இனைய தளத்தில் உலா வரும் போது இந்த படத்த பார்த்தேன். எங்க அம்மா அடிக்கடி இதை பற்றி சொல்வதை கேட்டு இருக்கேன், கேட்டு என்ன பயன் இந்த தண்ணீர் பாய்க்கும் முறை பெயர் கூட மறந்து போய்விட்டது. நான் எங்க அம்மாவிடம் சொல்வேன், அந்த காலம் தான் பொற்க்காலம் என்று. அதற்கு அப்போ இருக்கிற மாதிரி இப்போ உங்கல வேல வாங்னா நீ இந்நேரம் துண்ட கானோம் துணிய கானோம் என்று ஒடியிறுப்ப என்று சிரித்து கொண்டே சொன்னாள்.
நான் மனசுக்குள்ளே சொல்லிகொண்டேன் அது என்னவோ உண்மைதான். எப்படி என்றால் பொம்பல பிள்ள படிச்சி என்ன பன்ன போறா என்ற கேள்வி தான் அது. இது எல்லா வீட்டிலேயும் கிடையாது அதற்க்காக எல்லாரும் படித்தாங்க என்றும் சொல்ல முடியாது. இதை தீர்மானிப்பது பொருளாதாரம் மட்டும்மே.
பத்து வயதில் இருந்தே மாட்ட பாத்துக்கனும், வீட்ட பாத்துக்கனும், சோறு பொங்கனும், துணி துவைக்கனும், சொந்த வேலைய பாக்கனும் என்று விதிமுறைகள் பல வருகின்றனர்.
காலை ஐந்து மணிக்கு தந்தை கூட காட்க்டுக்கு போய், தந்தை கினற்றில் இருந்து தண்ணீர் இறைக்க பயிர்களுக்கு தண்ணீர் பாய்க்க வேண்டும். இது ஐந்து மணிக்கு அரம்பித்து பத்து மணிக்கு முடிவடைகிறது. பின்பு தண்ணீர் இறைத்த மாடுகளுக்கு தாகத்திற்க்கு இவள் தண்ணீர் இறைத்து ஊத்துகிறாள். இதை முடித்துவிட்டு தனக்கு தெரிந்த பீடி சுற்றும் தொழிலை வருமானத்திற்க்கு உழைக்கிறாள் பின்பு இரவுக்கு உணவு தயார் செய்கிறாள். இடைவெளி இல்லாமல் உழைத்துவிட்டு அமைதியாகவே இருக்கிறாள்.
எது எப்படியோ அது முடிஞ்சு போச்சி, இந்த படத்தில் இருப்பது மாடு கட்டி கமல இறைக்கும் முறை. இதற்கு யறவட்டி என்ற பெயரும் உண்டு.
இந்த படத்த பார்த்தால் எழுதிகொண்டே இருக்கலாம் போல இதோடு முடித்து கொள்கிறேன்.