சென்னையில் மொட்டைமாடி இரவு

கிசோர் கவி
இன்று என் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. சென்னையில் வீடு பார்த்து கொண்டு இருக்கிறேன் ஆனால் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் வேலை வேலை மட்டும் சிக்கிரமாகவே இடைத்துவிட்டது. அடுத்த முறை வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்தால் முதலில் தேட வேண்டியது வாடகைக்கு வீடுதான். வீடு மட்டும் கிடைக்கவில்லை என்றால் கிடைத்த வேலையையும் வீட்டுவிட வேண்டிய நிலைமை கட்டாயம் வரும். 
 
ஒரு வாரம் ஆக போகிறது நான் வாடகைக்கு வீடு தேடி ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. வீடும் வேலையும் ஒரே நேரத்தில் தான் தேட ஆரம்பித்தேன். ஏதாவது ஒரு வேலை என்று தேட ஆரம்பித்து நான்கு நாட்களிலே வேலை கிடைத்து நிறுவனத்தில் பனிக்கு அமர்ந்தேன். தற்போது வீடு இல்லாமல் நண்பனுக்கு தெரிந்தவர்களின் வீட்டு மொட்டை மாடியில் இன்று இரவு மட்டும் ஒய்வு எடுக்க அனுமதி வாங்கி மொட்டை மாடியில் தனியாக படுத்துகிடக்கிறேன். 
 
மேகம் பஞ்சை போல பரவலாக வானத்தில் கானபடுகிறதினால் தெளிவான வானம் இல்லாமல் வானமும் மேகமும் கலந்து மங்கலான வானத்தை பாத்து படுத்து கிடக்கிறேன். நாளைக்கு எப்படி? என்ன செய்வது?  என்ற சிந்தனையில் இருக்கிறேன். பெரும்பாலான நேரத்தில் தவறு செய்துவிட்டோமோ என்று யோசனை செய்கிறேன். பின்பு வருந்தி கடவுளிடம் உதவி கேட்கிறேன். உடனே பதில் வரும் படி கடவுளிடமே பிடிவாதத்தை கேட்கிறேன். ஏன் என்றால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவசரத்தில் முடிவு எடுத்தேனோ அல்லது தெளிவாக தான் முடிவு எடுத்தேனோ என்று எனக்குள் சந்தேகம் வருகிறது. யோசனை செய்து பார்த்தால் அப்போ அந்த நேரத்தில் தெளிவாக முடிவு எடுத்த மாதிரியே தெரிகிறது. சிறிது நேரம் கழித்து யோசனை செய்து பார்த்தால் வேறு ஒரு கண்ணோட்டத்தில் குழப்பத்தில் முடிவெடுத்த மாதிரி தெரிகிறது. தற்ப்போது தூக்கம் வரவில்லை காலையில் எழும்பும் கதிரவனை தேடியே இருக்கிறது. மற்றவர்களின் மேல் தவறுதல்களை சுமத்த தோனுகிறது. அவர்களின் நிலைமையை யோசனை செய்ய மனம் சுத்தமாக மறுக்கிறது. காசு இருக்கிற திமிர் கொஞ்சம் மனதில் வந்த மாதிரி தெரிகிறது. வீடு ஒரு நாளுக்குள் வீடு கிடைக்க வில்லை என்றால் கிடைத்த வேலையை விட்டுவிடுவதாக நண்பனிடம் நான் எடுக்க இருந்த முடிவை சொன்னேன். அதை நண்பன் செய்துவிட்டான் என்பதை நினைத்தால் வாய வைத்து கொண்டு சும்மா இருந்திருக்கலாமோ என்று தோனுகிறது. ஏன் என்றால் நான் இன்னமும் வேலையை விடவில்லை. நண்பனிடம் மன்னிப்பு கேட்க தோனுகிறது. இந்த நிகழ்வின் முலமாக நான் யார் யார் மேல்லெல்லாம் பழியை போட்டேனோ அவர்களிடம் மன்னிப்பு கேட்க மனம் சொல்லுகிறது. எனக்கான வீடியல் நாளை வீடியும் என்று கடவுளிடம் கேட்டு கொண்டு நம்பிக்கையுடன் தூங்க செல்கிறேன்.
 
கிசோர் கவி