நண்பன் மூலம் அறிந்து கொண்ட புத்தகம்; சில நேரங்களில் சில மனிதர்கள்

கிசோர் கவி
0



கல்லூரியில் படிக்கும் நாட்களில் தான் முதன் முதலாக நண்பன் மூலமாக ஜெயகாந்தன் அவர்களை பற்றி அறிந்துகொண்டேன். எழுத்துலகில் தனக்கென்று தனி முத்திரையை பதித்தவர். ஒரு தொலைகாட்சி பேட்டியில் நீங்கள் ஏன் இடைபட்ட காலத்தில் எழுதவில்லை என்று ஜெயகாந்தனிடம் கேள்வி கேட்கபட்டது, அதற்கு அவர் எழுதவேண்டும் என்று தோன்றவில்லை; அதனால் எழுதவில்லை. இப்போ எழுதவேண்டும் என்று தோன்றியது; எழுதுகிறேன். என்று பதில் கொடுத்தார். அவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இதை வாசிக்கிற நீங்களும் அவருடைய எழுத்துக்களை படியுள்கள். 

ஜெயகாந்தன், என் நண்பனுக்கு விருப்பமான ஆசிரியர்களில் முதன்மை இடத்தில் இருக்கிறார். இந்த புத்தகத்தையும் நண்பன் தான் அறிமுகம் செய்தான். ஜெயகாந்தன் அறிமுகம் கிடைத்தவுடன் அவருடைய சிறு கதைகளை படித்துவிட்டு கொஞ்சம் போதையாகிபோய் தான் இருந்தேன். அதன் பின்பு தான் உணர்வு பூர்வமாக நண்பனுக்கு ஏன் ஜெயகாந்தனை இவ்வளவு விருப்பமானவராக மாறிபோனார் என்பது தெரிந்தது. ஜெயகாந்தனுடைய சிறுகதைகளை கணினி மற்றும் திறன்பேசி வழியாக படித்தேன். தற்போது அவருடைய புத்தகம் ஒன்றினை காகித பக்கங்களில் வாங்கியிருக்கிறேன். இந்த புத்தகத்தை பற்றி நண்பன் கூறும் போது, படிச்சி பாரு உனக்கே தெரியும் என்று சொல்லிவிட்டான். 


புத்தக கடைக்கு போய் புத்தகத்தை வாங்க சோம்பரைபட்டு இனையத்தில் வாங்கினேன். அது ஒரு வாரம் கழித்து என் கைக்கு கிடைத்துள்ளது. இந்த ஒரு வாரமும் 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' கதையாகி போச்சி. 


எழுத்து : கிசோர் கவி

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*