மனிதர்களை ஆட்கொன்டவன்

அ
0
"டீ" க்கு தெரியாத ரகசியம் எதுவும் இல்லை. ஏன் என்றால் மனிதர்கள் வாழ்கையில் "டீ" யின் பங்கு அளப்பரியாதது. எந்த ஒரு  முடிவு எடுப்பதற்கு முன்னால் எந்த ஒரு மனிதர்களும் "டீ" குடிப்பது வழக்கமாக வைத்துள்ளார்கள்."டீ" குடிக்கும் போது அனைவரும் கூண்டில் இருந்து விடுபட்டது போல் உணர்கிறார்கள்.
"டீ" க்கு தெரியும் அனைவரின் இன்பம் துன்பங்கள். "டீ" க்கு தெரியாமல் எந்த ஒரு சம்பவமும் அந்த நகரத்தில்  நடைபேராது. மனிதர்கள் வாழ்கையில் "டீ" மிகப்பெரிய ஆறுதலாகவும் அறவனைப்பாகவும் மதுவை விட பல மடங்கு போதையாக இருக்கிறது. இந்த போதைக்கு பெரியவர்கள் முதல் விவரம் தெரிந்த குழந்தைகள் வரை அடிமையாக இருக்கிறார்கள்.
 ஒருவனுடைய  முதல் வெற்றியில் இருந்து  கடைசி தோல்வி வரை உற்சாகம் ஊட்டுவதற்கு "டீ" இருக்கும். ஒருவனுடைய வெற்றிக்கு பலர்  நான் தான் காரணம் என்று சத்தமாக சொல்லாம் ஆனால் "டீ" சத்தமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் மனிதர்களை புது நம்பிக்கை ஊட்டி எப்போழுதும் புது உற்சாகத்துடன் வைத்து நம்மை  ஒவ்வொரு நாளும் கடந்து செல்ல வைக்கிறது. ஒருவனின் தனிமையில் மற்றவர்கள் பங்கேற்பது அவர்களுக்கு பிடிக்காது. ஆனால் அவர்களுக்கும் தொரியாமல் "டீ" அவர்களின் தனிமையிலும் நுழைந்து  தனிமையின் காரணம் அறிந்து அவர்களுடன் பங்கேற்கிறது.
"டீ" ஒரு ஊர்சாக பானமாக மனிதர்கள் வாழ்கையில் நுழைந்தது. ஆனால் இன்று பலரின் வாழ்க்கையில் "டீ" ஒரு உணவாகவே மாரி இருக்கிறது. சும்மா இருக்கிறவங்க கூட "டீ" குடித்து நேரங்களை போக்கிரார்கள். ஒருவர் பிறந்தது முதல் இறப்பு வரை அவர்கள் பெயர் சொல்லி கிடைக்கும் முதல் விருந்து "டீ". முன்னே பின்னே பழக்கம் இல்லாதவர்கள் கூட பழகுவதற்கு "டீ"யை முன் திருத்தி அவர்கள் கூட பழக ஆரம்பிப்போம்.
சிலர் காதலுக்கு "டீ"யே பாலமாக அமைகிறது. சிலர் காதலின் சந்தோச முடிவுகளையும் பல சோக முடிவுகளையும் "டீ" பார்த்து இருக்கிறது. இருவருடைய  நேருக்கதை அதிகரிக்க "டீ" பல விதத்தில் உதவுகிறது. ஒருவரின் அன்பையோ அல்லது நல்ல முடிவுகள் பெறுவதற்கு "டீ" குடிக்கும் நேரமே சிறந்தது.
  நண்பர்கள் கூட்டத்தில் அடிக்கடி கேட்கப்படும் வார்த்தைகளில் ஒன்று "வா மச்சான் டீ சாப்பிட்டு வரலாம்". டீ எதற்காக சாப்பிடுகிறோம் என்று தெரியாத அளவுக்கு அதன் போதைக்கு அடிமையாகிவிட்டோம். நண்பர்கள் ஒன்றாக சேரும் இடம்மே "டீ" கடைதான்.
"டீ" ஒரு வசிகரமான ஒரு போதை அது ஒரு போதை என்று தெரியாத அளவிற்கு நம்மை அதற்கு அடிமையாக்கி வைத்து இருக்கிறது. அதற்கு நானும் ஒரு அடிமைதான். நீங்கள்?..
                                     
                                           இப்படிக்கு,
                                                 கோ.

குறிப்பு: இதில் உள்ள கருத்து தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அடியேனை மன்னிச்சூ. இது எனது மனதில் சில நிமிடம் உதித்த கருத்துக்கள் மட்டுமே.

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*