தொடர் வண்டி கழிவறை

கிசோர் கவி
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இரயிலில் பதிவுசெய்யாத பெட்டியில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். இந்திய துனைகண்டத்தின் இரயில்கள் எப்போதும் கூட்டமாக தானே இருக்கும். அந்த பயனத்தின் போது வடநாட்டவர்கள் ஒரு பத்து பதினைந்து பேர் இருந்தார்கள். சென்னையில் அடுத்தடுத்து வந்த நிறுத்தத்தில் மக்கள் அதிகமாக வண்டியில் ஏற அந்த வடநாட்டவர்களில் ஐந்து பேர் கழிவறையில் போய் உட்கார்ந்து கொண்டனர். தற்போது உள்ள நவீன பெட்டி என்பதால் உள்ளே உள்ள கைகழுவும் டோப்பாவில் உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் வெளியே வர முடியாத அளவு கூட்டம் வந்துவிட்டது அவர்கள் இறங்க வேண்டிய இடம் வரும் வரை கழிவறையிலேயே அவர்கள் பயணம் முடிந்துவிட்டது. அவர்கள் நியாயமாக பயன சீட்டு வாங்கி கொண்டவர்கள் தான். 
ஆரம்பத்தில் இரண்டு பக்கம் உள்ள கழிவறையிலும் உட்கார்ந்து தான் பயம் செய்தார்கள். பின்பு ஆத்திரத்தை அடக்க முடியாத சிலரால் ஒரு கழிவறை பயன்பாடுக்கு வந்தது. அந்த சமயத்தில் ஒரு வயதான கிழவன் ஒருந்தர் வடநாட்டுகாரர்களை திட்டின திட்டுக்கு அந்த கிழவன் மீது நான் வண்டி ஏறும் போது வைத்திருந்த மரியாதை போய்விட்டது.
ஒரு குறிபிட்ட நேரம் வந்த பிறகு ஏதாவது நிறுத்தம் வந்தால் ஆடி அலுங்காமல் கழிவை வெளியேற்ற ஒரு கூட்டம் கழிவறை நோக்கி வந்து விடுகிறது. ஒரு முறை இதே போல் ஒரு நிறுத்தம் வந்தது அப்போது மணி பதினொரு இருக்கும் உள்ளே இருந்த வடநாட்டவர்கள் அங்கேயே தூங்கிவிட்டனர். ஒரு கழிவறை மட்டும் காலியாக இருந்ததால் ஆத்திரத்தை அடக்க முடியாத ஒருவன் வடநாட்டவர்கள் உள்ளே இருக்கிறான் என்று கூட பார்க்காமல் அவன் தன் வேலையை முடித்துவிட்டு சென்றுவிட்டான். நல்ல வேலை அந்த நேரத்தில் அவர்களில் எவனும் விழிக்கவில்லை. இன்னும் ஒரு முறை ஒரு சிறுவன் வந்தான் அவனுடைய தந்தை தன் பையனிடம் சும்மா அவங்க மேல அடிச்சிவிட்டுட்டு வாடா என்று கத்தினான். வண்டியின் உள்ளே தலையை தாழ்த்தி கால்களை பார்க்க முடியாத நினலைமையில் தான் அவர்கள் அந்த கழிவறைக்குள் மாட்டி கொள்ள வேண்டியது வந்தது இதை அறியாமல் பல பேர் பலவிதமாக பேசி முடித்துவிட்டனர்.

கிசோர் கவி ர