ஐயா காமராசர்க்கு மட்டும் விழா எடுங்கள்.

கிசோர் கவி
0

சூலை 15, பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்த நாள். தமிழ் நாடு முழுவதும் அவருடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அவருடைய பெயரை பெருமைபடுத்தவும் அடுத்த தலைமுறைக்கு அவரை தொடர்ந்து கொண்டுசெல்லவும் இந்த நல்ல நாளில் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்திகொண்டு இருக்கிறார்கள். இது அற்புதமானது.

ஆனால் ஐயாவை பெருமைபடுத்த போகிறோம் என்ற பெயரில் சில கும்பல் கூட்டம் செய்கிற நிகழ்வை பார்த்தால். அவர்கள் அப்படியொரு கொண்டாட்ட நிகழ்வை நடத்தாமல் இருப்பதே நல்லது என்று சொல்லும்படி உள்ளது. 


ஐயாவை பெருமைபடுத்த ஐயாவின் பெயரில் பாயாசம் வழங்கும் கொண்டாட்ட நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்துயிருக்கிறார்கள். பாயாசம் தயாராகும் வரை பெருந்தலைவர் ஐயாவை பற்றிய பாடல்களை ஒலிபெருக்கியில் பாடவைத்தார்கள். இது நன்றாக இருந்தது. முதல் பாட்டாக மலர்களின் நடுவில் ஒரு ரோஜா என்ற பாடல் ஒலித்தது. உடனே எனக்கு பள்ளிகூடம் நியாபகம் தான் வந்தது. அப்போது பள்ளிகூடத்தில் ஐயாவின் பிறந்த நாள் தோறும் அந்த பாட்டுதான் போடுவார்கள்.


இரண்டாவதும் ஒரு ஐயாவை பற்றி அருமையான பாடல். அதற்க்கு பின்பு வந்த ஒரு பாட்டு கூட ஐயாவை பற்றிய பாடல்கள் இல்லை. எல்லா பாடல்களும் சாதிய தலைவர்களின் பாடல்களும் சாதிய பெருமை பாடல்களும் தான் ஒலித்தது. அப்பரம் அவர்களின் சுவர்படங்களில் ஒன்றில் கூட காமராசரின் படத்தின் பின்னால் அவர் அங்கம் வைத்த காங்கிரசு கொடியோ, அவர் கடைசி காலங்களில் சின்டிகேட் காங்கிரசு என்ற அமைப்பை தொடங்கி அதற்கு தலைமைதாங்கின அந்த கட்சி கொடி கூட அவருக்கு இங்கே இல்லை. நேற்று முலைத்த காளான் சாதிய கட்சி கொடி தான் பறக்கு. ஐயா எப்போதையா உங்க சாதி கட்சில அங்கத்துவம் ஆனாரு. அவருடைய சட்டைபையில் கூட உங்கள் சாதி கட்சி பேட்ஜ்லாம் ஒட்டிவிட்டதலாம் என்ன சொல்ல!. 


காமராசர் ஐயாவுக்கு விழா எடுத்திங்கனா. ஐயாவுக்கு மட்டும் எடுங்கடா. அதிலேயும் ஒரு கூட்டம் சாதிய பெருமை பாட்டு ஒலிக்கும் போது விசில் அடித்து ஆடுதாங்க. யல நீங்கள் காமராசர் ஐயாவுக்கு விழா எடுக்கிங்கலா இல்ல சாதிக்கு விழா எடுக்கிங்கலா?. சாதிக்கு விழா எடுக்கனும் என்று தோன்றிச்சினா 365 நாள்ல வேறு நாளே இல்லை. காமராசர் பிறந்த நாள் தான் கிடைத்ததா. 


கடைசியா, ஏதோ அறியாமையில் செய்துவிட்டிற்கள் என்று நினைத்து கொள்கிறேன். அறிவில்லாமல் செய்தது என்று வருங்கால தலைமுறை சொல்லாதபடி பார்த்துகொள்ளுங்கள். 


எழுத்து : கிசோர் கவி

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*