கவிதை எண் 16: எத்தனை சுதந்திரமானவைகள்

கிசோர் கவி
0

வெள்ளை மேகங்களை
வெறுங்கையால் பிளந்தேன்...!

வீட்டு முற்றத்தின் நிலத்தடியில்
விலை மதிப்பில்லா புதையல் எடுத்தேன்...!

தொலைபேசியில் கோபமுட்டியவனை
தொலைவில் இருந்தே அடித்தேன்...!

இன்று கண்ட அழகி ஒருத்தியை
இரவில் ஒருமுறை முத்தமிட்டேன்...!

இரு நிமிட நேரத்தில்
இருபது தேசங்கள் பறந்தேன்...!

சச்சினின் சாதனைகளனைத்தையும்
சத்தமில்லாமல் உடைத்தேன்...!

தவறுகளுக்கு இங்கு
தண்டனைகளில்லை..!
கைகட்டி நிற்கும்
கட்டுப்பாடுகளில்லை...!

எத்தனை சுதந்திரமானவைகள்..!
எல்லாவற்றையும் சாத்தியமாக்கும்
என் கற்பனைகள்...

 

கேசவன் கவிதைகள்

 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*