2021ம் ஆண்டு தேர்தல் திருவிழா ஒரு பார்வை.

கிசோர் கவி
0

2021 தேர்தல் திருவிழா ஒரு பார்வை.

தலைப்பை பார்த்தவுடன் பத்திரிக்கையில் வரும் கட்டுரைகளை போல் எண்ணிவிட வேண்டாம். நான் எந்த ஒரு கட்சியிலும் இல்லை. அதற்காக நான் நடுநிலைவாதி என்றும் நினைக்க வேண்டாம். வீட்டினைவிட்டே வெளியே போவது கிடையாது.  யார்யாருக்கு ஓட்டு போட்டால் நன்றாக இருக்கும் என்ற தேவையான அளவு அரசியியல் அறிவோடு மட்டும் இருக்கிறேன். அது விருப்பு வெருப்புகளுடன் இனைந்தே அந்த அறிவு உள்ளது. அதே விருப்பு வெருப்புடன் இந்த ஆக்கத்தை எழுதுகிறேன். இக்கட்டுரையை எனக்கு என்னை சூழ்ந்து நடந்ததை மட்டும் நினைவில் வைத்து எழுதுகிறேன். 


இந்த வருடம் ஏப்ரல் ஆறாம் தேதி தமிழ் நாட்டுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறபோகிறது என்று தேர்தல் ஆனையம் அறிவிப்பை வெளியிட்டது. பின்பு ஒவ்வொரு கட்சியில் இருந்தும் வேட்பாளர்களை அறிவித்தார்கள். இதில் நாம் தமிழர் கட்சி காரர்கள் தான் முதன் முதலில் வேட்பாளர்களை அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்த கொஞ்ச நாட்களிலேயே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எனது ஊருக்கு பிரட்சாரத்திற்க்கு வந்திருந்தார். எங்கள் ஊருக்கு பிரட்சாரத்திற்க்கு வந்த முதல் வேட்பாளர் நாம் தமிழர் வேட்பாளர் தான். இரண்டாவதாக சாதி கட்சியான பனங்காட்டு படை வேட்பாளர். அப்பரம் திமுக, ஆதிமுக. 

வாக்கு சேகரிப்பு 

வாக்கு சேகரிப்பை பொருத்தவரை பனங்காட்டு படைதான் தீவிரமாக எனது ஊரில் வாக்கு சேகரித்தார். தனிபட்ட முறையில் எனக்கு அந்த கட்சியும் அதின் வேட்பாளரும் விரும்பதக்கவர்கள் கிடையாது. முதல் முறையாக வாக்கு சேகரிக்க வந்த போது அவர் ஆற்றிய உரை என் நினைவில் இருக்கிறது. அது "நான் ஆலங்குளம் தொகுதியில் உள்ள எனது சாதி மக்களிடம் மட்டும் தான் ஒட்டு கேட்பேன் மற்றவர் ஒட்டு எனக்கு தேவையில்லை " என்று கூறி கொஞ்சம் சாதி பற்றை ஊற்றிவிட்டு போனார். அப்பரம், ஏக்கர் கணக்காக இல்லை என்றாலும் சுமாராக பொய்களையும் அவிழ்த்துவிட்டு சென்றார். அவர்களின் ஆதரவாளர்கள் பெரும்பாலானவர்கள் பனங்காட்டு படைக்கு ஒட்டு போடுபவன் தான் நம்ம சாதி மற்றவன் எல்லாம் ஏவனோ. என்ற தோறனையிலே வளம் வந்தார்கள். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், எனது தம்பி ஒருவன் வீட்டில் இருக்கும் போது அவனிடம் ஒட்டு கேட்டு உள்ளனர். அவன் நான் மாற்று கட்சில் இருக்கேன் அதனால் தாங்களுக்கு வாக்கு போட முடியாது என்று கூறியுள்ளார். அதனை பொருத்து கொள்ள முடியாத அவன் 'நீ  அந்த சாதி காரன்டா ' என்று திட்டிவிட்டு சென்று உள்ளார். இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் தான். அந்த அளவுக்கு சாதியில் ஊறி போய் இருக்கிறார்கள் வருங்கால சந்ததி. இப்படி தான் அவர்கள் பிரட்சாரம் இருந்தது. தினமும் அவர்களின் பிரட்சாரவண்டி ஒரு முனையாவது எங்கள் சின்னத்திற்க்கு வாக்களியுங்கள் என்று கூவிவிட்டு செல்லும். இந்த சத்தத்தை பொறுக்க முடியாமல் காதை பொத்தி கொண்டு வீட்டுக்குள் கிடப்பேன். இரவு கூட சும்மா இருக்கல. எனது வீட்டுக்கு வாக்கு சேகரிக்க வரும் போது கதவு சன்னல் எல்லாவற்றையும் அடைத்து கொண்டு எனது அறைக்குள்ளேயே இருந்துவிட்டேன். அவர்களை பார்க்க கூட நான் விரும்பவில்லை. இதுல எனக்கு பெரிய கடுப்பு என்னவென்றால்; தேர்தல் வருகிறதிற்க்கு முன்பு வாட்ச்ஆப்ல நட்புக்கு சாதி மதம் கிடையாதுனு சேட்டசு (status) போட்டவன் எல்லாம் இன்னைக்கு இவனுக்கு வாக்கு கேட்டு சேட்டசு போட்டான் பாருங்க. முடியல!. 


