கவிதை எண் 11: பரந்த வானில் பள்ளி சாலை

கிசோர் கவி
0

 பரந்த வானில் பள்ளி சாலை அமைத்து,
பாடம் பயிலவரும் நட்சத்திர மணிகளை நிறைத்து,
பாடம் உரையாற்றும் ஆசிரியை
பவனிவரும் நிலவு.

கடலினும் பெரிது
கல்வியை கற்பது அரிதென
நட்சத்திர மழலை கூட்டம்
நாளும் கற்றது வானில்.

பருவகால மழைக்கு
மேகத்தின் அழைப்பு;
பள்ளி இறுதி ஆண்டு
விண்ணில் விடுப்பு.

கூடி பழகி சிறகடித்த நட்பு
திசைக்கு ஒன்றாக பிரிந்து
வருத்தமாய் மழையை கோபித்து
வானில் மறைந்தது நட்சத்திரங்கள்;

நட்பின் ஆழம்; ஆழ்கடலின் தூரம்
என்பதை உரைத்து.

 

கேசவன் கவிதைகள்

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*