ஊர் உணவு

கிசோர் கவி
இந்த நிகழ்வு நான் கல்லூரி படிக்கும் போது நடந்தது. உணவை பற்றி பேசி கொண்டு இருந்தோம். கல்லூரியில் விடுதியில் தங்கி படித்தேன். அதனால் எல்லா மாவட்டத்தில் இருந்தும் நண்பர்கள் உண்டு. இதனால் எல்லாருடைய உணவை பற்றிம் பேச நிறைய விசயம் இருந்தது. உதாரணத்திற்க்கு திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலைமிட்டாய், மதுரை சிகர்தண்டா, புரோடா, பிரியாணி, தோசை, திருவில்லிபுத்தூர் பால்கோவா என்று ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு என்று நிறைய உணவு வகைகள் இருந்தது. நண்பர்கள் தங்கள் சிறப்பு உணவை அன்பின் மிகுதியால் வாங்கி கொண்டு வருவார்கள் அதை நண்பர்களாக உண்டு மகிழ்வோம். 

மீன் சாப்பாடு :

நண்பன் ஒருவன் தான் ஊரில் இருந்து வரும் போது வீட்டில் செய்த மீன் கொழம்பு சாப்பாடினை எடுத்து கொண்டு வந்தான். இந்த உணவுகாக நான் காத்து கொண்டு இருந்தேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு முறை இவன் எங்கள் ஊருக்கு அதாவது மாவட்டத்திற்க்கு குடும்பமாக வந்து இருக்கிறான். பின்பு ஒரு குறிபிட்ட கடையில் மதிய உணவு சாப்பிட்டு இருக்கிறார்கள். அந்த உணவின் ருசியை அவன் வர்னித்த விதம் சிறப்பாக இருந்தது. அவன் கல்லூரிக்கு வந்தவுடன் அதை அதை என்னிடம் கூறினான். "என்னடா உங்கள் ஊர் சாப்பாடு இவ்வளவு கேவலமாக இருக்கிறது. சைய், ஏன் சாப்டோம் என்று இருந்தது " என்று. இதனால் அவன் வீட்டு சாப்பாட்டினை கொண்டு வருகிறான் என்றதும் அதை சாப்பிட்டு பார்த்து விடுவோம் என்று காத்து கொண்டு இருந்தேன். 

சாப்பாட்டை நான் குறை கூறுவது கிடையாது. எதுவானாலும் அதுவும் ஒரு வகையான ருசி தான் என்று சாப்பிட்டு விடுவேன். அது வாயில் இருந்து வயிற்றுக்கு போக நேரம் எடுத்தாலும் தின்றுவிடுவேன். இந்த மீன் சாப்பாடை பொருத்த வரையில் அவங்க அம்மாவுக்கு மீன் கொழம்பு வைக்க தெரியவில்லை என்று தோன்றியது. மீன் சாப்பாடு முழுவதும் அதன் செதில்களால் நிறைம்பி இருந்தது. நட்பு ஒருவன் வாயில் சாப்பாடை வைத்து கொண்டு விழுங்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தான். மறந்து போய் செதில்களை எடுக்காமல் விட்டுவிட்டாங்களா இல்லை அதை எடுக்க வேண்டும் என்பதே தெரியாமல் போய்விட்டாங்களா என்று தெரியவில்லை. அதை அவனிடம் கேட்கவும் மனம் வரவில்லை. அந்த ஊர்ல அப்படி தான் வைப்பாங்கனு ஒரு நினைப்பு கூட வந்தது. அதே ஊர சேர்ந்த நட்பு செதில்களை எடுத்து வெளியே போட்டுவிட்டுதான் சாப்பிட்டான். பின்பு அதை அவனிடம் கேட்கவேயில்லை. 

வெட்டி பந்தா குழு :

முகநூல், கீச்சு போன்ற சமூக வலைதளங்களில் ஒரு கூட்டம் இருக்கு. அந்த கூட்டத்திடம் ரொம்ப நாளாவே ஒரு கேள்வி கேட்க வேண்டும் இருந்தேன். "ஏன்டா டேய் புரொட்டாவை எத்தனை ஊர் காரங்க சொந்தம் கொண்டாடுவிங்க? " சென்னையில ஒருதன் எங்க ஊர் புரொடா தான் சிறந்தது என்கிறான். நெல்லையில இருக்கவன் எங்க ஊர் புரொடாவ தவிர வேறு எந்த ஊரு புரொட்டாவையும் திங்க மாட்டேனு சொல்லுதான். ஏன்னு கேட்டா அது மாதிரி ருசி வராதுனு சொல்லுதான். இவங்க போடுத சண்டை அந்த மைதா மாவுக்கு தெரியுமானு தெரியல. இப்போ எல்லாம் சென்னையில் இருந்து குமரி வரை உணவு விடுதியில் சமையல் செய்கிறவன் பெரும்பாலும் வட நாட்டு காரன் தான் இருக்கான். அப்படினா எந்த ஊரு உணவு சிறந்தது என்று எப்படி வகைபடுத்துவிங்க. 

எங்க ஊர் தான் சிறப்பு : 

ஒருவன் ஆசையா ஒரு உணவை வாங்கி கொண்டு வந்தால் அதை வாங்கி சாப்பிடனும் பிடிக்கலைனா வேண்டாம் பிடிக்காது என்று கூறிவிட வேடியது தான. அதவிட்டுவிட்டு சைய், சீனு சொன்னா என்ன அர்த்தம். இதல்லாம் ரொம்ப தப்புங்க. 

உங்க ஊர்ல எல்லாமே சிறப்பு தாண்டா அதற்க்கா இப்படியா சொல்லுவிங்க. அவனவன் ஊரு அவனவனுக்கு பெருசு தான் சிறப்பு வாய்ந்தது தான். அதற்காக ஏட்டிக்கு போட்டியா எங்க ஊர்ல தான் நல்லா இருக்கும் மத்த ஊர் உணவு பிடிக்காதுனு சொன்னா என்ன அர்த்தம். அல்லா கொண்டு போய் கொடுத்தால் எங்க ஊர் அல்லா தான் சாப்புடுவேன் இத சாப்பிட மாட்டேங்கான். பால்கோவா கொடுத்தா எங்க ஊர் பால்கோவா தான் நல்லா இருக்கும்னு சொல்லுதான். வேறு எத கொடுத்தாலும் எங்க ஊரு தானு சொல்லுதான். இதலாம் ரொம்ப தப்புங்க. அப்பரம் நீ கொண்டு வந்த உணவு மட்டும் எனக்கு எப்படில பிடிக்கும். 

ருசி என்பது அவனவன் நாக்கை பொருத்தது. ஊரை பொருத்தது அல்ல. 

எழுத்து : ர. கிசோர் கவி