நிதிசா ஒரு நிமிசம் வெளிய வா.
வந்துடேன் என்று சொன்னபடி வெளியே ஓடி வந்தாள். அண்ணன் தன் வண்டியில் வைத்திருந்த பொருட்களை எடுத்து கொண்டு விட்டுக்குள் சென்று என்னன்ன வாங்கியிருக்கான் என்று பொருட்கள் நிறைந்த பையை சோதனைச் செய்தாள்.
முத்து வீட்டுக்குள் வந்தவுடன் நிதியை பார்த்து அங்க என்னத்த தேடுத ஒரு அஞ்சு நிமிசம் பொறுக்க முடியாதா என்று கூறிகொண்டே அவள் அருகில் சென்றான் நிதி கையில் எவ்வளவு கொய்யா பழம் அம்முடுதோ அவ்வளத்தையும் எடுத்து கொண்டு ஓட முயன்றாள். இதை அறிந்த முத்து நிதி கையை பிடித்து கொண்டான் அப்போது கையில் இருந்த கொய்யா பழம் உருண்டு கட்டில் அடியில் போனது. அதை எடுக்க நிதி அவசர அவரசமா கட்டில் அடியில் சென்றாள். கொய்யா பழம் அடியில் இருந்த பெட்டியின் பின் புறத்தில் கிடந்தது. அதற்க்காக பெட்டியை வெளியே எடுத்தாள். அப்போ தான் நியாபகம் வந்தது பெட்டிக்குள் சாயங்காலம் பெரியம்மா தந்த மாம்பழத்தை ஒழித்து வைத்தது. சட்டென்று பெட்டியை தொறந்து உள்ளே இருந்த மாம்பழத்தை வெளியே எடுத்தாள்.
ஒழிச்சி வைச்சி தின்னு அண்ணன மாதிரி ஆயிராத என்றாள் அம்மா. உடனே வீடே சிரிப்பு சத்தம் தான். நிதி உடனே அந்த கதைய மறுபடியும் சொல்லுமா என்றாள். முத்து நிதியை பார்த்து கொஞ்ச நேரம் பொத்திட்டு இருக்கியா என்றான். அதற்க்குள் அம்மா சொல்ல ஆரம்பித்தாள்.
ஒருவாட்டி அப்பா நிறைய மாம்பழம் வாங்கி போட்டாரு. அப்போ அண்ணே மூன்னாப்பு படித்தான் பள்ளி கொடத்துக்கு போகும் போது சோறு திங்காம வயிறு நெறையா மாம்பழம் தின்னுட்டு போய்ட்டான். நான் அப்பவே நெனைச்சேன் இவன் வயிறு தாங்காது புடுங்கிறுன்னு அதே மாதிரியே பள்ளி கொடத்தில் இறங்கனவுடனே கக்கா போய்ட்டான் அத சாந்ரம் வர கழுவாம அப்படியே விட்டிட்டாங்க சாயங்காலம் வீட்டுக்கு வாரான் கக்கா காஞ்சி வொட்டி போய் இருந்தது அதான் அப்பா அதுக்கு அப்பரம் அங்க அவன படிக்க வேண்டானு சொல்லி சேக்கல என்று அம்மா சொல்ல சொல்ல சிரிச்சிகிட்டே மேல சொல்லுமா என்றாள் நிதி.
முத்து புன்முறுவல்லுடன் அமைதியாக, லதா அப்பவே நல்லா படிப்பா அமைதியா பார்க்க அழகா இருப்பா, நான்தான் அப்பவே நாலு பாடம் முட்டதான் வாங்குவேன் என சொல்லி முடிப்பதற்க்குள், கதை பேசுனதுலாம் போதும் எல்லாரும் சாப்பிட வாங்க என்றாள் அம்மா.
சாப்பாடுனு சொன்ன பிறகுதான் நியாபகம் வருது அந்த வயசுல பாட்டி கூட நடந்தே வயலுக்கு போறது எவ்வளவு அருமையா இருந்திச்சி. பாட்டி இராத்திரி வைச்ச சோத்த காலையில தூக்கு சட்டியில அள்ளி வைச்சி அதுல தண்ணீய ஊத்தி கொண்டு வரும். அதுக்கு தொட்டுக்க நல்லா சிவந்த வத்தல எடுத்து கொஞ்சம் உப்பு மட்டும் போட்டு சேக்க சேவேனு அம்மில துவையல் அரைச்சி கொண்டு வரும் பாரு அந்த துவையலுக்கே சோறு திங்கலாம் போல, அதுகூட காணம் துவையலும் இருக்குமே, ஐயோ இப்ப நினைச்சா கூட நாக்கு ஊறுது அந்த சோத்த மதியம் நேரம் திறந்து சாப்டா அத எப்படினு சொல்ல தெரியல என்று முத்து சொன்னான்.
முத்து அம்மா அவன பார்த்து, அப்படினா நான் உனக்கு ருசியா செஞ்சு போடலனு சொல்லுத.
