சாக்கா அறிமுகம் ; அவதார், கடைசி காற்று பெண்டர்.

கிசோர் கவி
0

சாக்கா அறிமுகம்

சாக்கா மற்றும் பின்புறம் அவதார் ஆங், தங்கை காட்டாரா 

சாக்கா, பதினாரு வயது இளைஞன். வடதுருவ நீர் தேசத்தவன். அவதார் கதையில் நகைச்சுவை மற்றும் அதனோடு கூட தொழிநுட்ப அறிவு உடையவனும் சூழ்நிலைக்கு ஏற்ப்ப உறுதியான மற்றும் தெளிவான முடிவு எடுக்க கூடிய ஆற்றல் உள்ளவனும் சிறந்த போர் வீரனாகவும் வலம்வருபவன். பெண்டிங் கலையில் ஈடுபாடு இல்லாதவன். இவனுடைய விண்வெளி பட்டயம் சிறப்பு வாய்ந்தது. ஏன் என்றால் விண்வெளியில் இருந்து நிலத்தில் விழுந்த ஒரு விண்கல்லின் இருந்து எடுத்த பொருட்களால் அவனுடைய பட்டயத்தை செய்திருப்பான். கடைசியாக, அவன் ஒரு சாப்பாட்டு பிரியன். அசைவம் என்றால் தூர்வாரிவிடுவான். அப்பரம் காதல் மன்னன். 

சாக்கா ஆரம்பத்தில் அவதார் ஆங்கை நம்பவில்லை. நெருப்பு தேசத்தின் உளவாளி என அவதார் ஆங்கை நினைத்தான். ஆங்கும் கட்டாராவும் பழைய கப்பல் ஒன்றினை சுற்றி பார்க்க செல்வார்கள் அப்போது அவர்கள் அறியாமல் ஒரு வலையில் மாட்டி கொள்வார்கள். பின்பு கப்பலில் இருந்து ஒரு சமிக்கையானது வெளிபடும். இதனால் நெருப்பு தேச படைகள் அந்த கிராமத்தை கண்டு கொண்டனர். இதனால் சாக்கா ஆரம்பத்தில் ஆங்கின் மீது நம்பிகை இல்லாமல் இருந்தான். சொல்ல போனால் அவதார் என்று ஒன்று இல்லை என்று சொல்லி கொள்வான். ஆங் அந்த கிராமத்தை மீட்பதற்க்கு முயற்சி எடுக்கும் போது தான் ஆங் அவதார் என்பதை சாக்கா அறிந்து கொள்வான். பின் நாட்களில் ஆங்விற்க்கு உறுதுனையானக இருந்தான். 

பும்பரங், வாள்வீச்சில் சிறந்தவன். எதற்க்கும் துனிந்தவன். இயந்திரங்களை சிக்கிரமாக கையாள தெரிந்தவன் 

சாக்கா சுக்கி என்ற பெண்னை விரும்பினான். அதற்க்கு முன்பு தென் துருவ தேசத்து இளவரசியை விரும்பினான் ஆனால் அவள் நீலாவிற்க்கு போய்விட்டாள். 

சாக்கா வடதுருவ நீர் தேசத்து தலைவன் மகன் அதனால் அவனுக்கு நெருப்பு தேசத்தின் ஆதிக்கத்தின் மீது வெறுப்பு இருந்தது. ஆனால் நெருப்பு தேச மக்கள் மீது வெறுப்பு காட்டுவதில்லை. ஒரு முறை நெருப்பு தேச கிராமத்தை சுதந்திர போராளிகள் என்ற அமைப்பினரிடம் இருந்து காப்பாற்றுவான். 

காட்டாரா, என்ற உடன் பிறந்த சகோதரியும் உண்டு. 

சாக்காவை பற்றின அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். அவைனை பற்றி நிறைய எழுத வேண்டும் என்று நினைப்பதால் அடுத்தடுத்து பதிவில் எழுதுகிறேன். 

எழுத்து : கிசோர் கவி

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*