காமராசரை விட்டுவிடுங்கள்

கிசோர் கவி
0

காமராசரை விட்டுவிடுங்கள்


நான் பள்ளிகூடத்தில் படிக்கும் போது பத்தாம் வகுப்பு படிக்கும் வரை காமராசர் எந்த இனத்தவர் என்பது போன்ற எதும் தெரியாது. பள்ளிகூடத்தில் அவருடைய புகைபடங்களில் இந்திய நாட்டின் கொடி இருக்கும்படியாக தான் பார்த்து இருக்கிறேன். பின் நாட்களில் அவர் படத்தில் வேறு ஒரு கொடில் அவரை பார்தபோது அதை என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை. கர்ம வீரர், கல்வி கண் திறந்தவர் என்ற பெயர் மட்டும் தான் எனக்கு தெரியும். 


பள்ளிகூடம், வீடு மற்றும் தேவாலயம் இந்த இடங்களை தவிர்த்து வேறு இடங்களுக்கு போனது கிடையாது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஊர் சுற்றினது கிடையாது. அதனால் என்னவோ காமராசர் எந்த இனத்தை சேர்ந்தவர் என்பது தெரியாமல் போய்விட்டது. 


பள்ளிகூடத்தில் சேர்கையின் போது நான் எந்த இனம் என்பது தெரியாமல் அருகில் உள்ளவனின் இனத்தின் பெயரை பார்த்து எழுதி பள்ளிகூடத்தில் கொடுத்தேன். அந்த அளவுக்கு அதைபற்றின அறிவு இல்லாமல் தான் இருந்தேன். நீங்க நினைக்கும் அளவுக்கு அப்போது பெரியவன் இல்லை ஆறாம் வகுப்பு தான். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தான் இனத்தை பற்றிய முதல் புரிதல் ஆரம்பமானது. என்னுடைய நட்பு ஒருவன் இருந்தான் அவனுக்கு பதினொராம் வகுப்பு வரை அவன் எந்த இனம் என்பதை தெரியாமல் இருந்திருக்கான். பதினொராம் வகுப்பு படிக்க என்னுடைய பள்ளிக்கு வந்தான். அப்போது தான் அவனுக்கு தன்னுடைய இனம் இது என்று அறிந்து கொண்டான். 


ஒரு நாள் என்னுடைய புலனத்தில் (whatsapp) ஒரு status ஒன்றினை பார்த்தேன். ஒரு மண்டையன் status காக அதை வைத்திருந்தான். அந்த கானோலியில் அந்த மண்டையன் வார்த்தைக்கு வார்த்தை "காமராசர் என் இனத்தில் பிறந்தவர் டா " என்பதை திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தான். காமராசர் அந்த மண்டையன் இனத்தில் பிறந்தாராம்! நீ தான் டா தப்பி தவறி அவருடைய இனத்தில் பிறந்து இருக்க மண்டையா என்று இரண்டு வார்த்தைய தீட்டி விட்டேன். இவன மாதிரியே பல மண்டையனுங்க அவனவன் இனத்தில் இருக்கான். அப்படியே என்னுடைய (whatapp ) புலனம் தொடர்பிலும் பல மண்டையனுங்க இருக்கானுங்க. 


நான் வசிக்கும் பகுதில் பிரபலமான காய்கறி சந்தை உள்ளது. அந்த சந்தை குறிப்பிட்ட இனத்தவர்களின் சந்தையாகவும் உள்ளது. அந்த சந்தையில் ஒவ்வொரு கடையிலும் காமராசரின் புகைபடம் கட்டாயம் இருக்கும். காமராசரின் புகைபடம் இல்லாத கடைகளே கிடையாது. இடைபட்ட காலத்தில் அந்த சந்தையில் கோக்குமாக்கு வேலைகளை பார்த்தார்கள். இப்போதும் பெரிய அளவில் இல்லை என்றாலும் கோக்குமாக்கு வேலைகள் நடக்கதான் செய்கிறது. ஒரு முறை சந்தைக்கு பத்து மூட்டை காய்கறிகளை சந்தையில் உள்ள கடைக்கு அனுப்பி வைத்தோம். அடுத்த நாள் கடையில் ரசீது வாங்க சென்ற போது எட்டு மூட்டை என்று இருக்கு. எட்டு மூட்டை தான் இருந்தது என்று சாதித்து விட்டான். இரண்டு மூட்டையை ஆட்டைய போட்டான். மற்றொரு கடையில் பத்து மூட்டையையும் ஆட்டைய போட்டுயிருந்து இருக்கான். இப்படி பட்ட மண்டையனுங்க தான் காமராசரை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறோம் என்ற பெயரில் காமராசர் பெயரை நாறடித்து கொண்டு இருக்கிறார்கள். இந்திய மக்களுக்காவே வாழ்ந்து மறைந்த நல்ல தலைவரை சாதிய கட்டத்திற்குள் அடக்கி அவரின் பெயருக்கு அவபெயரை கொண்டு சேர்த்து கொண்டு இருக்கிறார்கள். சுதந்திரமாக இருந்த அவருடைய சிலைகளுக்கு கூன்டுகள் வைத்து அடைக்கிறார்கள். காமராசரை தூக்கிபிடிப்பவன் அவரை மாதிரி இருங்கடா இல்லனா முடிட்டு இருக்க. அவருடைய பெயரில் அவருக்கு பின்னால் மறைந்து கொண்டு பன்னுத சேட்டையை தாங்க முடியல. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள், காமராசரை சாதிய பிடியில் இருந்து அவரை விட்டுவிடுங்கள். காமராசர் மீது உன்னமையான மதிப்பு வைத்திருந்தால் இந்திய கொடி இருக்கும் அவருடைய படங்களை பொதுவெளியில் பயன்படுத்துங்கள். உங்கள் சாக்கடை கொடியை அவருக்கு பின்னால் வைத்து அவரை கேவலம் படுத்தாதீர்கள். 


எழுத்து : கிசோர் கவி

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*