சுயமரியாதை

கிசோர் கவி
சென்னையில் தனியார் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம் ஒற்றில் வேலைக்கு சேர்ந்தேன். முதல் நாள் வேலை வருகை பதிவில் கையெழுத்து போடும் போது இருந்தே வருகை பதிவாளர் எனக்கு கொடுக்கபட வேண்டிய அடிப்படை மரியாதையை கொடுக்கவில்லை. நான் நினைத்தேன் இவர் மட்டும் தான் இப்படி என்று. ஒரு மாதம் கழித்த பின்பு தான் தெரிந்தது நிறுவனத்தில் இருக்கும் ஒரு சிலரை தவிர மற்ற எல்லாருக்குமே மரியாதை கொடுக்க தெரியாது என்று. புடுங்கி வெண்ண போன்ற வார்த்தைகள் சாதாரனமாக புலக்கத்தில் இருந்தது. உடன் பனி புரிபவர்கள் நிறுவனத்திற்க்கு உள்ளயே கஞ்சா, போயிலை போன்ற போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். பதினைந்து நாளுக்கு பின்பு பட்டரையில் வேலை செய்யும் அனுபவமே கிடைத்தது. மதிய உணவு சாப்பிடும் போது சாப்பாடு பரிமாறுபவர் ஏன் என்னை முரைத்து பார்க்க வேண்டும் என்னை அதட்ட வேண்டும். சும்மா நின்று கொண்டு இருந்த என்னை ஏன்? மரியாதை இல்லாமல் வெளியே போங்கடா என்று அதட்ட வேண்டும். நான் நினைத்தேன் என் மூஞ்சி பார்க்க கேனேன் மாதிரி இருக்கிறதினால் இவன் என்ன நம்மள செய்துவிட முடியும் என்று மிரட்டுகிறார்கள். உண்மைய சொல்ல வேண்டும் என்றால் சுதுவாது தெரியாமலே வளர்ந்திட்டேன். அதான் ஏவன் ஏவனோலாம் என்னை ஏமாற்றி கொண்டு செல்கிறான்.
 
இப்படிபட்ட நிறுவனத்தில் என் சுயமரியாதயை அடகு வைத்து எல்லாம் என்னால் வேலை செய்ய முடியாது என்று முடிவெடுத்து வேலையை திரும்ப பெற்று கொண்டேன். ஒரு தொழியாளியை எப்படி நடத்த வேண்டும் என்று கற்றுகொண்ட பின்பு நிறுவனத்தை நடத்துங்கள் என்று ஆதங்கத்தை தொண்டைக்கு வெளியே விடாமல் முழுங்கி விட்டேன். 
 
அவர்கள் என்னை நடத்தின விதம் அடிமையை நடத்துவது போல இருந்தது. வாய்கிழிய கத்துவதினால் மற்றும் எதையும் சாதித்துவிட முடியாது என்பதை இங்கு நான் உடன் வேலையாட்களிடம் கூற ஆரம்பித்துவிட்டேன். மரியாதையும் கொடுக்க வேண்டும். 

கிசோர் கவி