என்னல இது எலி படம் இருக்கு! என்று யோசிக்க வேண்டாம் இந்த படத்த பார்த்தவிடன் எங்க அம்மா என்னை பார்த்து அடிக்கடி ஒரு பழமொழி சொல்லும் அதுதான் நியாபகத்திற்க்கு வந்தது. அது வந்து "எலி அம்மனமா ஓடுதுனா அது காரனமில்லாமல் ஓடாது" என்று. என்ன? அதிர்ச்சியா இருக்கா. எனக்கும் மொதவாட்டி அப்படி தான் இருந்திச்சி. சரி இத மாதிரி நெறையா விசியம் நியாபகத்திற்க்கு வரும். இந்த நெல் வயல பார்த்திங்கனா வரப்புல ஆங்காங்கே நெறைய பொந்து இருக்கும், பொந்துன்னு சொன்னவுடன் உங்களுக்கு எலிதான் நியாபகத்திற்க்கு வந்திருக்கும். அதுவும் அறுவடை காலத்தில் தான் நெறைய பொந்து இருக்கும், எதுக்குன்னு நம்ம எல்லாத்திற்க்கும் தெரியும் நெல்ல திங்கதான். என்னதான் அது நெல்ல தின்னாலும் நமக்கு நல்ல காரியம் இருக்கதான் செய்யுது. அது வந்து வயல்ல இப்படி பொந்து இருந்தால் காத்தோட்டம் கிடைக்கும் மற்றும் பயிருக்கு தேவையான புரானவாயு கிடைக்கும் நெல் பயரும் செழிப்பா இருக்கும், மண் வளமும் கூடும்.
கதையில் கதாநாயகன் இருந்தால் வில்லனும் இருப்பான்ல, நமது வில்லன் பாம்பு பசிக்கும் போது ஒவ்வொரு எலியா சாப்பிடும். வில்லன பத்தி கவலை வேண்டாம் தீனி இல்லனா அதுவா இடத்த காலிபன்னிரும். இது தான் இயற்கை ஆனால் நமக்கு கொஞ்சம் போல தின்னதுக்கான்டி விசத்த வைத்து எலியை கொன்று விடுகிறோம். சரி சரி என்னதான் இருந்தாலும் எலி எலிதான்.