சென்னை, பெரிய அளவு திருநெல்வேலி

கிசோர் கவி
ஒருமுறை திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் சென்றுகொண்டு இருந்தேன். பேருந்தில் என் பக்கத்தில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அந்த சிறுவன் மதுரை போகும் வரை தன் குறும்பு தனமான செயல்களையும் கேள்விகளையும் தன் அப்பாவிடம் செய்துகொண்டும் கேட்டுகொண்டும் வந்தான். சில இடைவெளி நேரம் அமைதியாக இருந்தான். அந்த நேரத்தில் என்னிடமும் பேசி கொண்டு இருப்பான். அப்போது அவனிடம் திருநெல்வேலி எப்படி இருந்தது? என்று கேள்வி கேட்டேன். அதற்க்கு அவன் இந்த ஊரு பிடிக்கவேயில்லை என்று பதில் கொடுத்தான். நான் அவனிடம் தொடர்ந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். ஏன் பிடிக்கவில்லை என்று கேட்ட கேள்விக்கு இங்கு ஒரே குப்பையாக இருக்கு அதோடு புழுதியாக இருக்கு என்று சொல்லி பின்பு மதுரையும் இப்படி தான் இருக்கும்மா? என்று கேள்வியும் கேட்டான். நான் திருநெல்வேலி மாதிரி தான் மதுரையும் இருக்கும் என்றேன். பின்பு அவனிடம் சென்னையில் இப்படி குப்பையாக இருக்காதா? என்று நான் கேட்ட கேள்விக்கு ஆமா என்று பதில் சொல்லி முடிந்தான். தொடர்ந்து எங்கள் உரையாடல் சென்று கொண்டு இருந்தது. 
தற்போது நான் சென்னையில் வசித்து கொண்டு இருக்கிறேன் ஆனால் நான் பார்த்தவரை பல்லாவரம் பூவிருந்தவல்லி ஆகிய இடங்களை வைத்து பார்த்தால் சென்னையும் திருநெல்வேலி, மதுரை மாதிரிதான் உள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அதே பாராமரிப்பு அதே குப்பை அப்பரம் அதே புழுதி. திருநெல்வேலிய விட சென்னை கொஞ்சம் அதிக புழுதி காணபடுகிறது. அப்பரம் எப்படி அந்த பையன் சென்னை சுத்தமாக இருக்கும் என்று சொன்னான் எப்பது தெரியவில்லை. சமீபத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு மாத காலம் தங்கியிருந்தேன் அங்க தான் அந்த சிறுவன் சொன்ன சென்னை இருந்தது. அவன் பேருந்தில் என்னிடம் சென்னையை பற்றி சொன்னதெல்லாம் நான் அடுக்குமாடி குடியிருப்பில் தான் பார்த்தேன்.

கிசோர் கவி ர