புதிதாக ஒரு அப்பளம்

கிசோர் கவி
தற்போது சென்னை பூவிருந்தவல்லி அருகில் உள்ள ஒரு மின்னியல் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். என்னை பொருத்தவரை நான் இது வரை பார்த்ததில் இந்த நிறுவனம் தான் உணவு பரிமாருவதை சிறப்பாக செய்தவர்கள். இந்த வாக்கியம் தற்போது வரை மட்டுமே. 
 
இன்று நான் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது என் தட்டில் இருந்த அப்பளமானது மின் விசிறியினால் எற்றபட்ட காற்றால் பறந்து போய் கீழே என் கால்கள் பக்கத்தில் விழுந்துவிட்டது. அதை மறுபடியும் எடுத்து என் தட்டில் போட்டுவிட எண்ணி அதையே பார்த்து கொண்டு இருந்தேன். ஆனால் சுற்றி இருப்பவர்கள் என்னை பார்த்து என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அதையே பார்த்து கொண்டு இருந்தேன். இதை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த சாப்பாடு பரிமாறும் அண்ணன் ஒருத்தர் அந்த அப்பளத்தை எடுத்து குப்பையில் கொண்டு போட்டுவிட்டார். பின்பு நான் அதை மறந்து விட்டேன். ஐந்து நிமிடம் கழித்து அந்த அண்ணன் புதிதாக ஒரு அப்பளத்தை கொண்டு வந்து கொடுத்தார். மகிழ்ச்சியால் உள்ளம் நிறைந்து அவரை பார்த்து பரவாயில்லைனா என்று சிரித்து கொண்டே கூறினேன். இந்த ஒரு நிகழ்வு மூலம் சாப்பாடு சாப்பிட்டு முடிக்கும் வரை நிறுவனத்தையும் அந்த அண்ணனையும் மனதிற்குள்ளே புகழ்ந்து தள்ளினேன். 
 
ஆனால் அந்த இடத்தில் என் மன விருப்பத்தை துணிச்சலாக செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் உள்ளது. சாப்பாடு விசயத்தில் பல கொள்கைகளை செதுக்கி வைத்திருந்தாலும் அதை பொது மக்கள் இருக்கும் இடத்தில் நடைமுறை படுத்தும் போது பெரிய சவாலாக இருக்கிறது.

கிசோர் கவி ர