எதுவும் இலவசம் இல்லை

கிசோர் கவி
பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தேன். என்னோடு பயணித்த சக பயணிகளில் சில பேர் மாணவர்கள். அவர்கள் பேருந்தில் ஏறின பின்பு தங்களுடைய இலவச பயண சீட்டை காட்டி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது ஒரு யோசனையானது என் மண்டையினுள் உதித்தது. இந்த உலகத்தில் எதுவும் இலவசம் இல்லை என்று. 

இந்த எண்ணமானது பேருந்தில் நடந்த ஒரே ஒரு நிகழ்வு மூலம் வந்தது என்று நான் எண்ணவில்லை. இதற்கு அடித்தளம் சமீபத்தில் ஒரு படம் பார்த்ததில் இருந்து ஆரம்பமாகிறது. 

அந்த படத்தின் பெயர் அலாவுதீன். அந்த படத்தில் பேராசை உள்ள ராச மந்திரி அலாவுதீனை குகைக்குள் அனுப்ப அவனிடம் பேரம் பேசுகிறான். அப்போது இந்த வார்த்தையை அவன் கூறுவான். "எதற்க்கும் ஒரு விலை உள்ளது " என்று. இந்த வாக்கியம் என் மண்டைக்குள் நான் சும்மா இருக்கும் போது வந்து வந்து போனது. அது என்னை சிந்திக்க வைத்தது. பல கதைகள், வரலாற்று நிகழ்வுகள், உண்மை நிகழ்வுகள் போன்றவற்றை எடுத்து காட்டி அந்த வாக்கியம் உண்மை தான் என என்னிடம் ஆதாரங்களை எடுத்து காட்டியது. 

உலகத்தையே படைத்த இறைவன், தான் படைத்த மக்களின் பாவங்களை தீர்க்க ஒரு விலை ஒன்றினை வைத்தான். தன்னையே அந்த பாவத்திற்கு விலையாகவும் வைத்தான். புனித புத்தகம் இவ்வாறு இயேசுவை பற்றி சொல்லுகிறது. 

இந்த உலக உருண்டையில் தான் நாம் வாழ்கிறோம். அறிவியல் படி இந்த உலகம் தான் நம்மை உருவாக்கியது. பாசி, பாசியில் இருந்து பரினாம வளர்ச்சி பெற்று சிறிய சிற்ப்பி, சங்கு உருவாகிறது. ஒரு செல் உயிரி இரு செல் உயிரியாக மாறியது பின்பு பல செல் உயிரி அப்பரம் கூட்டு உயிரி அப்படியே வளர்ந்து நீர் உயிர், நீர் மற்றும் தரை வாழ் உயிர் பின்பு தரையில் மட்டும் வாழும் உயிர், அப்படியே சூழ்நிலைக்கு ஏற்ப்ப தங்களை மாற்றி கொண்டு தனி தனி இனமாக உருவாகி தற்போது பல உயிர் வகைகளாக உலகம் உருவாக்கி உள்ளது. மனிதன் அதில் ஒரு இன உயிர். உலகம் உண்டாக்கியது ஆனால் அவன் வாழ்வதற்கு உலகத்தில் சில விலை கொடுக்கபட வேண்டியது இருக்கிறது அது தான் உழைப்பு. உணவு தேவை அதிகரிக்கிறது இது வரை கிடைக்கிற உணவை உண்டு வந்தவன் தனக்கு ஏற்பட்ட உணவு பற்றா குறையால் தன்னிடம் இருந்த ஆற்றலை மற்றொறு உணவை உண்டாக்க அந்த ஆற்றலை விலையாக உலகத்திற்க்கு கொடுக்கிறான். உழவு செய்கிறான் உணவை உற்பத்தி செய்கிறான். 

கூகுள் நிறுவனம், நாம் எல்லாரும் அறிந்த ஒரு பிரபலமான தனியார் நிறுவனம். அந்த நிறுவனத்தின் பல பொருட்களை மக்களுக்கு அந்த நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. உதாரனத்திற்கு கூகுள் வரைபடம், கூகுள் மின் அஞ்சல், யூ டியுப் கானோலி, கூகுள் டிரைவு போன்றவை. ஆமாம் இது இலவசம் தான் ஆனால் மறைமுகமாக நாம் அதற்கு விலை கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். நண்பன் இதைபற்றி ஒரு செய்தி ஒன்றினை என்னிடம் கூறினான். அவனுக்கு தெரிந்தவன் ஒருவன் மின் அஞ்சல் மூலமாக தன் நண்பனுக்கு ஒரு மடல் எழுதி இருக்கிறான். அதில் அவன் குறிப்பிட்ட நாட்டை குறிபிட்டு அங்கே செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை கூறுகிறான். மறு நாள் அவன் மின் ஆஞ்சலில் அவன் எந்த நாட்டை தெரிவித்தானோ அந்த நாட்டுக்கு சுற்றுலாவிற்க்கு கூட்டி செல்லும் நிறுவனம் விளம்பரமாக வந்திருக்கிறது. இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை எவனோ ஒருத்தன் படிச்சிருக்கான். நாம் அதற்க்கு ஒப்பு கொண்டு தாம் கூகுள் கணக்குகளை தொடங்குகிறோம். 

ஆக, இந்த உலகத்தில் எதுவும் இலவசம் இல்லை. எல்லாவற்றிக்கும் ஒரு விலை இருக்கிறது.

எழுத்து : ர. கிசோர் கவி