காட்சில்லாவா காங்கா ? திரைவிமர்சனம். Godzilla vs Kong

கிசோர் கவி
1

 காட்சில்லாவா காங்கா ? 


அலுவலகத்தில் இருந்து அனைவரும் காட்சில்லா காங் திரைபடம் பார்ப்பதற்க்காக சென்றிருந்தோம். நான் திரைபடம் அவ்வளவாக பார்ப்பது கிடையாது. திரையரங்கு பக்கமே சென்றது கிடையாது. இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால் திரையரங்கிற்க்கு சென்று படம் பார்ப்பது இது இரண்டாவது முறை. அலுவலகத்தில் இருந்து எல்லாரும் செல்வதால் ஒன்றுகூடுதல்காக செல்வது நல்லது என்பதற்காக சென்றேன். 





இனி, தனிபட்ட முறையில் திரைபடம் எனக்கு எப்படி இருந்தது என்பதை எழுதுகிறேன். 


சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இரண்டு போராளிகள் சண்டையிட்டு கொள்கின்றனர். பிற்பாடு அந்த போராளிகள் தங்களின் பொதுவான எதிரியை கண்டு கொள்கின்றனர். அப்போது தான் தெரிகின்றது அந்த பொதுவான எதிரியின் காரணமாக தான் இந்த இரண்டு போராளிகளும் சண்டையிட்டு கொண்டனர். இரண்டில் ஒன்று இறந்துவிடும் என்று நினைத்தேன். குறிப்பாக காட்சில்லா இறந்து போவது போல் கதை இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. அல்லது சண்ட போட்டு களைத்து போய் வேறு எதாவது கதையாக இருக்கும் என்று நினைத்தேன். அப்படியும் இல்லை. சாதாரனமான ஒரு பொதுவான கதை அதை இயற்க்கையோடு இசைந்து உருவாக்கியது அருமை. One will Fall னு துனை தலைப்பு போட்டு இருந்தார்கள் ஆனால் படத்தில் நாம ஏன் தேவையில்லாம சண்டை போட வேண்டும் என்று முடிந்துவிட்டது.


படம் பார்ப்பதற்க்கு முன்பு திரைவிமர்சனம் பார்த்தேன். அவர்கள் விமர்சனம் செய்த மாதிரி ஒன்றும் படம் இருக்கவில்லை. அவர்கள் விமர்சனமும் என் ரசனையும் நான் படம் பார்த்து புரிந்து கொண்டதும் ஒன்றாக பொருந்தவில்லை. அதிலும் ஒருவர் கதையே இல்லை என்று விமர்சனம் செய்தார். அதை ஏற்று கொள்ள முடியாது தேவையான அளவு கதை இருந்தது. 


எதிர்ஈர்ப்புவிசை உலகம் அருப்புதமாக இருந்தது. அந்த உலகத்தோடு புர்விக தொடர்ப்பு இருந்தது போல் உணர்வை ஏற்படுத்தியது. எதிர்ஈர்ப்புவிசை உலகத்தை அருமையாக படைத்துள்ளனர். அதில் தலைகீழாக இருந்த மலைகள் வரும் காட்சி தனிபட்ட முறையில் எனக்கு நன்றாக இருந்தது. அதையே குறிப்பிட்டு கூர்ந்து பார்த்து படைப்பாக்கத்தை ரசித்தேன். 

திரையரங்கில் நான். 

திரைபடம் பார்க்க வேண்டும் என்பதற்க்காக தான் கட்டணம் எடுத்து உள்ளே வருகிறார்கள். பின்பு ஏன் உள்ளே திரைபடம் ஒடி கொண்டு இருக்கும் போது திறன் பேசியில் முகநூல், பகிரி போன்றவற்றை பார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை படம் ஆரம்பித்த நேரத்தில் இருந்து முடியும் வரை ஒருத்தன் முகபுத்தகத்தை தான் பார்த்து கொண்டு இருந்தான்.


பெண்களில் அநேகம் பேருக்கு விசில் அடிக்க தெரிந்திருக்கிறது. அவர்களுக்கு விசில் அடிக்க தெரியும் என்பது எனக்கு தெரிந்து இருந்தாலும். எனக்கு விசில் அடிக்க தெரியாது. அவர்கள் தங்களின் உணர்ச்சிகளை ஏதாவது ஒரு வகையில் வெளிபடுத்தினார்கள். விசில் அடிப்பது, சத்தமாக கத்துவது, ஊளைவிடுவது என்று எதோ ஒரு வகையில் வெளிபடுத்தினார்கள். நான் என் உணர்ச்சிகளை மனதிற்க்குள் சத்தமாக வெளிபடுத்தினாலும். வெளிபுறத்தில் இடித்து வைத்த புளி, இஞ்சி தின்ற குரங்கு மாதிரி தான் இருந்தேன். 


உணவு பொருளை பொருத்தவரை எடுத்த முடிவில் தெளிவாக இருப்பேன். வேண்டாம் என்றால் வேண்டாம். காசை மிச்சம் பிடிப்பதில் சமரசம் செய்ய போவதே கிடையாது. கஞ்சன் என்று நினைக்க வேண்டாம் என் செலவினம் எதிர்ஈர்ப்புவிசை உலகத்தை போன்றது. படத்தின் இடைவெளி நேரத்தில் அரங்கத்திற்குள் சோளபொரியை கீழே சிதரவிட்டு பல்பு வாங்கியது நினைவு அலமாரிக்கு புதிய வரவு. பல்பு வாங்குவது என்ன புதுசா!. 


எழுத்து: கிசோர் கவி 
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் நேர் எதிர் கருத்துகளை கருத்து பெட்டியில் பதிவிடுங்கள். நன்றி 

Post a Comment

1Comments

Please Select Embedded Mode To show the Comment System.*