கவிதை எண் 5 : யாரை உயர்த்த உழைக்கிறேன்?

கிசோர் கவி
0
வண்ண வண்ண மேகங்களாய்
உயர உயர மிதக்கின்றன.

நெடு நெடு மகிழ்ச்சிக்கு
பதிலாக செத்த மூஞ்சிகள் எதிரே
நிற்கின்றன.

எதிரே நின்றாள் நிமிர்ந்து பார்க்கும் ஒரு உருவம் 
அதனுள் இருக்கும் என்னிலடங்கா கர்வம்

பிறந்தால் ஒன்று.
பிறந்த நாளுக்கு ஒன்று.
செத்தால் ஒன்று.
செத்த நாளுக்கு ஒன்று.
மணமுடித்தால் ஒன்று.
ஆடி வந்தால் ஒன்று.
அரசாள வந்தால் ஒன்று.
கடை திறந்தால் ஒன்று.
படை சேர்த்தால் ஒன்று.
சம்பளம் மட்டும்?

இன்னும் இன்னும்
சம்பளம்  வாங்குகிறோமோ இல்லையோ
தெரிந்தவர் தெரியாதவரை எல்லாம்
உயரே நிறுத்தி வைத்து வேடிக்கை
பார்க்கிறோம்.

சட்டங்களை எல்லாம் உடைத்துவிட்டு
கம்பீரமாய் நிற்கின்றன.(அந்த சிரிய உருவம்)
அப்பாவி பனியாளர்கள் பலி
வாங்குகின்றன.
அலுவலகம் ஒளிர்கிறதோ இல்லையோ.
உல்லாசமாய் மிதக்கிறது
சிலர் கைகளில்.

கட்டச்சியின் எதிராளி.

கேசவன் கவிதைகள் 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*