வெற்றி கொண்ட நான்கு வருடம்

கிசோர் கவி
1
நண்பர்களை பற்றிய படம் வரிசையில் நண்பன் என்றொரு படம் வந்தது இந்த படம் ஒரு பொறியியல் படிக்கும் மாணவர்களை பற்றியது. ஆரம்பம் முதல் முடிவு வரை பொறியியல் படிக்கும் மாணவர்களின் குணங்களை காட்டி கொடுத்து இருக்கும். நீங்கள் கவலை பட தேவை இல்லை நான் சொல்ல வந்த விசியம் வேறு அதற்க்குள் உங்களை கூட்டி செல்லுகிறேன். நானும் ஒரு பொறியியல் மாணவன் தான் எனக்குள் பல கொள்கைகள் இருந்தனர். இப்போதும் அது என்னிடம் இருப்பதை நினைத்தால் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கு. அது என்ன கொஞ்சம் என்று கேக்கலாம். சில கொள்கைகளை மாற்றி தான் ஆக வேண்டும்.

ஆரம்பத்தில் பொறியியல் மேல் அவ்வளவாக ஆர்வம் இல்லை வணிகம் படித்துவிட்டு வியாபாரம் பார்க்கவே ஆசை பட்டேன். ஆனால் பொறியியல் படிக்க படிக்க அதின் மேல் ஆர்வம் வந்து விட்டது அதனால் மதிப்பெண் வாங்க முடியாவிட்டாலும் அதை கற்று கொண்டேன். படிப்பில் ஆர்வம் வந்ததால் படிப்பு சம்பந்தமான வேலையும் பிடித்துவிட்டது ஒரு கட்டத்திற்க்கு வரும் பொது நான் படித்த துறைக்கு தான் வேலைக்கு போவேன் இல்லாவிட்டால் சும்மா இருந்துவிடுவேன் என்றளவுக்கு அதின் மீது ஆர்வம் கொண்டு இருந்தேன். நீங்கள் நினைக்கலாம் இது எல்லாத்துக்கும் வர ஆசை தானே என்று. அது உண்மைதான்.

நினைத்த வேலை தான் பார்க்க வேண்டும் என்பது  நடைமுறையில் சாத்தியமா என்று என் நண்பன் ஒரு முறை என்னிடம் கேட்டான் அதற்கு நான் சொன்னேன் நான்கு வருடம் இதுக்குனே படித்து இருக்கேன் இது தான் எனக்கு பிடிக்கும், பிடிக்காத வேலைக்கு போய் அந்த மென்பொருள் நிறுவனத்திடம் அடிமையாக வேலை பார்ப்பதற்க்கு சும்மா இருக்கிறதில் தவறு இல்லை என்றேன். இப்போ கூட நம்ம பிடித்த வேலையை பன்ன முடியும் ஆனால் காலம் போற வேகத்தில் வேலை கிடைக்கிறதே கடினமாக இருக்கும் போது கிடைத்த வேலையை கைவிட்டுவிடலாம் என்று சொல்வது முட்டால் தனமாக இருக்காதா என்றான்.
இதே போல் பல முறை நான் அறிவுரை கேட்டு விட்டேன் அதை இப்போ சொல்லி குழப்ப விரும்பவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை சாதார்ன இயந்திர வேலைக்கு செல்ல துனியும நெஞ்சம் உட்கார்ந்த இடத்தில் இருந்து மென்பொருள் வேலையை பார்க்க நெஞ்சம் ஒத்துகொள்ள மாட்டிக்கு.

மறுபடியும் வேறுபக்கம் சென்றுவிட்டேன் கல்லூரிக்கு வரும் போது எப்படி புகையிலை பழக்கம், மது பழக்கம் போன்றவை இல்லாமல் வந்தேனா அப்படியே நான்கு வருடமும் இருந்து விட்டேன். வீனா ஏன் நம்ம உடலை கெடுத்து கொள்ள வேண்டும் சில பேர் மது பழக்கம் தான் கெத்து என்று மண்டையில் அறிவு இல்லாமல் சொல்லுகிறான் என்றால் நானும் அதற்க்கு அவன் பேச்சை கேட்க வேண்டுமா? தப்பு பன்னா தட்டி கேட்பான் நண்பன் என்பது பழமொழி இப்போ அப்படிலாம் இல்லை தப்பு பன்னா அதை மறந்து போக தண்ணியடி இது புதுமொழி. இத எதுக்கு நான் பேசுறேன். "மது குடிப்பவன் குடிக்கிறான் அல்லது குட்டிசவரா ஆகுதான்" அப்படினுதான் யோசிக்க தோனுது. காலங்கள் மாறிகொண்டே தான் இருக்கு நான்கு வருடம் தான் தாக்கு பிடித்து இருக்கேன் வருகின்ற காலங்களில் மாற்றங்கள் நிகழலாம் அதில் இருந்து அந்த ஆண்டவன் தான் காப்பாத்த வேண்டும் இருந்தாலும் அத குடிக்க காச செலவு பன்னுவதற்க்கு வேற ஏதாவது பன்னிட்டு போகலாம்.
நன்றி. வெற்றி கொண்ட நான்கு வருடம்; இரவு பனி துளி 

Post a Comment

1Comments

Please Select Embedded Mode To show the Comment System.*