இரண்டாவது நாம் தமிழர் கட்சி. இவர்களுக்கு எங்கள் ஊரில் ஆட்கள் இல்லை. அவர்களின் எங்கள் ஊர் பிரதிநிதி ஒட்டு கேட்டு வீட்டுக்கு வரவில்லை. பொது இடத்தில் மக்கள் பார்க்கும் படி சுவரோட்டிகள் மட்டும் இருந்தது. வேட்பாளர் இரண்டு முறை ஊருக்கு வந்து வாக்கு சேகரித்தார். சீமான் என்ன கொள்கையை விதி விதியா கத்திகொண்டு இருந்தாரோ அதை தான் எங்கள் ஊரிலும் அந்த அம்மையார் சொல்லி வாக்கு சேகரித்தார். இவர்களையும் வீட்டைவிட்டு வெளியே போய் பார்க்கவில்லை. ஆனால் பனங்காட்டு கட்சி மேல் இருக்கும் வெறுப்பு இவர்களிடம் இருக்கவில்லை. 


திமுக, ஆதிமுக வேட்பாளர்கள் வந்த போதும் வெளியே சென்று பார்க்கவில்லை. மேற்கண்ட இரண்டு பேரிடம் இருந்த நெருப்பு இவர்களிடம் இல்லை. எப்படியும் நம்ம ஆட்கள் நமக்கு தான் போடுவார்கள் என்று இருந்துவிட்டார்களா என்னவோ. ஆனால் பத்து வருடத்திற்க்கு முன்பு இப்படி இருக்கவில்லை. இதில் திமுகவினர் எனது வீட்டுக்கு வாக்கு சேகரிக்க வந்தார்கள். அப்பொழுது நான் கால்சட்டை மட்டும் தான் உடுத்தியிருந்தேன். அதனால் எனது கட்டுகோப்பாக உடலை யாரும் பார்த்துவிட கூடாது என்பதற்காக அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த போதும் எனது அறையை வீட்டு வெளியே வரவில்லை. 

பிரட்சார கூத்து. 

இதை கண்டிப்பா எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏன் என்றால் கட்சியின் தலைவர்கள் பிரட்சாரம் செய்கிறேன் என்ற பெயரில் கடுப்பேத்தி கொண்டு இருந்தார்கள். 

ஆலங்குளத்திற்க்கு எடப்பாடி. பழனிச்சாமி ஐயா, திருமதி. ராதிகா, திருவாளர் மு. க. சுடாலின், திருவாளர் டி. டி. வி தினகரன் ஆகியோர் வாக்கு சேகரிக்க வந்தார்கள்.


