வாய்ப்புகளை நழுவவிடாத கூட்டங்கள்

கிசோர் கவி
காய்கறிகளை சந்தைக்கு எடுத்து செல்ல கோனிபைகளை உபயோகிப்போம். அந்த கோனிபையின் உள்ளே காய்கறிகளை போட்டு இரண்டு மூன்று முறை குலுக்கி விடுவோம். இதனால் காய்கள் நெருக்கபட்டு கோனிபையில் இடமானது அதிகரிக்கும் இதில் மேலும் சில காய்கறிகளை போட்டு கொள்ளலாம். கோனிபையில் காய்கறிகளை போட்டு மூடிய பின்பு சந்தைக்கு கொண்டு செல்ல ஏற்றையும் இறக்கையுமாக கோனிபை இருப்பதால் கடைசியாக சந்தையில் கடை முன்பு இறக்கும் போது கோனிமூட்டையானது வழுத்து இழுத்து கோனிபை விரிந்து உள்ளே இன்னும் கூடுதலாக வெற்றிடம் வந்துவிடும். 
இதே போல தான் தொடர்வண்டி பெட்டியானது வண்டி போகும் போது பயணிகளை அழுத்தி அமுக்கி பெட்டியினுள் சில வெற்றிடத்தை உருவாக்கி கொண்டே வரும். அந்த சமயம் கிடைக்கும் இடங்களில் அதாவது பெட்டியில் உள்ள நடைபாதையில் இடம் பிடிக்க கூட்டத்தின் மக்களுக்குள் கடுமையான போட்டி நிலவும். 
பெண்களை குறை கூறுகிறேன் என்று எண்ண வேண்டாம். இந்த இடம் போட்டியில் பெரும்வாரியாக பெண்களே வெற்றி பெற்று விடுகின்றார்கள். ஒரு வேலை ஆண் ஒருவர் உட்கார்ந்து விட்டால் ‘நீங்கள் ஆம்பளைங்க தானே, நின்றால் என்ன? ‘ போன்ற கேள்விகளும் கேட்கபடுகின்றனர். சில நேரங்களில் வாய் சண்டையாகவும் மாறிவிடுகின்றனர். இப்படி உட்கார்ந்த கூட்டமானது அவர்களின் நிறுத்தும் வரும் வரை எழுந்திருப்பதில்லை.
“எவன் எறுனா என்ன?. இறங்குனா என்ன?”  இந்த வாக்கியம் இருபாலருக்கும் பொருந்தும்.

கிசோர் கவி ர