பெரு நிலம் ஒன்று : ஆரம்ப பயணம்

கிசோர் கவி
0

பெரு நிலம் 

ஒன்று : ஆரம்ப பயணம் 


திருவாளர் வானவரையன் ஆறுபத்து நான்கு வயது நிரம்பிய மனிதர். இளம் வயதில் எப்படி கடினமாக உழைத்தாரோ அது போலவே தற்போதும் உழைத்து வருகிறார். தெருவில் யாராவது வெட்டி தனமாக நின்று கொண்டு இருந்தால் அவர்களுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவார். இதனால் பல விடலை பையல்வலுக்கு இவரிடமா மாட்டி கொண்டோம் என்று எண்ணகள் நிறைந்து இருக்கும். இருந்தாலும் அவரின் வயதிற்க்கு மதிப்பு கொடுக்காமல் இருந்ததில்லை. 


சாயங்காலம் வேளையில் சிறுவர்கள் அவரிடம் பழைய காலத்து கதைகள் கேட்பதை வழுக்கமாக கொண்டுயிருந்தனர். வழக்கம் போல் அன்று சிறுவர்கள் கதை சொல்லும்படி வானவரையனிடம் கேட்டு கொண்டனர். அவர் நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை கதையாக சொல்ல ஆரம்பித்தார். 


பரந்த நிலபரப்பு ஒன்று மூன்று பக்கமும் கடல் சூழபட்டு இருந்தது. அந்த நிலபரப்பில் இறைவனால் தோற்றுவிக்கபட்ட மக்கள் அந்த நிலபகுதியில் வாழ்ந்து கொண்டு இருந்தனர். மக்களின் தலைவராக மாவளவன் இருந்தார். அவர் மனைவி சேயிழை. மற்றும் இரு மகன்கள் மூத்தவன் வென்றி இளையவன் பகலவன். 


மாவளவர் நாட்டிற்கு தற்பொழுது ஒரு பிரட்சனை ஒன்று வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த பயங்கரமான புயல் ஒன்று கரையோரம் பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த வருடத்தின் நான்காவது புயல். இதற்க்கு முன்பு இதற்கு ஒப்பான புயல் வந்தது கிடையாது. அதோடு இரண்டு முறை கடல் நீரானது நிலபகுதிக்கு வந்து நாச வேலைகளை செய்துள்ளதால். மக்கள் தங்கள் நிலபகுதியினை வெறுக்க தொடங்கினர். வெறுப்படைந்த மக்கள் புதிய நிலபரப்பை தேட ஆரம்பித்தனர். இதற்கு மூல காரணமாக மாவளவன் மகன்கள் செயல்பட்டனர். 


மாவளவர் மகன்கள் புதிய நிலபரப்பை தேட ஆரம்பித்தனர். ஆனால் அவர்களிடம் சிறிய படகுகளே இருந்தது. கடல் தாண்டி செல்ல வேண்டும் என்ற எண்ணம் இதுவரை வராததால் அதற்கான பெரிய படகை அவர்கள் செய்து வைத்திருக்கவில்லை. தற்பொழுது அதற்க்கான தேவை ஏற்பட்டதால் கப்பல் கட்டும் பனியில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்த பனியானது பொது மக்களிடம் இருந்து நீதி வாங்கி மாவளவன் இரு மகன்களின் கண்காணிப்பில் நடந்துகொண்டு இருந்தது. 


மாவளவர்க்கு வேறு இடத்திற்க்கு போக விருப்பம் இல்லாமல் இருந்தது அதனால் இந்த விசயத்தை கையில் எடுக்காமல் காலம் தாழ்த்தி கொண்டு இருந்தார். மாவளவர் மகன்கள் இந்த பிரட்ச்சனைக்கு முடிவு எடுக்கும்படி மாவளவரை கேட்டுகொண்டனர். முடிவு தங்களுக்கு சாதகமாக வராத காரணத்தினால் தாங்களே ஒரு முடிவுக்கு வந்து மக்களை சேர்த்துகொண்டு கப்பல் கட்டும் பனியில் ஈடுபட ஆரம்பித்தனர். மாவளவரால் இதை தடுக்க முடியவில்லை. பெரும்பாலான மக்கள் மகன்களின் பின்னால் சேர்ந்ததால். உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தார். 


ஏழு மாதம் கடுமையான வேலைகளுக்கு பின்பு ஒரு கப்பலை கட்டி முடித்தனர். கடலுக்கு அப்பால் வேறு நிலபரப்பு இருக்கிறதா என்பதை பார்க்க ஒரு குழு ஒன்றினை ஆயத்தம் செய்து அவர்களை அந்த கப்பலில் அனுப்பி வைக்க திட்டம் வகுத்தனர். இந்த குழுவில் மொத்தம் எண்பது பேர் இருந்தனர். நாறு பேர் மற்றும் அவர்களுக்கு நான்கு மாதத்திற்க்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகள் வைத்துகொள்ளும் அளவாக அந்த கப்பல் இருந்தது. 


கப்பல் கட்டபட்டு கொண்டு இருந்த ஏழு மாதங்களும் எந்த ஒரு இயற்கை சீற்றங்களும் வராததால். மாவளவரின் கை உயர ஆரம்பித்தது. இந்த காலத்தை சரியாக பயன்படுத்தி மகன்களின் பக்கம் உள்ள மக்களை தன் வசம் திருப்ப முயற்சி எடுக்க ஆரம்பித்தார். ஆனால் வென்றியும் பகலவனும் விட்டுகொடுத்து போவதாக இல்லை. திட்டம் போட்டபடி முதல் குழுவானது தென்திசையை நோக்கி பயணத்தை தொடங்கியது. அந்த குழுவில் பகலவனும் இடம் பெற்றிருந்தான். வென்றி அவர்களுடன் பயணம் செய்ய விரும்பவில்லை. 


மாவளவர் மக்கள் கிழக்கு பகுதியில் வாழ்ந்து வந்தனர். கிழக்கு பகுதியில் வாழ்வதற்க்கு தேவையானவை குறைவில்லாமல் கிடைத்து வந்ததால் மேற்க்கு பக்கம் மக்கள் திரும்பி பார்த்ததில்லை. மேற்கு பகுதியானது பாலை பகுதியாக இருந்தது. ஏழு மாதங்களாக இயற்கை சீற்றம் இல்லாததால் வென்றியின் மனம் மாறியிருந்தது. மேற்கு பக்கம் பாலைவனத்தை தாண்டி நல்ல இடம் இருக்க வேண்டும் என்று எண்ணினான். பாலைவனத்தை தாண்டி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க பலர் தங்கள் சொந்த முயற்ச்சியில் சென்றனர் ஆனால் அவர்கள் திரும்பவில்லை. சிலரை தேடிபோய் பாத்த போது அவர்களின் மரித்த உடல் மட்டுமே கிடைத்தது. அதனால் மக்கள் அந்த பகுதியினை சாபம் நிறைந்த பகுதியாக எண்ணினார்கள் இதன் காரனமாகவே கடல் பயணம் செய்ய மக்கள் முன் வந்தனர். பகலவன் சென்ற பின்பு பாலைவன இடத்தை பற்றி ஆராய வேண்டும் என்று வென்றி எண்ணினான். பகலவனிடம் இதை பற்றி விவாதித்தால் தனக்கு இடைஞ்சலாக இருப்பான் என்று எண்ணி பகலவன் செல்லும் வரை மனதிற்குள்ளே வைத்துகொண்டான். 


எழுத்து : கிசோர் கவி


Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*