கவிதை எண் 15: செவிலியர் தினம்

கிசோர் கவி
0

பிணி காலத்திலும்;
பணியென்று பாராமல்;
நலம் விசாரித்து!
மனச்சுமையை போக்கி!
காயம்பட்டோரை-
கண்மணியாய் காத்து!

ஆறுதல் மொழி பேசி;
அன்பை மருந்தில் கலந்து!
தளர்ந்த மனதை -
தாயுள்ளத்தோடு வருடி;
தன்னலமற்ற சேவையில்
தனக்குநிகர் உண்டோ? என -

செய்யும் தொழிலையும்
சேவையாய் செய்கின்ற;
நீங்கள் தானே
மனிதரில்
புனிதர்!

 கேசவன் கவிதைகள்

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*