ஓட்டுநர் உடன் சந்திப்பு

கிசோர் கவி
0

ஓட்டுநர் உடன் சந்திப்பு 


ஒரு முறை சரக்கு வண்டி ஒன்றில் பயணம் செய்தேன். வண்டியில் பேசி கொண்டே செல்லும் போது என்னிடம் என்ன செய்து கொண்டு இருக்க என்று கேள்வி கேட்டார். நான் இன்ன இன்ன செய்கிறேன் இப்பொழுது படித்து கொண்டு இருக்கிறேன் என்பதாய் பதில் சொன்னேன். 


வண்டியில் இன்னும் சில பேர் அவருடன் வேலைபாப்பவர்களும் பயணித்து கொண்டுயிருந்தனர். ஓட்டுநர் அவர்களுடன் பள்ளிகூடத்தில் பரிட்ச்சை வைப்பது போல நமக்கும் வைத்தால் எப்படி இருக்கும் என்று அடுத்த பேச்சை ஆரம்பித்தார். வண்டியில் உடன் இருந்தவர்கள் நன்றாக இருக்கும்  என்றனர். பின்பு ஓட்டுநர் பரிட்ச்சை எப்படி இருக்க வேண்டும் என்று கூறினார். 


நான் இப்போது வண்டி ஓட்டுதேன். வண்டியில் எத்தனை மூட்டை ஏற்ற முடியும். வெறும் வண்டியில் எவ்வளவு வேகமாக போகலாம். பழுவோடு எவ்வளவு வேகம் போகலாம்?. அப்படியினு நமக்கு பரிட்ச்சை வைக்கனும். மகிழ்ச்சியா எழுதிட்டு வரலாம்ல. என்றார். 


ஒருவர் குறுக்கிட்டு உனக்கு பரிட்ச்சை எழுத அவ்வளவு ஆசையா என்ன என்றார். அதற்க்கு அவர் பள்ளிகூடம் படிக்கும் போது நிறைய பரிட்ச்சை எழுதியிருக்கேன். அந்த அனுபவம் உண்மையிலே நல்லா இருக்கும் பா. என்று முடித்தார்.


எழுத்து : கிசோர் கவி

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*