Hay Day விளையாட்டு. ஒன்று : முன்னுரை

கிசோர் கவி
0

Hay Day விளையாட்டு 

முன்னுரை


இது திறன்பேசியில் இயங்க கூடிய வேளாண்மை விளையாட்டு. இதற்க்கு தமிழாக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஆங்கில வார்த்தையான hey day என்பதனையே நினைவில் வைத்து கொள்ளலாம். இது ஒரு அருமையான விளையாட்டு. இதனை 'suppercel' என்ற விளையாட்டு மென்பொருள் நிறுவனத்தினர் உருவாக்கி உள்ளனர். 


ஆரம்பிக்கும் முறை


அண்டார்ய்டு மற்றும் ஆப்பிள் இயங்கு தளம் திறன்பேசியில் பதிவுரக்கம் செய்து கொள்ளவேண்டும். இந்த விளையாட்டினை இனையதளத்தில் மட்டுமே விளையாட முடியும். கூகுள் பிளே விளையாட்டு செயலியை (play game) இதனுடன் இனைப்பதன் மூலம் விளையாட்டு தகவல்கள் இனையத்திலே பாதுகாக்கபடுகிறது. இந்த விளையாட்டை திறன்பேசி மற்றும் திறன்ஏட்டில் மட்டுமே விளையாட முடியும். கணினியில் இனையதளம் (www.something.com) மூலம் விளையாட முடியாது. 


கூகுள் பிளே கடையின் (play store) மூலம் திறன் பேசியில் உள்ளீடு செய்யபட்ட பின்பு, விளையிட்டினை பொத்தான் (icon) மூலம் திறக்க வேண்டும். பின்பு விளையாட்டானது இனையத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி கொண்ட பின்பு விளையாட்டின் கதையானது ஆரம்பமாகும். 


விளையாட்டின் கதை என்னவென்றால், உங்களுடைய மாமா அவர்கள் தன்னுடைய வயலை பார்த்து கொண்டு இருந்தார் ஆனால் தற்போது அதை அவரால் பார்த்து கொள்ளமுடியவில்லை. அது பாராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. அதனால் அந்த வயலை அவர் உங்களிடம் பார்த்துகொள்ளுமாறு கொடுக்கிறார். நீங்கள் அதற்க்கு சம்மதம் தெரிவித்து பாராமரிக்கிறிர்கள். இதுவே விளையாட்டின் மையகருத்து. 


வயலில் ஆரம்பகட்ட வேலையாக வயலில் உள்ள சேமிப்பு கிடங்கு, பன்னைவீடு மற்றும் தானியகளஞ்சியத்தை சீர்படுத்தி அதற்க்கு வண்ணம் தீட்டவேண்டும். இதில் இருந்து விளையாட்டானது ஆரம்பமாகிறது. 


எழுத்து: ர கிசோர் கவி

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*