ஒரு பிசுகோட்த் பொட்டலம்

கிசோர் கவி
திருமுடிவாக்கம் உணவு விடுதியில் சாப்பிட்டு கொண்டு இருந்தேன். அப்போது இரண்டு இளம் பெண்கள் உணவு பொட்டணங்கள் வாங்க வந்தார்கள். அவர்கள் கடைகார தாத்தாவிடம் நன்றாக பேசி கொண்டு இருந்தார்கள். அவர்கள் தினமும் அந்த கடைக்கு உணவு வாங்க வருகிறார்கள் என்பது அவர்களின் பேச்சில் அடிபட்டது. அந்த உணவகம் மற்ற கடைகளை விட குறைவான விலை பட்டியல் கொண்டது. ஒரு தோசை பத்து ரூபாய் என்றால் இவர் கடையில் மூன்று தோசை இருபது ரூபாயாக இருந்தது. அந்த பெண் பிள்ளைகள் உணவு வாங்கிவிட்டு சென்றுவிட்டார்கள். 
 
அந்த கடையில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் தற்போது பொட்டலம் போட்டுகொண்டு இருந்தான். கடைகார தாத்தா அவனிடம் சொன்னார், இப்போ வந்திட்டு போச்சுதே இரண்டு பிள்ளைகள் காலைல ஒரு பிசுகோட்த் பொட்டலமும் காப்பி மட்டும் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு போயிட்டு காச மிச்சம் பிடித்து வீட்டுக்கு அனுப்புது. நீயும் இருக்கியே மொத்தத்தையும் செலவலிச்சிட்டு. என்று சொல்லி முடித்தார் 

கிசோர் கவி