கட்டாரா; அவதார், கடைசி காற்று பெண்டர்.

கிசோர் கவி
0


பொதுவாகவே எனக்கு பெண்ணியவாதிகளை பிடிப்பதில்லை. ஆனால் கட்டாராவை பிடிக்கும். ஒரு பெண் ஆண் போல் செய்யும் எந்த செயலும் எனக்கு பிடிப்பதில்லை. ஆவதார் கதாபாத்திரத்தில் வரும் மற்றொரு நபர் இவள் பெயர் கட்டாரா. இவள் ஒரு நீர் பெண்டர். நீர் கலையை கற்றவள். அவதார் கதாபாத்திரத்தில் வரும் சிறந்த நீர் பெண்டர்களில் இவளும் இடம்பெறுவாள். வடதுருவ நீர் தேசத்தாள். அத்தேசத்தின் தலைவன் மகள். இவளுக்கு சாக்கா என்ற அண்ணனும் உண்டு. எனக்கு பெண்ணியவாதிகளை பிடிப்பதில்லை என்று சொன்னேன். கட்டாராவை பல இடங்களில் அப்படி தான் எனக்கு இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால். நில தேசத்து சில இளம் விடலை ஆண்களை மிரட்டுவது எனக்கு பிடிக்கவில்லை. அவதார் ஆங்கை அதிகமாக கொழைவது போல் பல இடங்களில் வரும் அதுவும் எனக்கு பிடிக்கவில்லை. மற்றபடி அவள் ஒரு அழகாக பெண். ஒரு சிறந்த காதாபாத்திரம் ஒரு சிலவை எனக்கு பிடிக்கவில்லை என்பதற்க்காக மொத்தமாக பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. அரம்பமே குறைகளை சொல்லுவது போல் அமைந்து விட்டது. இவள் மேல் அவதார் ஆங்கிற்க்கு ஒரு ஈர்ப்பு. பின் நாட்களில் அது காதலாக மலர்ந்து விடும். பலசாலியான நீர் பெண்டர். நீர் பெண்டிங் மூலம் மருத்துவம் செய்வாள். 
நீர் பெண்டிங் கலையை தென் துருவ நாட்டில் பெண்களுக்கு கற்றுகொடுப்பது இல்லை. அதை உடைத்தெறிந்தவள். அதற்காக மிகவும் பலசாலியான நீர் பெண்டிங் ஆசிரியரிடம் தனக்கு தெரிந்த சிலவற்றை கொண்டு நீர் பெண்டிங் சடையிடுவாள். ஆனால் அதில் அவள் போராடி தோற்றுவிடுவாள். போட்டில்தான் தோற்றாள் ஆனால் பெண்கள் பெண்டிங் கற்றுகொள்ள கூடாது என்ற சட்டத்தை உடைத்து வெற்றி கொள்வாள். குருதி பெண்டிங் செய்வதிலும் வல்லவள். இதை தானே கற்றுகொள்வாள். குழுவை நடத்தும் பொறுப்பு இவளிடமே இருந்தது. கட்டாராவுக்கும் டாஃப்க்கும் அடிக்கடி ஒத்துவராது. குழுவில் அப்பப்போ சில குட்டி ரகளை நடக்கும். விடுதலை போராளிகள் தலைவன் ஜெட் மீது கட்டாராவுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு பின்நாட்களில் அது மாறிவிட்டது. நெருப்பு தேசத்தின் தலைவன் மகன் ஜுக்கோவின் நெருப்பு காயத்தின் தழும்பினை தொட்ட ஒரே பெண் கட்டாரா மட்டும் தான். ஆங் கோவத்தில் அவதார் நிலைக்கு செல்லும் போது கட்டாராவே ஆங்கை சமாதானம் படுத்துவாள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கட்டாரா சொன்னா ஆங் மறுவார்த்தை பேச மாட்டான் அந்த அளவுக்கு கட்டாராவின் மீது ஆங்கிற்க்கு ஈர்ப்பு. 
நெருப்பு தேசத்தவர்களை கட்டாராவுக்கு பிடிக்காது. நெருப்பு தேசத்தவர்கள் அவளுடைய சின்ன வயதில் அவள் கிராமத்தை தாக்குவார்கள். அந்த தாக்குதலில் அவள் அம்மா இறந்துவிடுவாள். இந்த நிகழ்வு அவள் மனதை விட்டு போகவில்லை. தன் அம்மாவை கொன்றவனை பழிவாங்க அவள் என்னினாள். சூக்கோவின் உதவி கொண்டு அவள் அம்மாவை கொன்றவனை பழிவாங்க செல்வாள். ஆனால் கடைசி நேரத்தில் அவள் அவனை அவள் மன்னித்து விடுவாள். அதற்க்கு காரனம் ஆங் மற்றும் சாக்காவின் சில போதனைகள் தான். 
கட்டாராவை பற்றிய அறிமுகம் போதும் என நினைக்கிறேன். தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். 

எழுத்து : கிசோர் கவி

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*