அட நீ வேற மா பாட்டி துவையல் பாட்டி துவையல் தான். அது எப்படி மா? இந்த துவையல் ரகசியத்த உங்க அம்மாட்ட இருந்து கத்துக்காம இருந்த.
உனக்கு இப்போ துவையல் அரைக்கனுமா?
இப்போ வேண்டாம் பாட்டி வீட்டுக்கு போகும் போது பாட்டிட்ட சொல்லி அரைச்சி தர சொல்லு.
அத நீ சொல்ல வேண்டியதான?
அட நீ சொல்லுமா.
அப்பரம் வேற ஏதாவது ஞாபகம் இருக்கா? என்று நிதி கேட்டாள்.
ஆ.... ன்னு ஆரம்பித்தான் முத்து. ஒருவாட்டி பாட்டி காட்டுக்கு போய்ட்டு சாயங்காலம் திரும்பி வீட்டுக்கு குளத்து வழியா வந்து கொண்டு இருந்தோம், அப்போ என்ன ஆச்சினா அக்காக்காவுக்கு பயங்கரமா தாகம் எடுத்தது போல குளத்த பார்த்ததும் தண்ணீ குடிக்க ஓடி போய் குளத்து கரை தண்ணீ பக்கத்தில் நின்றாள். நான் போய் அவட்ட இந்த தண்ணீ நல்ல தண்ணீ இல்ல நம்ம வீட்ல போய் குடிப்போனு கூட்டு வந்தேன். அவா அப்பதான் மொதவாட்டி காட்டுக்கு வந்தாள் அதான் தண்ணீய பாத்தவுடன் பாஞ்சுடா. என்று சொல்லி அதை மனதிற்குள்ளே நினைத்து பார்த்தான், அந்த சம்பவத்தை அடக்கி கொள்ள முடியாமல் வாய்விட்டு சிரித்து விட்டான் சிரிக்க ஆரம்பித்தவன் ஒரு பத்து நிமிடமாது நினைச்சி நினைச்சி சிரித்து கொண்டே இருந்தான் ஏன் என்றால் அந்த சின்ன வயதில் அதற்கேற்ற நடை தண்ணீரை பார்த்தவுடன் அவளது சிரிப்பு. குளத்தை நோக்கி ஓடும் போது அவள் வைத்திருந்த ஆசை எல்லாம் அவன் நினைத்து பார்க்கும் போது எங்கு இருந்து வந்ததோ அந்த பாச உணர்ச்சி சிரித்து கொண்டு இருந்தவன் திரும்பி தன் தங்கச்சிய பார்த்து ச்ச பல தடவை உன்னை நான் அடிச்சிருக்கேன் என்னை மன்னித்து விடு என்று மனதிற்க்குள்ளே சொல்லி கொண்டான் ஏன் என்றால் சில குற்ற உணர்ச்சி தான் தங்கச்சிய அடித்து விட்டோமே என்ற குற்றம் தான் அது. அப்படியே கொஞ்சம் சத்தமா பேச தொடங்கி தங்கச்சிய பார்த்து உன்ன ரோம்ப அடிச்சிட்டேன் போல என்று சொல்லி விட்டு வாங்க சாப்பிடுவோம் என்றான்.
நிதி அதற்கு, அப்போரம் சாப்பிடுவோம் நீ வேற சொல்லுனே என்றாள். வளர்மதி கூறிகிட்டு போதும் நீ உள்ளே போய் சாப்பிடு என்றாள்.
முத்து அம்மா முத்துவிடம் சத்தமில்லாமல் ரகசியம் பேசுவது போல் டேய் இன்னைக்கி உன் தங்கச்சி ரோட்டல ஒரு பையனோட பேசிட்டு இருந்தாலாம். அதற்கு முத்து அதுக்கு என்ன இப்போம்.
இல்ல சும்மா கேட்டேன்.
ஏன்? நீயும் அவாள தப்பா நினைக்கியா ஊர்ல எவனோ ஒருத்தன் பாத்துட்டு வந்து சொன்னா அத நம்பிருவியா? அவன் பிள்ள எந்ந ரோட்ட நின்னாலோ நம்ம வீட்டு பிள்ளய தப்பா பேசுரான், எவேன்னு மட்டும் தெரியட்டும் மண்டையிலே போடனும். ரோட்ல பஸ்க்கு தனியா நின்னுட்டு இருந்திருக்கா அவா கூட படிக்கிற பையன் ஒருத்தேன் துனைக்கு நின்றுக்கான் அத போய் உன்ட சொன்னான பாரு ஒரு மரமண்ட அவேன் தப்பா நினைத்து இருக்கு.
இது எப்படி உனக்கு தெரியும்
அந்த மண்ட பையன் என்டதான் சொன்னான் அப்பவே அவன அடிகலாம்தான் தொனுச்சி என் தங்கச்சிய தப்பா என்ட சொன்னதுக்கு. நான் லாதாட விசாரிச்சென் இதான் நடந்திருக்கு அவ்வளவுதான் முடிகிட்டு வேலையை பாரு.