இது திருநெல்வேலி வட்டாரம்

கிசோர் கவி
அத்தியாயம் ஒன்று 
இது திருநெல்வேலி வட்டாரம். 

வேலைகாக சென்னைக்கு இரண்டாவது முறையாக வருகிறேன். வந்த மூன்று நாட்களில் ஒரு வேலைக்கு சென்றுவிட்டேன், சென்னையில் சும்மா இருந்துவிட கூடாது என்பதற்காக. 

கனவு வேலை எப்போது, எப்படி, எங்கே கிடைக்கும் என்று தெரியாது அதுவரை தங்கும் இடத்திற்க்கு வாடகை, பயண செலவு, உணவு செலவு போன்ற செலவுகள் இருப்பதால் சென்னை மாநகரத்தில் சும்மா இருப்பதை தவிர்க்கிறேன். இனி வேலை, சாப்பாடு மற்றும் தூக்கம் நேரம் போக மீதி இருக்கும் நேரத்தில் பொழுதுபோக்குகாக எதையாவது செய்யாமல் கனவு வேலைகாக தயார் செய்வதை வழக்கமாக வைத்து கொள்ளவேண்டும். 

முதல் முறை வரும் போது வேலையோடு வந்தேன். ஆனால் இரண்டாவது முறையாக வரும்போது வேலை தேட வேண்டும் என்ற எண்ணதோடு வந்தேன். அதனால் என்னுடைய இரண்டு பயணத்திலும் ஒன்றுக்கொன்று வேறுபாடுகள் உள்ளனர். ஆனால் ஒன்று மற்றும் மாறவில்லை. 

தற்போது பணி செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பின்பு அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு அண்ணன் என்னை விசாரித்தார்.

தம்பி உன் பெயர் என்ன? 
இன்னார்னே. 
சொந்த ஊர் ஏது பா? 
திருநெல்வேலினே. 

அட எனக்கும் திருநெல்வேலி தான் என்று அவர் பதில் கூறினார். அவரை தொடர்ந்து நானும் நானும் என்று ஒரு ஐந்து பேர் தங்களை திருநெல்வேலி காரன் என்பதை என்னிடம் அறிமுகம் படுத்தினர். அப்பரமா தான் தெரிந்தது அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாட்களில் என்பது சதவீதம் திருநெல்வேலி வட்டார மக்கள் என்று. அப்பரம் அது சென்னை மாதிரியே தெரியவில்லை. 

சென்னை மாநகரம்
ஆசிரியர் : கிசோர் கவி