படிப்பை விட வேலைதான் சிறந்தது

கிசோர் கவி
பத்து வயது சிறுவன் தந்தையின் பையில் இருந்து மூவாயிரம் ரூபாயை எடுத்து கொண்டு பஞ்சாப்பில் இருந்து சென்னை வருகிறான். அந்த மனிதனை இன்று சந்தித்தேன். எப்படி சென்னை வந்திர்கள்? என்ற கேள்விக்கு பதில் தான் முதல் வாக்கியத்தில் இருந்தது. மேலும் அவருடன் பேசியதில் நண்பர்களுடன் வந்ததாகவும் சென்னையில் முதலாவதாக மவுன்ட் ரோடு பின்பு தாம்பரம் போன்ற இடங்களில் தங்கி வேலை செய்து பிழைத்து கொண்டு இருந்ததாகவும் சொன்னார். இருபது வருடங்களாக நண்பர்களுடன் ஒரே அறையில் தங்கி வேலை செய்வதாக சொன்னார். தமிழ் நன்றாக பேசுகிறார் உடன் வேலை பார்க்கும் தமிழ் ஆட்களுடன் நன்றாக பழகுகிறார். படிப்பு மண்டையில் ஏறவில்லையாம் படிப்பை விட வேலைதான் சிறந்தது என்று தமிழ் நாட்டுக்கு ஒடி வந்துள்ளார். தற்போது உணவு விடுதியில் சமைப்பவராக வேலை செய்கிறார். உணவு விடுதியில் இருந்து நான் சாப்பிட்டு விட்டு வந்து விட்டேன். 

கிசோர் கவி