மண் இணைப்பு

கிசோர் கவி
பெரும் நாளாகவே இதை பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்தது அதை இப்போது எழுதுவதை பெறுமையாக கருதுகிறேன்.

வேளாண்மை பற்றி பல பேர் பல விதமான புரிதல் கொண்டுள்ளனர் அவர்களுடைய புரிதல் தவறு என்று சொல்லுவது முட்டாள் தனம்தான். தமிழ் நாட்டில் பரவலாக ஒரு பழமொழி பயன்படுத்துவார்கள் வேளாண்மை எப்படி செய்வது என்ற கேள்விக்கு பதிலாகவே அந்த பழமொழி இருக்கின்றனர். "நான்கு கறை சுற்றி வந்து பயிர் விளைய வைத்தால் வென்றுவிடலாம் " இது தான் அந்த பழமொழி இது என்ன முட்டாள் தனம்மாக இருக்கு நான்கு கறை சுற்றி வந்தால் பயிர் நன்றாக விளைச்சல் தந்து விடுமோ? என்று இப்போது உள்ளவர்கள் கேள்வி கேட்டால் ஆச்சரியபட தேவையில்லை. 
நான்கு கறை என்பது வயலின் நான்கு கறை. சுற்றுவது என்றால் வயலை உண்ணிப்பாக கவனிக்க வேண்டும் என்று பொருள். நமது வயல் எப்படிபட்டது, மேடு பள்ளம் எப்படி இருக்கு, செடிகளை எந்த விதமான பூச்சிக்கள் தாக்குகின்றனர் எந்த பூச்சிக்கள் நல்லவை, எதற்க்காக பூச்சி தாக்குகின்றனர்? மண் எப்படிபட்டது? போன்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவே இந்த செயல். அவரவர் வயல் எப்படிபட்டது என்பது அவரவர்கு மட்டும் தான் தெரியும் மற்றும் அவர்கள் கொண்டு உள்ள புரிதல் மற்றவர்களை விட வேறுபட்டு இருந்தாலும் அந்த புரிதல் அவருடைய நிலத்துக்கானது. அதை தவறு என்று ஒரு போதும் சொல்ல முடியாது. அதை போல் அந்த நிலத்துக்கான புரிதல் வேறு நிலத்துக்கு உதவாது. இப்படி ஆராய்ந்து வயலுக்கு ஏற்ப்ப முடிவுகள் எடுத்தால் விளைச்சல் அபாரமாக இருக்கும் என்பதே இந்த பழமொழியின் பொருள். 

இந்த ஒரு காரணத்திற்காகவே நவீன வேளாண்மையை குறை சொல்ல வேண்டியது இருக்கு. நான் நவீன வேளாண்மையை வேறுக்கவில்லை மாறாக அதில் உள்ள குறைகளை சுட்டி காட்டத்தான் விரும்புகின்றேன். ஏன் என்றால் சில கல்லூரி மாணவர்கள் வேளாண்மைக்கு தொண்டு செய்கிறேன் என்ற பெயரில் தேவையில்லா கருவிகளை கண்டுபிடிக்க முயலுகின்றனர். நான் இதில் தேவையில்லாதது என்று சொன்னது இந்தியாவிற்க்கு மட்டும் பொருந்தும். அது என்னவென்றால் தானியங்கியாக இயங்கும் இழுவை வண்டி, வீட்டில் இருந்து கொண்டே விவசாயம், போன்றவை. என்னை பொறுத்த வரை மனிதனையும் நிலத்தையும் பிரிக்கும் விதமாக வரும் எந்த கண்டுபிடிப்பும் தேவையில்லாதது தான். அதற்க்காக தொழில்நுட்பமே வேண்டாம் என்று சொல்லவில்லை. முழுவதுமாக வேளாண்மை தொழில்நுட்பத்திற்குள் போக வேண்டாம் என்று தான் கூறுகிறேன். 

நன்றி.