓன்று, இரண்டு, என்று எண்ணிக்கொன்டே வந்தான் 5 மீன்களை பிடித்ததும் பயங்கர உற்சாகமாய் ஏலே ரத்தினம் நான் 5 மீன் பிடித்துவிட்டேன் நீ எத்தனை மீன் பிடித்திருக்கிறாய் என்றான்.
அதற்கு அவன் என்னோட தூண்டிலில் பெரிய பெரிய மீன்கள் அகபட்டது அதை நான் தரும்ப ஆற்றிலேயே எறிந்துவிட்டேன் என்றான் அதற்கு குமார் “ஏன் எறிஞ்ச” என்றான் அதற்கு ரத்தினம் எஙக விட்டில் சின்ன வடை சட்டிதான் இருக்குது அதற்குதான் சின்ன மீனை பிடிக்கிறேன் பெரிய மீனை ஆற்றில் விட்டேன் என்றான்.

இது என்ணுடைய கதை இல்லை துதி மலர்  பத்திரிகையில் படித்தது. படித்ததில் பிடித்தது .