பட்டணத்தில் கரடி

கிசோர் கவி

நண்பா காட்ல நேரம் போகமாட்டிக்கு என்ன பன்னலாம்?
அததான் நானும் யோசித்தேன் நாம ,ரண்டு பேரும் பட்டணத்திற்க்கு போவோமா?
நான் ரொம்பநாளா போக வேண்டும்னு ஆசைபட்டேன் அது ,ன்னைக்கு நிறைவேர போகுதா வா போவோம். என்று ,ரண்டு கரடியும் பட்டணத்திற்க்கு புரபட்டது. காட்டை விட்டு வெளியேற வெளியேற காடு அடர்த்தி இல்லாமலும் மரங்கள் குறைந்துகொண்டே இருந்தது இரு கரடியும் காட்டைவிட்டு வெளியேறி இப்போது பட்டணத்திற்க்குள் அடி எடுத்து வைத்தனர். பட்டணத்தின் ஒதுக்கு புரமாக விவசாய நிலத்தில் சுத்தி வந்து கொண்டு இருந்தனர் திடீரென்று கரடி கருப்பன் கரடி செங்கான்னை தள்ளி விட்டான். செங்கான் கருப்பனிடம் இப்போ எதுக்கு என்னை தள்ளி விட்ட என்று கேட்டான் அதற்கு கரடி கருப்பன் உன் கால் பக்கத்தில் பாரு நம்மல பிடிக்க பொறி வைச்சிருக்காங்க அதான் தள்ளிவிட்டேன். அப்படியா! நன்றி நண்பா சரி வா போவோம். 
பட்டணத்தின் ஒரத்தில் மக்கள் அடர்த்தி குறைவு மற்றும் விவசாய பூமி உள்ளே போக போக தான் மாடி வீடுகளும் பெரிய கட்டிடங்களும் தெரியும் இவர்கள் இரண்டு பேரும் பேசி கொண்டே வாய்க்கால் வரப்பு வழியாக நடந்து போய் கொண்டு இருந்த நேரத்தில் ஒரு விவசாயி இவர்களை பார்த்து விட்டான் பின்பு அவன் ஊர்குள்ளே போய் தனக்கு தெரிந்தவர்களை கூட்டிஞய கொண்டு இந்த இரண்டு கரடியை துரத்த வந்தார்கள். இதை கண்ட கரடிகள் நகரத்தின் மைய பகுதிக்குள் ஒடி தப்பி விடலாம் என்று எண்ணி நகரத்திற்க்குள் பாய்ந்தனர் நகர மக்கள் கரடியை பார்த்தவிடன் ஓட ஆரம்பித்தனர் சில பேர் வேக வேகமாக வனத்துரையினர்க்கு செய்தி தெரிவித்தனர். வனத்துறையினர் கலவர இடத்திற்க்கு வேகமாக வந்து சேர்ந்தார்கள் கையில் மயக்க மருந்து துப்பாக்கியுடன் கரடி இருவரையும் சுத்தி வளைத்தனர். அப்போது கரடி செங்கான் அருகில் இருந்த பாதாள சாக்கடையில் குதித்து உள்ளே ஒடி கொண்டான். ஏன் என்றால் இந்த பாதாள சாக்கடை காட்டில் உள்ள ஒரு ஆற்றில் தான் கலக்கிறது இதை நினைவில் வைத்து தான் கரடி செங்கான் குதித்தான் ஆனால் கருப்பனால் உள்ளே போக முடியவில்லை அந்த ஓட்டை சின்னதாக இருந்தது. கருப்பனுக்கு என்ன செய்யனும் என்று தெரியவில்லை கருப்பனுக்கு தீடிரென்னறு யோசனை வந்தது நன்பனை பார்த்து நீ ஒடி தப்பி விடு நான் சிக்கிரம் உன்னை சந்திப்பேன் என்று சொல்லிவிட்டு தரையில் படுத்து இறந்தவர்களை போல் நடித்தான் கரடி கருப்பன். இதை கண்ட ஒருவன் இவன் அவன்தான் என்று கரடியின் அருகில் மெதுவாக சென்று செத்த மாதிரி நடிச்சது போதும் எந்திரி நான்தான் என்றான். கரடியும் அவனுடைய வாசனையை முகர்ந்து பார்த்து அடையாளம் கண்டு கொண்டது பின்பு ஒருவர் ஒருவர் பார்த்து சிரித்து கொண்டார்கள்.