தேடி வந்த குயில் நாரா. நாச்சியப்பன்

கிசோர் கவி
0

புத்தகம் பெயர் : தேடி வந்த குயில் 

ஆசிரியர் : நாரா. நாச்சியப்பன் 


இந்த புத்தகம் மூலம் பாரதிதாசனை பற்றிய சில குறிப்புகள் எனக்கு கிடைத்தது. 


ஆரம்ப நாட்களில் சமசுகிருதம் கலந்த தமிழையே பயன்படுத்தி வந்துள்ளார். சில நேரம் தனித்தமிழ் பற்றி பேசுபவர்களை கிண்டல் செய்தும் இருக்கிறார். பின் நாட்களில் தனித்தமிழ் மீது பற்று எற்பட்டு தனித்தமிழிலே கவிதைகளை இயற்றியுள்ளார். தனித்தமிழ் கொள்கையை ஏற்ற பின்பு தான் எழுதின கலப்பு படைப்புகளை தீயிட்டு எரித்துள்ளார். 


மேடையில் சமரசம் இன்றி எதிர்தரப்பினரை ஆட்டம் கானவைத்துவிடுவார். தமிழ் மொழிக்கு வீரவார்த்தைகள் கிடையாது, தமிழ் மொழி இனிமையான மொழி என்ற எண்ணங்களை உடைத்தவர் பாரதிதாசன் என்றும் புகழபடுகிறார். பாரதிதாசன் மேடை பேச்சை ஆசிரியர் வர்னிக்கும் போது தற்போது உள்ள அரசியல் தலைவர் சீமான் தான் நினைவுக்கு வந்தார். (நான் சீமான் கட்சிகாரன் கிடையாது). மேடைபேச்சில் கர்ச்சனை செய்தாலும் நன்றாக பாட்டு பாடவும் பாரதிதாசனுக்கு கைவந்த கலை. 


பாரதிதாசன் ஒருவனை கூப்பிடும் போது 'இவனே ' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். எ.கா : அடே இவனே எப்போ ஊர்ல இருந்து வந்த. 


பாரதிதாசனுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. ஒரு முறை ஒரு பள்ளியில் புகைபிடிப்பது நல்லது அல்ல என்று பாடியுள்ளார். அதற்க்கு ஒருவன், ஊருக்கு தான் உபதேசமா என்று கேள்வி எழுப்பினான். அதற்க்கு பாரதிதாசன் நான் புகைபழக்கத்திற்க்கு அடிமையானேன் நீங்களும் அதற்கு அடிமையாகிவிட கூடாது என்பதற்க்கு தான் பாட்டு என்றார். 


தேடி வந்த குயிலிடம் இருந்து தெரிந்து கொண்டவை. 


எழுத்து : கிசோர் கவி  

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*