வீட்டு சிறப்பு நிகழ்வின் கதாநாயகன்

கிசோர் கவி
தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களில் மாமாவுக்கென்று தனி முத்திரை ஒன்று காலம் காலமாக இருந்து வருகிறது. அதாவது மிகவும் மதிக்கதக்க இடத்தில் இருப்பவர. மிகவும் மரியாதைக்கு உரியவர். இன்னமும் சுருக்கி சொல்ல வேண்டும் என்றால் தந்தைக்கு நிகரானவர் என்ற பொறுப்பையும் வகிப்பவர் என்று சொல்லி கொண்டே போகலாம். திருமண பந்தத்தால் வரும் மாமா உறவை பற்றி சொல்ல வரவில்லை. தாயின் உடன் பிறப்பை கூறுகிறேன். 
நான் கல்லூரி படிக்கும் போது என் நண்பன் ஒரு வாரமாகியும் கல்லூரிக்கு வரவில்லை. நாங்கள் விடுதியில் தங்கி படித்தோம் வீட்டில் ஒரு விழா என்று கூறிவிட்டு சென்றான். பத்து நாட்களுக்கு பின்பு தான் கல்லூரிக்கு வந்தான். நான், விழா சிறப்பாக நடந்து முடிந்ததா என்ற கேள்வியை மட்டும் கேட்டேன் மற்றபடி எதுவுமே கேட்கவில்லை. 
நண்பன் என்பதால் அவனுடைய திறன்பேசியை நோண்டி பார்ப்பது வழக்கம். அப்படி நோண்ட போது தான் தெரிந்தது மண்டையனுக்கு காதுகுத்துனு. அப்போது அவனுக்கு 20 வயது இருக்கும் இருந்தாலும் அவன் அவனுடைய மாமா மடியில தான் இருந்தான் காதுகுத்தும் போது. இப்படியாக ஒரு புகைபடம் ஒன்றினை அவன் திறன்பேசியில் பார்த்தேன். எவ்வளவு பெரிய ஆளாக மாறினாலும் மாமா மடியில தான் இருக்க வேண்டும் என்ற வழக்கம் என்னை கொஞ்ச நேரம் வியப்பில் ஆழ்த்தியது. 
உடன் பிறந்தவளுடைய மகள் வயதுக்கு வந்துவிட்டால் பின்பு அவள் உடுத்தும் முதல் துனியானது மாமா வாங்கி கொண்டு வந்ததை தான் உடுத்த வேண்டும் என்ற வழக்கமும் உள்ளது. 
இன்னமும் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் வீட்டில் எந்த சிறப்பு நிகழ்வு நடந்தாலும் அங்கே கதானாயகனாக தேடபடுவதும் மாமாவாகவே இருக்கிறார். 
இதை போன்ற நிகழ்வுகளை தவிர்த்து மாமாவிடம் கற்றுகொண்டது அதிகமாக உள்ளது.
கிசோர் கவி ர