இவர்களில் வாக்கு கேட்டு வந்தவர்கள் பொது வழில் நின்று தான் பேச வேண்டுமா. அதுவும் நடு ரோட்ல நின்று கொண்டு. அவர்கள் பேசி முடித்து அவர்கள் வண்டி போகும் வரைக்கும் விரும்பம் இருக்கோ இல்லையோ அங்க தான் நிற்க்க வேண்டிய சூழல் மக்களுக்கு ஏற்படுகிறது. இதில் ராதிகா பரவாயில்லை அரை மணி நேரம் மட்டும் தான் ரோடு அடைபட்டு கிடந்தது. ஐயா மு. க. சுடாலின் வந்த போது தான் கடுப்பேத்தி விட்டாங்க. இரண்டு மணி நேரத்திற்க்கும் மேல் அந்த வழியில் ஒரு வண்டி போக முடியலை. அரசு பேருந்து பயனிபளுடன் நடுரோட்டில் அவர் பேசி முடிக்கும் வரை நின்று கொண்டு இருத்தது. உங்களுக்கு கூட்டம் வேனும் என்பதற்காக நாங்கள் தான் பலிகிடாவா. கூட்டம் போடுங்க வேண்டானு சொல்லவில்லை பொதுமக்களை ஏன் அடைத்து போடனும் அவன்னவனுக்கு என்ன என்ன அவசரமான வேலைகள் இருந்திருக்கும்; அத கொஞ்சமாவது யோசிக்காங்களா. நடு ரோட்டில தான் நிற்பிங்களா. ஒரமாய் நின்று பிரட்சாரம் செய்யமாட்டிங்களா. எடப்பாடியார் வந்திருந்த போது வாகன நெரிசல் காரணமாக வழியை அடைத்து விட்டார்கள். சந்தைக்கு போக வேண்டிய வண்டியை எல்லாம் போக வழி இல்லாமல் திணறியது. அந்த நேரம் விவசாய உற்பத்தி பொருட்கள் கொண்டு செல்லும் நேரம். சந்தைக்கு மூன்று மணிக்குள்ளாக காய்கறிகளை கொண்டு போக வேண்டும். இப்படி பன்னா எப்படி சரியான நேரத்திற்க்குள் காய்கறிகள் சந்தைக்கு போகும்? எடப்பாடியார் ஐயாவை கொஞ்சம் பாராட்டலாம். ஏன் என்றால் மற்றவர்கள் மாதிரி நடுரோட்டை வழி மறைத்து வாக்கு சேகரிக்கவில்லை. வாகனங்கள் போகமுடியாமல் அடைபட்ட இடம், தலைவர்கள் நடுரோட்டை அடைத்து வாக்கு சேகரித்த இடமானது திருநெல்வேலி தென்காசி முக்கிய வழி பாதை. 

பழைய புதிய நிகழ்வுகள். 


நான் பத்து வருடத்திற்க்கு முன்பு பார்த்த தேர்தல் திருவிழா போன்று தற்போது இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தல் போல் கூட தற்போது இல்லை. தற்போது தேர்தல் திருவிழாவானது இனையம் பக்கம் சென்றுவிட்டது என்று நினைக்கிறேன். அங்க தான் ஒருவருக்கு ஒருவர் கருத்து மோதல்களிலும் வாக்கு கேட்பதிலும் நெருப்பாக இருக்கிறார்கள். கட்சிகளும் சமூக வலைதளத்திற்க்கு காசுகளை தண்ணீராக செலவழித்து இனையத்தில் வாக்குகளை சேகரித்து வருக்கிறார்கள். 


வலையொலியில் (YouTube ல் ) கட்சிக்கு கட்சி தங்களுக்கென்று பாடல்கள் தயாரித்து, குறுபடம் தயாரித்து. இனையத்தில் விளம்பரங்களாக அள்ளிவிடுகிறார்கள். என்னை பொறுத்தவரை திமுக, ஆதிமுக, நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சிகள் தான் இனையத்தை சூடாக்கி கொண்டு இருக்கின்றனர். 


பத்து வருடங்களுக்கு முன்பு இப்படி இருக்கவில்லை. சுவர்களில் சின்னம் வீட்டு முன்பு கொடு. கட்சி கொடுயில் ஊர் எங்கும் தோரணமாக இருக்கும் திருவிழா போன்றே இருக்கும். தற்பொழுது உள்ளது எனக்கு உப்பு இல்லா பண்டம் மாதிரி உள்ளது. 


எது எப்படி இருந்தால் என்ன. ஆறாம் தேதி மாலையோடு திருவிழா நிறைவு பெற்றது. இனி ஒட்டு எண்ணிக்கை தான் மீதி இருக்கு. அதற்க்கு ஒரு மாதம் காத்து கிடக்க வேண்டும். 


எழுத்து: கிசோர் கவி

இந்த ஆக்கம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் நேர் மற்றும் எதிர்மறையான எண்ணங்களை கருத்து பெட்டியில் பதிவிடுங்கள். வாசித்தமைக்கு நன்றி.

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*