கம்யூனிசமும் மூலதனமும்

கிசோர் கவி
0

 

கம்யூனிசமும் மூலதனமும் 

கம்யூனிசம் கதை 

ஒரு மரம் ஒன்று இருக்கிறது; அது பொது மரம். நான்கு நபர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் அந்த மரத்தில் விளையும் கனியை பங்கு வைத்து உண்ண வேண்டும். ஒரு நாள் நான்கு கனிகள் மரத்தில் இருந்து கீழே விழுந்தது. நான்கு நபர்களில் ஒருவன் மூலதனம் எண்ணம் கொண்டவன். அவன் மற்ற மூன்று நபர்கள் மரத்தின் பக்கம் வருவதற்க்கு முன்பாக வந்து தன்னுடைய பங்கு பழத்தை எடுத்து சாப்பிட்டு விட்டான். பின்பு மற்ற மூன்று பழங்களையும் எடுத்து. காலம் தாமதமாக வந்த மற்ற மூன்று நபர்களிடம் விற்றுவிட்டான். அந்த மூன்று நபர்கள் தாங்கள் வாங்கி உண்ட பழம் தங்களுடைய பங்கு பழம் என்று அறியாதிருந்தார்கள். முதலாம் நபர் அதை அவர்களிடம் சொல்லாமல் மறைத்து கொண்டான். 


மூலதனம் கதை 

ஒரு மரம் ஒன்று இருக்கிறது; அது பொது மரம். நான்கு நபர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் அந்த மரத்தில் விளையும் கனியை பங்கு வைத்து உண்ண வேண்டும். ஒரு நாள் நான்கு கனிகள் மரத்தில் இருந்து கீழே விழுந்தது. நான்கு நபர்களில் ஒருவன் மூலதனம் எண்ணம் கொண்டவன். அவன் தன்னுடைய பங்கை எடுத்து சாப்பிட்டுவிட்டான். அவனுக்கு மேலும் அதே போல் உண்ண வேண்டும் என்ற ஆசை வந்தது ஆனால் மற்ற மூன்று பழங்கள் தன்னுடையது அல்ல. யோசனை செய்தான். ஒரு யோசனை வந்தது. தான் சாப்பிட்ட பழத்தில் இருந்த விதையை மண்ணில் முளைக்க வைத்தான். தண்ணீர் ஊற்றி பராமரித்தான். காத்திருப்புக்கு பின் விதையானது முளைத்து செடியாகி மரமாகி கனி கொடுத்திருந்தது. அதில் அவனுக்கு தேவைக்கு போக அதிகமாகவே பழங்கள் இருந்தது. அதை அவன் விற்று மேலும் மேலும் செடிகள் வைத்து மேலும் மேலும் பணம் சம்பாதித்தான். 


எழுத்து : கிசோர் கவி 


இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் நேர் மற்றும் எதிர்மறையான எண்ணங்களை கருத்து பகுதியில் பதிவிடுங்கள். வாசித்தமைக்கு நன்றி. 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*